Pages

Thursday, August 10, 2017

மனீஷா பஞ்சகம் - 4








ब्रह्मैवाहमिदं जगच्च सकलं चिन्मात्रविस्तारितं
सर्वं चैतदविद्यया त्रिगुणयाऽशेषं मया कल्पितम् ।
इत्थं यस्य दृढा मतिः सुखतरे नित्ये परे निर्मले
चाण्डालोऽस्तु स तु द्विजोऽस्तु गुरुरित्येषा मनीषा मम ॥ २ ॥

ப்³ரஹ்மைவாஹமித³ம்ʼ ஜக³ச்ச ஸகலம்ʼ சின்மாத்ரவிஸ்தாரிதம்ʼ
ஸர்வம்ʼ சைதத³வித்³யயா த்ரிகு³ணயா(அ)ஸே²ஷம்ʼ மயா கல்பிதம் |
இத்த²ம்ʼ யஸ்ய த்³ருʼடா மதி: ஸுக²தரே நித்யே பரே நிர்மலே
சாண்டா³லோ(அ)ஸ்து ஸ து த்³விஜோ(அ)ஸ்து கு³ருரித்யேஷா மனீஷா மம ||  2 ||

நான் பரம்பொருளே. மேலும் இந்த முழு உலகமும் சுத்த சைதன்யத்தின்
வெளிப்பாடே. இந்த உலகமும் (இதைக் குறித்த இப்படிப்பட்ட எண்ணங்களும்)
சிறிதும் மிச்சமின்றி (ஸத்த்வம், ரஜஸ், தமஸ் ஆகிய) முக்குணங்களுடைய
அஞ்ஞானத்தினால் (மாயையினால்) (பரம்பொருளான) என்மீது கல்பிக்கப்பட்டது
(
கயிற்றில் பாம்புபோல், அன்றியும் உண்மையானதல்ல).” என்ற எண்ணத்துடன் (உலக ஸுகங்களுக்கு) அப்பாற்பட்டதான ஸுக (ஸ்வரூபமானதும்) அழிவற்றதும்
(
அனைத்திலும்) உயர்ந்ததும் மாசற்றதுமான (உண்மையில்) யாரது புத்தியானது
திடமாக (ஒடுங்கி)யுள்ளதோ, அப்படிப்பட்டவர் சண்டாளராகட்டும், அல்லது
ப்ராஹ்மணராகட்டும், அவர் குருவாக (மதிக்கத்தக்கவர்) என்பது எனது தீர்மானம்.

No comments: