இதுல
ஒரு போங்கும் கெடயாது!
உண்மையில
அறை குறை 'ஞானத்தோட'
பல ப்ராம்ஹணர்கள்
இப்படி ஏன் செய்யக்கூடாதுன்னு
யோசிச்சு அனர்த்தமா ஏதாவது
செய்யறதுண்டு. ஆனா
மற்றவர்கள் பல பேர் சரியாவே
செய்து கொண்டு இருப்பாங்க.
அவங்களுக்கு
ட்ரெடிஷன்தான் முக்கியம்.
சாஸ்திரம்
தெரியாது. இல்லைங்க,
எங்க குடும்பத்துல
இப்படித்தான் செய்வாங்க ன்னு
சொல்லுவாங்க. அந்த
ட்ரெடிஷன் சாஸ்திர அடிப்படையிலேயே
இருந்திருக்கும். அதனால
அவங்க செய்யறது சரியாவே
இருக்கும். ஆனா
இந்த நவீன கால மஹரிஷிகள்
முழுக்க ஆராயாம எதையாவது
செஞ்சு வைப்பாங்க.
புராணங்களிலத்தான்
பல வித விரதங்களும் சொல்லப்பட்டு
இருக்கு. இருக்கறதிலேயே
ஸ்காந்த புராணத்திலதான்
இப்படி பல கதைகளும் விரதங்களும்
சொல்லப்பட்டு இருக்குன்னு
நினைக்கிறேன். ராமாயணம்
மஹா பாரதத்திலேந்தும் சில்து
வரது உண்டு. ஏதேனும்
ஒரு கதையை சொல்லி இவர்கள்
இப்படிப்பட்ட விரதத்தை செய்து
பலனடைஞ்சாங்கன்னு சொல்லி
இருப்பாங்க. அதிலேயும்
ப்ரொசீஜர் சுருக்கமாத்தான்
சொல்லி இருக்கும். அதை
விரிச்சது அவங்கவங்க குடும்பத்து
பெரியவர்கள்தான்.
எல்லாரும்
தசரதருக்கு பசங்க பொறந்தாங்க.
விஸ்வாமித்ரர்
கூப்பிட்டுண்டு போனார்.
சீதையை ராமர்
கல்யாணம் பண்ணிண்டார் என்கிற
ரீதியிலதான் கதை தெரியுமே
தவிர மூலத்தை யாரும் படிக்கறது
கிடையாது. அப்படி
படிச்சாத்தான் பல விஷயங்களும்
தெரிய வரும். இவற்றை
எல்லாம் எழுதி வெச்ச நோக்கமும்
பூர்த்தியாகும்.
எப்படி
இருந்தாலும் பக்தி சிரத்தையோட
விரதங்களையும் பூஜைகளையும்
செஞ்சா பலன் நிச்சயம் கிடைக்கும்……
நம்ம கர்மா அலவ் பண்ணித்துன்னா!
தெய்வத்தால்
ஆகாதெனினும்……
No comments:
Post a Comment