சரீரம்
ஆரோக்யமா இருக்கும்போதே
தெரிஞ்சுக்கப்பா ...
உபநிஷத்..
ஆக்ரோஷந்தி
... கூவறதாம்.
என்ன கூவறது?
உனக்குள்ளேயே
சத்தியம் இருக்குப்பா.
உனக்குள்ளேயே
இருக்கற வஸ்துவை நீ தெரிஞ்சுண்டாத்தான்
உனக்கு நிம்மதி வரும்.
நீ ஆருன்னு
உணர்ந்தாத்தான் நிம்மதி
வரும். அதை
தெரிஞ்சுக்காம நிம்மதி வரவே
வராது ...என்கறதை
ஸ்ருதி ஒரு தாய் குழந்தைக்கு
உபதேசம் பண்ணுவதப்போல
குழந்தைக்கு எது நல்லதுன்னு
பாத்து அனுக்ரஹம் பண்ணுவதப்போல
அன்போட பரம கருணையோட ரிஷிகள்
நமக்கு இதை சொல்றா.
தாயுமானவர்
சொல்லறார் சேர வாரும் ஜகத்தீரே.
என்ன செய்யணும்?
ஆன்மீகத்தில
மேக்சிமம் எபர்ட் போடணும்.
அதுக்கு கையோ
காலோ ஒரு எபர்டும் போட வேண்டாம்.
ஆன்மீகத்தில
ரொம்ப முக்கியமா இருக்கற ஒரே
விஷயம் நம்ம கவனம். நாம்
என்ன செய்யறோம்... நம்ம
கை, கால்,
தல, நம்ம
கையில இருக்கற பணம் எல்லாத்தையும்
பகவான்கிட்ட கொடுக்கறோம்.
ஆனா நம்ம கவனத்த
உலகத்துக்கு கொடுத்துடறோம்.
இதோட சீக்ரெட்ட
தெரிஞ்சுண்ட ரிஷிகள் என்ன
சொல்றான்னா நீ உன் கை கால்
தல, சரீரம்
எல்லாத்தையும் உலகத்துக்கு
கொடு; உன்
பணத்த எல்லாம் லோகத்துல
யாருக்கு வேணுமோ அவாளுக்கு
கொடு. கவனத்த
பகவான்கிட்ட கொடு.
நம்மளோடு
பொருள் எங்கே இருக்கோ அங்கேதான்
நம்ம கவனம் இருக்கும்.
நம்ம பேக்
பக்கத்துல இருக்குன்னா அத
பாத்துண்டே இருப்போம்.
ஏன் சின்ன
சப்பல் ... அதக்கூட
கவனமா பாத்துண்டே இருக்கோம்
எங்கானா தொலைஞ்சுடப்போறதோன்னு.
நம்மோடதுன்னு
ஒண்னை நினைச்சுட்டா அதை
பாத்துண்டே இருப்போம்.
ஆனா இது
எல்லாத்தையும் விட பெரிய
பொக்கிஷம்... ட்ரஷர்
வீ ஹாவ் லாஸ்ட் இட்! என்ன
நஷ்டமாகி இருக்கு? நிம்மதி
போயிடுத்து. நம்மோட
ஸ்வரூபத்தையே நாம இழந்துட்டோம்.
நாம் யாரு
எங்கிறதை ஞாபகப்படுத்தறதுக்காகவே
இந்த மஹான்கள் எல்லாம் வரா.
No comments:
Post a Comment