நேற்று துயரமான நாள்.
சபரி மலையில் நெடுங்கால விதிமுறைகள் மீறப்பட்டன.
ஏன் அப்படி விதிமுறைகள் என்று முன்னே இங்கேயே பதிவு செய்து இருக்கிறேன். இது பாலின பாகுபாடு அல்ல. குறிப்பிட்ட வயது பெண்களுக்கு மட்டுமே தடை. இந்தியா முழுக்க இப்படி ஆண்களுக்கு தடை பெண்களுக்கு தடை என்று விதி முறைகள் உள்ள ஆலயங்கள் உள்ளன. இவற்றை மதிக்கக்கற்க வேண்டாமா? மதிக்காதது 'இன்டாலரன்ஸ்' இல்லையா?
கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கையை இப்படி திட்டமிட்டு தகர்ப்பது சரியில்லை. கண்டிக்கத்தக்கது. இத்தனைக்கும் உச்ச 'நீதி' மன்றம் தீர்ப்பு கொடுத்த பின் எந்த உண்மையான பக்தி உள்ள ஹிந்து பெண்ணும் அங்கே போக வேண்டுமென்று துடிக்கவில்லை. போனதெல்லாம் கடவுள் நம்பிக்கை அற்ற வீண் வம்புக்கு போவேன் என்று பிடிவாதம் பிடித்த கம்யூனிஸ்ட், இஸ்லாமிய, கிறிஸ்துவ பெண்கள்தான்.
இத்தனைக்கு ஐயப்ப பக்தர்கள் வன்முறையில் ஈடுபடவே இல்லை. அவர்களுடைய ஒரே ஆயுதம் சரண கோஷம்தான். கல்லெறிந்தார்களா கத்தி வைத்துக்கொண்டு துரத்தினார்களா?
ஆனால் கேரள அரசு எப்படியாவது சிலரையாவது அனுப்பி விட வேன்டும் என்று பிடிவாதமாக இருந்திருக்கிறது. நேற்று போன இருவரும் கம்யூனிஸ்ட் பெண்கள். விடி காலையில் சாதாரண உடை அணிந்த போலீஸாருடன் அரையிருட்டில் உடலை ஏறத்தாழ முழுதும் மறைத்த நிலையில் சென்று அதை விடியோவும் எடுத்திருக்கிறார்கள். 'விடியோ எடுத்தாச்சு, போதும் உடனே திரும்புங்க' என்று அந்த விடியோ பதிவில் குரல் பதிந்து இருப்பதாக சொல்லுகிறார்கள்.
இன்று அந்த இருவரில் ஒருவரான கனகதுர்காவின் சகோதரர் அவர் சென்றது கோட்டையம் எஸ்பியின் வற்புறுத்தலின் பேரில் என்றும் அது தங்கள் குடும்பத்துக்கு பிடிக்கவில்லை என்றும் இபோது அவர் எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை என்று சொல்லி இருப்பதாக பத்திரிகைகள் சொல்லுகின்றன.
மொகலாய படையெடுப்பையும் தாண்டித்தான் ஹிந்துக்கள் வந்திருக்கிறோம். அதனால் இழப்பு பெரிதென்றாலும் நாம் இன்னும் உயிர்த்திருக்கிறோம். இதிலிருந்தும் மீண்டு வருவோம்.
மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட் அரசு ராமகிருஷ்ண மடத்தை படுத்திய பாட்டில் அவர்கள் தாங்கள் ஹிந்துக்களே இல்லை, ராமக்ருஷ்னைட்ஸ் என்று சொல்லி மைனாரிட்டி உரிமைக்காக கோர்ட் செல்லும் நிலை உருவானது. பின் கம்யூனிஸ்டுகள் மீண்டும் தலை எடுக்க முடியாதபடி நிலமை தலை கீழாகிப்போனது.
இங்கேயும் அப்படி நிகழ்ந்தால் ஆச்சரியம் இராது.
இறைவனின் விளையாட்டுகளை லேசில் புரிந்து கொள்ள முடியாது. காரண காரியம் இல்லாமல் எதுவும் நடைபெறுவதில்லை. எல்லாரையும் அவனே காப்பாற்றட்டும்!
No comments:
Post a Comment