பாயாஃஜித்
ஒரு சுஃபி. தன்னைப்பற்றி
இப்படி சொன்னார். “இள
வயதில் நான் புரட்சியாளனாக
இருந்தேன். கடவுளிடம்
நான் வேண்டிக்கொண்டது இப்படி
இருந்தது: “கடவுளே!
உலகை மாற்ற
எனக்கு சக்தி கொடு.”
நடு
வயதை நெருங்கும்போது ஒரே ஒரு
ஜீவனைக்கூட என்னால் மாற்ற
முடியவில்லை என்பதை உணர்ந்தேன்.
ஆகவே என்
பிரார்த்தனையை மாற்றிவிட்டேன்.
“கடவுளே என்
தொடர்பில் வருவோரை மாற்ற
எனக்கு சக்தியை கொடு.
என் குடும்பம்,
நண்பர்கள்
போதும் நான் திருப்தி
அடைந்துவிடுவேன்.”
இப்போது
நான் வயதானவனாகிவிட்டேன்.
என் நாட்கள்
முடியப்போகின்றன என்பது
தெளிவாகிவிட்டது. ஆகவே
இப்போது என் ஒரே பிரார்த்தனை
"கடவுளே
என்னை மாற்றிக்கொள்ள அருள்
செய்!” இதை
நான் ஆரம்ப காலத்திலிருந்து
பிரார்த்தனை செய்து இருந்தால்
என் வாழ்நாட்களை மாற்றி இருக்க
மாட்டேன்.
No comments:
Post a Comment