Pages

Thursday, August 24, 2017

வேதம் - 4




காற்று தென்னை ஓலைகள் நடுவே புகுந்து புறப்படுகிறது; மூங்கிலின் துளைகளின் வழியே புகுந்து புறப்படுகிறது. அப்போது எழுவதெல்லாம் ஓசை. ஒரு மரக்கிளை முறிந்து விழுகிறது. அப்போது எழுவது ஓசை
 
கோழி கூவுகிறது. நாய் குலைக்கிறது, சிங்கம் கர்ஜிக்கிறது . இது போல உயிரினங்களால் எழுப்பப்படுவது ஒலி. உயிரினங்களில திறம் சேர்ந்தவன் மனிதன். அவன் தன் சூழ்நிலை, தட்ப வெப்பத்துக்கு ஏற்றபடியும் தாளத்தை ஒட்டியும் பேசி வந்தவை மொழிகள். அவற்றில் செம்மையான மொழி உண்டு, நம் மொழி, செம்மொழி என்றெல்லாம் கொண்டாடுவார்கள். ஆனால் வாய்மொழி என்பது ஒரு வகை மொழியே அல்ல. அதை இப்போது இருக்கின்ற இண்டோ ஈரோபியன், இண்டோ இரானியன் என்றெல்லாம் மொழி வல்லுனர்கள் வகைப்படுத்துவது போல வகைப்படுத்த முடியாது., ஏன்னா அது உணர்வியல் வெளிப்பாடு, மற்றதெல்லாம் மொழியியல் வெளிப்பாடு.

அடுத்ததா இந்த ஒலிகளிலே வேதத்தின் தனித்தன்மையை பார்க்கலாம்.
காடுகளில சில ஒலிகளை எழுப்பினா மிருகங்கள் எல்லாம் பயந்து
ஓடுகிறதை பார்க்கிறோம். ஒலிகளால சிலர் ஈர்க்கப்படுவார்கள். ஒலிக்கு உணர்வுகளை தூண்டக்கூடிய வலிமை இருக்கிறது
 
ஒரு அறிஞர் photosynthesis போல phonosynthesis ஒளிச்சேர்க்கை போல ஒலிசேர்க்கை இருக்கிறதாக ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்தார். காட்டிலே நிறைய மரங்கள் இருக்கின்றனவே. அவை சாதாரணமா ஒரு இடத்திலே வளருகிற மரத்தைவிட இன்னும் செழுமையா இருக்க காரணம் அங்க இருக்கிற மண் வளம் தட்ப வெப்பம் மட்டும் இல்லை. அங்கே இருக்கிற பறவைகள் வண்டினங்களின் ஒலிகளை கேட்டு கேட்டே அவை சந்தோஷப்பட்டு வளமையா இருக்காம். இதுக்கு அவருக்கு டாக்டர் பட்டமும் கிடைச்சிருக்கு.. இவற்றுக்கே அவ்வளவு வலிமை இருக்கும்ன்னா நான்மறை கேள்விக்கு இன்னும் சிறந்த தன்மை இருக்காதா
 
ஒருத்தர் ஒரு கிணத்துக்குள்ள விழுந்துட்டார். , ஐயோ ன்னு கூவறார். அது கருணையும் சிரத்தையும் இருக்கற உதவக்கூடிய யார் காதிலேயும் விழுந்தா அவங்க ஒடி வந்து உதவுவாங்க. ஒரு கூக்குரலுக்கு ஒருவரை வரச்செய்யும் தன்மை இருக்கு. ஒலியால அச்சம் வருவதும் நமக்குத்தெரியும். அதே போல ஒரு அரசன் கட்டளை போடுகிறான். அதுக்கு கீழ்படுகிறோம். ஒரு கட்டளைக்கு கீழ்படிய காரணம் அன்பா இருக்கலாம்; பயமா இருக்கலாம்; அல்லது கனிவால, இரக்கத்தால இருக்கலாம். இதெல்லாம் லௌகீக சப்தங்கள். அதாவது உலகத்தில் சாதாரணமாக வழங்கி வருகிறவை. நாம் நம் புலன்களாலேயோ அல்லது ஏதோ உபகரணங்கள் உதவியுடனோ செய்யக்கூடியவை லௌகீகம்.

வேதம் அலௌகீகம், அதாவது உலகத்தில காண முடியாதது. நம்மால் இதை செய்ய முடியாது. கூட்டாக சேர்ந்தாலும் முடியாது. எதேனும் கருவியை கொண்டும் செய்ய முடியாது. இனி வர போகிற கருவிகளைக்கொண்டும் செய்ய முடியாது. இந்த ஒலிகளைத்தான் மந்திரம் என்கிறோம்.

No comments: