பாகவத
புராணத்திலிருந்து ஒரு கதை.
ஒரு
காகம் தன் அலகில் ஒரு மாமிச
துண்டை கொத்திக்கொண்டு
பறந்தது. இருபது
காகங்கள் அதை துரத்தி கொத்த
ஆரம்பித்தன.
கடைசியில்
தாங்க முடியாமல் காகம் மாமிச
துண்டை விட்டுவிட்டது.
காகங்கள்
கீழே விழும் அதை துரத்த
ஆரம்பித்தன; காகத்தை
விட்டுவிட்டன.
காகம்
சொன்னது " அந்த
மாமிச துண்டை விட்டுவிட்டேன்.
இந்த நிம்மதியான
வானத்தை பெற்றேன்.”
ஒரு
ஜென் துறவி சொன்னார்.
"என் வீடு
எரிந்து போனது. இரவில்
நிலவின் தடையற்ற காட்சி
கிடைத்தது!”
No comments:
Post a Comment