Pages

Wednesday, August 23, 2017

வேதம் -3





இப்போ வேதத்துடைய மந்த்ரத்வம், ஸ்வரங்களுடைய விசேஷம், அர்த்தத்ததுடைய முக்கியத்துவம் பற்றி பார்க்கலாம்
 
பஞ்ச தன் மாத்திரைகளில ஒன்று சப்தம். அதாவது ஒலி. அதில் பல வடிவங்கள் உண்டு. ஓசை, ஒலி, மொழி, வாய் மொழி. அசையா பொருட்கள் சம்பந்தப்பட்டது ஓசை . உயிருள்ளவை எழுப்புவது ஒலி. விசேஷமான, வளர்ச்சி அடைந்த உயிர்களால் வர்ணம் முதலானவையாக வகைப்படுத்தப்பட்டவை மொழி. இன்னும் அதிகம் வளர்ச்சி அடைந்த உயிர்களால் சாக்ஷாத்கரிக்கப்பட்டவை வாய் மொழி அல்லது வேதம் என்கிறோம்
 
வாயால்தான் எல்லா மொழிகளுமே பேசப்படும். அது கிரேக்கமோ லத்தீனமோ ஆங்கிலமோ வேறு எந்த மொழியாகட்டும் எல்லாம் வாயால் பேசப்படுபவைதான். இருந்தாலும் தவத்தாலே பிற ஒன்றுக்கும் புலனாகாத ஒரு பொருள் வாய்க்கப்பட்டதால் இதுக்கு வாய்மொழி என்று பெயர். வாய்த்த மொழி அது வாய் மொழி. ஸ்ருதி என்றால் கேள்வி என்றும் ஆம்னா என்றால் வாய்மொழி வேதம் என்றால் புலம். சந்தஸ் என்றால் மறை. இதை எல்லாம் இப்படி தமிழிலே இப்படி சொல்லியிருக்கிறார்கள்

இது நேரடியாக உத்பத்தியை முழுமையாக தருவதான்னு பார்த்தா இல்லை. ஒரு பொருளுடைய ஓரு தன்மையையோ, அதன் புற வடிவையோ, அல்லது அதுக்கு ஒப்புமையோ காட்டக்கூடிய அளவுக்கு இருக்கலாம். ஆனால் அந்த பொருளுடைய அடிப்படை தத்துவத்தை, அந்த பொருள் எங்கேந்து உயிரோடு புறப்பட்டு வந்ததோ அந்த ஒரு உணர்வு காட்டுகிற ஒன்றை வேற ஒண்ணு காட்டவே முடியாது. அது எங்கேயிருந்து உயிர்தெழுந்ததோ அதுக்கு காரணம் என்ன? வேதத்துடைய தனித்தன்மைக்கு காரணம் என்ன? இது தவத்தாலே உயிரோடு உணர்வோடு ஒருவரிடமிருந்து புறப்பட்டு வந்தது., அதோட அடித்தளத்தை ஆழ் நிலையை சாதாரண ஒலிகளோட கூட்டமைப்பு செய்ய முடியாது. தன் தாடைகளாலும் உதடுகளாலும் பற்களாலும் நாபியில் இருந்து எழும் ஒலி கூட்டி பேசும் மொழிகள் இதை காட்டவே முடியாது.

No comments: