Pages

Friday, August 11, 2017

மனீஷா பஞ்சகம் - 5









शश्वन्नश्वरमेव विश्वमखिलं निश्चित्य वाचा गुरो-
र्नित्यं ब्रह्म निरन्तरं विमृशता निर्व्याजशान्तात्मना ।
भूतं भावि च दुष्कृतं प्रदहता संविन्मये पावके
प्रारब्धाय समर्पितं स्ववपुरित्येषा मनीषा मम ॥ ३ ॥

²ஸ்²வன்னஸ்²வரமேவ விஸ்²வமகி²லம்ʼ நிஸ்²சித்ய வாசா கு³ரோ-
ர்னித்யம்ʼ ப்³ரஹ்ம நிரந்தரம்ʼ விம்ருʼ²தா நிர்வ்யாஜஸா²ந்தாத்மனா |
பூதம்ʼ பாவி ச து³ஷ்க்ருʼதம்ʼ ப்ரத³ஹதா ஸம்ʼவின்மயே பாவகே
ப்ராரப்³தாய ஸமர்பிதம்ʼ ஸ்வவபுரித்யேஷா மனீஷா மம ||  3 ||
 

 (வெளியில் காணப்படும்) இந்த உலகம் முழுதும் என்றும் அழிந்துகொண்டிருப்பது
என்ற தீர்மானத்தில் (குருவை அடைந்து) அவரது வாக்கினால் அழிவற்றதான
பரம்பொருளை (அறிந்து) அதனையே எப்பொழுதும் தொட்டுக் கொண்டிருப்பவரும், (வேறுபாடற்ற நிலையில் கோப தாபங்களுக்கான காரணம் இல்லாததால்) இயற்கையாகவே சாந்தமான ஸ்வரூபம் உடையவருமான (ஞானியானவர்), ஏற்கெனவே சம்பாதித்து வைத்திருப்பதும் இனி சம்பாதிக்கக்கூடியதும் (பிறப்பு என்னும்) துன்பத்தை அளிப்பதுமான கர்மங்களை ஞானம் என்ற அக்னியில் எரித்து, பலன் கொடுக்கத் தொடங்கிவிட்ட கர்மங்களின்படி தனது உடலானது (அனுகூலத்துடனோ ப்ரதிகூலத்துடனோ) இருக்கட்டும் என்று விட்டுவிடுவார் என்பது எனது தீர்மானம்.

(
இப்படி யாரேனும் வாய் வேதாந்திகளால் என்ன நடக்கிறதோ நடக்கட்டும் என்று
தனக்கு அனுகூலத்தை சம்பாதிக்கவோ ப்ரதிகூலத்தை விலக்கவோ துளியும்
ப்ரயத்னப்படாமல் இருந்துவிட முடியுமா?)

No comments: