Pages

Monday, January 14, 2019

ஞானாம்ருதம் - 4





பல காலம் ப்ரவசனத்துக்கு வெளியூரே போகாம ஒரே இடத்தில... நொச்சூர்லயோ திருவண்ணமலையிலோ இருந்தாக்கூட இதை பாத்திருக்கேன். எங்கேந்தோ பாம்பேலேந்தோ... சில சமயம் வெளிநாட்டுலேந்து கூட.... வேற எந்த எதிர்பார்ப்பும் இல்லாம எத்தனையோ கஷ்டங்களை சகிச்சுண்டு அபூர்வமா ... அது ஒண்ணும் ஜெனரல் பெனாமெனன் கிடையாது.. அபூர்வமா ... சத் சங்கத்துக்கு மட்டும் ஆசைபட்டுண்டு யாரானா பார்க்க வருவா. அவாள எந்த ஃபோர்ஸ் இங்க இழுத்துண்டு வந்துதோ அதே ஃபோர்ஸ் நமக்குள்ள பூந்துண்டு நம்ம பேசவும் வைக்கும். அத பார்க்கறப்பவே தெரியும்.... பகவானோட கிருபைன்னா என்னன்னு அப்பத்தான் நமக்கும் புரியும். அந்த விழைவு... அதப்பாத்துத்தான் ராமக்ருஷ்ணர் நரேந்திரனை நீ நாராயணன்னு சொன்னார். அந்த விழைவு... தலைல தீப்பிடிச்சுண்ட மாதிரி... வேதாந்தத்திலயே அப்படித்தான் எக்ஸாம்பிள் கொடுப்பா.. தலைல நெருப்பு பத்திண்டா ஜலத்த தேடிண்டு எப்படி ஓடுவோம் நாம? நாளைக்கு அணைச்சுக்கறோம்ன்னு உக்காண்டு இருப்போமானா? ப்ரதீப்த சிரஹா ஜலராசிரிவ ...
நமக்கு முன்னாடியே ம்ருத்யு ஜரா வியாதின்னு தோஷம் எல்லாம் கண்ணு முன்ன வந்து நிக்க... நமக்கு மரணம் இருக்கு என்கிற உண்மைய நாம எதிர்கொள்ளறப்ப .. நமக்கு வியாதி இருக்கு. நமக்கு இஷ்ட பட்டவா எல்லாரும் நம்ம கூடவே இருப்பான்னு சொல்ல முடியாது... அந்த துன்பம் யாரும் வராம இருக்கட்டும் ஆனா வந்தா என்ன பண்ணறது? இதுக்குத்தான் சம்சாரம்ன்னு சொல்றோம். அந்த துன்பங்கள் எல்லாம் இருக்கு லோகத்தில. அதை எல்லாம் பாக்கறத்த அந்த டீப் பெய்ன் எக்ஸ்க்ரூஷியேடிங் பெய்ன் அது ஒருவாட்டி பட்டுதானாத்தான் நாம முழிச்சுக்கறோம். நாம நினைச்சா மாதிரி இந்த லோகத்தில சுகமா இருக்க முடியாது. சுகமா இருக்கறதெல்லாம்.... பெரிவா ஒரு ... ரெண்டு உதாரணம் சொல்லுவா. ஒண்ணு பாம்பு வாயில இருக்கற தவளை. அது முன்னாடி போற ஒரு ஈய பிடிக்கப்போறதாம். அந்த பாம்பு வாய க்ளோஸ் பண்ணிடுத்துன்னா உள்ளா போயிடும். சக்‌ஷுஶ்வரண களஸ்தமாம் தர்புறம்ன்னு மலையாளத்துல... அத்யாத்ம ராமாயணத்துல.. அந்த தவள மாதிரி ஜீவன் இங்க எல்லாம் சுகம்தான் ஒரு துன்பமும் வராதுன்னு நினைச்சு தன்னத்தானே ஏமாத்திண்டு நித்யமான வஸ்துவ மறந்து அநித்தியமான த்ரவ்யங்களையே நித்யம்ன்னு நினைச்சுண்டு ஆஶ்ரயிச்சுண்டு இருக்கு.

நல்லா புரிஞ்சுக்கணும்.
அநித்யமான த்ரவ்யங்கள உபயோகப்படுத்தாம யாரும் இருக்க முடியாது. நான் பணம் சம்பாதிக்கறத நிந்த பண்ணல. அது எல்லாருக்குமே வேணும். எனக்கும் வேணும் உங்களுக்கும் வேணும். சாப்டறத்துக்கு வேணும். அது ஒன்லி அ மீன்ஸ்... நெசசிடி. அது வியவகாரத்துக்கு வேணும். த்ரவ்யங்கள ... தேகம், ஆரோக்யம், வீடு குடும்பம் இதெல்லாம் வியவஹாரம் செய்யலாம். ஶ்ரயிக்கப்படாது. அது எப்ப வேண்ணா ஏமாத்திடும். நித்யமான வஸ்துவ வியவகாரம் பண்ண முடியாது; அத ஆஶ்ரயிக்கணும். நாம் இதை தலைகீழா பண்ணறோம். அந்தியமான த்ரவ்யங்கள ஆஶ்ரயிக்கறோம். நித்யமானத வியவகாரம் செய்யப்பாக்கறோம். ஒரு கோவில கட்டி அந்த கோவில்ல அநேக கர்மாக்கள செஞ்சு வியவகாரம் பண்றோம். இதுக்கெல்லாம் பணம் வேணுமே? அப்படின்னு பணத்த ஆஶ்ரயிக்கறோம். பகவான் என்ன சொல்றார்னா நீ என்னா ஆஶ்ரயிச்சுக்கோ, அப்பறம் பணத்த வியவகாரம் பண்ணு, பரவாயில்ல. அப்படி நாம் பண்ணறதில்லை.

No comments: