ஜென்
மாஸ்டர் ரியோகன் மலையடிவாரத்தில்
மிக எளிய வாழ்க்கை வாழ்ந்தார்.
ஒரு இரவில்
ஒரு திருடன் திருடுவதற்கு
அவரது குடிசைக்குள் புகுந்தான்.
அங்கே ஒன்றுமே
இல்லை.
அப்போது
ரியோகன் திரும்பிவிட்டார்.
திருடனை
பார்த்து "ஐயோ
பாவம் இங்கே ஒன்றுமே இல்லையே?
நீ என்னை
பார்க்கவர இவ்வளவு மெனக்கெட்டு
இருக்கிறாயே? இந்தா
இந்த போர்வையையும் என்
உடையையும் எடுத்துப்போ"
என்று
கொடுத்துவிட்டார்.
திகைத்துப்போன
திருடன் கொடுக்கப்பட்டதுடன்
வெளியேறினான்.
நிர்வாணமாக
தன் குடிசையின் வாசலில்
அமர்ந்த ரியோகன் நிலவை
பார்த்தார். “அவன்
பாவம்! இதை
அவனுக்கு கொடுக்க முடிந்து
இருந்தால் எவ்வளவு நன்றாக
இருந்திருக்கும்!”
என்றார்.
No comments:
Post a Comment