Monday, April 14, 2008
பக்தி - ஆனைமுகத்தோன்
இந்த பக்தி பிரிவை பிள்ளையாரோட ஆரம்பிக்க நினைக்கிறேன்.
நம்ம நாட்டுல எல்லா நல்ல வேலையும் பிள்ளையாருக்கு பூஜை போட்டு ஆரம்பிக்கிறதே வழக்கம். சிவனை கும்பிட்டாலும், பெருமாளை, அம்பாளை இப்படி யாரை கும்பிட்டாலும் பிள்ளையாருக்கு யாரும் விரோதமே கிடையாது. அப்படி எல்லாருக்குமே பிடிச்ச தெய்வம்.
தமிழ் தெய்வம்னு எல்லா உலகுக்கும் பொதுவான தெய்வங்களை குறுக்கறாங்க சிலர். ஒரு இடத்துலேயே அதிகமான வழிபாடு உள்ள தெய்வம்னு இதை எடுத்துக்கனும்னா தமிழ் நாட்டுக்கு இந்த ஆனைதான் தெய்வம். அந்த அளவுக்கு மூலை முடுக்கெல்லாம் கோவில் இருக்கிறது ஆனைக்குத்தான்.
தமிழ்னாலே நினைவுக்கு வர அவ்வை பாட்டிக்கும் இவர் ரொம்பவே ப்ரெண்டு. அவளோட பக்திக்கு அடையாளமா ஒரு கதை பாக்கலாமா?
சுந்தரர் சிவ பெருமானை பல இடங்களிலே கண்டு வழிபாடு செய்த பின்னே ஒரு நாள் "இன்னும் எவ்வளவு நாள் இப்படி இந்த உலகத்துலே நான் கஷ்டப்படணும்? சீக்கிரம் அழைத்துக்க மாட்டாயா" என்று கதறிட்டார். சிவ பெருமானும் சரி, இவன் உலகத்துலே கஷ்டப்பட்டது போதும் என்று நினைத்து இந்திரனை கூப்பிட்டு "ஐராவதத்தை கொண்டு போய் சுந்தரத்தை அழைத்து வாங்க" என்று உத்தரவு போட்டார்.
அப்படியே அவர்களும் யானையை கொண்டு போய் அழைத்து ஏற்றிக் கொண்டு கயிலைக்கு போக ஆரம்பித்தனர். சுந்தரருடைய உயிர் நண்பரான சேரமான் பெருமாள் அவர் வானத்தில் போவதை பார்த்து "எங்கே போறீங்க?” என்று கேட்க கயிலை என்றவுடன் நானும் வருகிறேன் என்று சொன்னார். தன் குதிரையின் காதில் பஞ்சாட்சரத்தை ஓத அது வானத்தில் பறந்து சுந்தரரின் யானைக்கு முன்னே பைலட் மாதிரி போக ஆரம்பித்தது. தம் ராஜா போவதை பார்த்து சேரமானின் மெய்காவலர்கள் வாளால் தம்மை வெட்டி உயிரை மாய்த்துக்கொண்டு சூக்ஷ்ம உடம்போட சேரமானுக்கு முன்னே பைலட்டாக போக ஆரம்பித்தார்கள்.
இவர்கள் எல்லோரும் இப் படி திருக்கோவிலூரை தாண்டி போகிற போது அங்கே அவ்வை பாட்டி பிள்ளையாருக்கு பூஜை செய்து கொண்டு இருந்தாள். நாங்க கைலாசம் போறோம் நீயும் வான்னு கூப்பிட்டார்கள். அவ்வையோ எனக்கு பிள்ளையார் பூஜைதான் முக்கியம் நான் அப்புறம் வரேன்னு சொல்லிட்டாங்க. பிள்ளையாரோ அவ்வையாரோட பக்தியை பாத்து நேரே வந்துட்டார். அவ்வை நிவேதனம் பண்ணதை எல்லாம் எடுத்து நிதானமா சாப்பிட ஆரம்பிச்சார். அவ்வை போட போட நிதானமா சாப்பிட்டார். கடைசில எனக்கு ரொம்ப சந்தோஷம் என்ன வேண்டும்னு கேட்டார். "உன் அருள் தவிர வேற என்ன வேண்டும்" ன்னு அவ்வை சொல்ல சரி, என் மேலே ஒரு பாட்டு பாடுன்னார். சீத களப என்று ஆரம்பித்தார் அவ்வை. விநாயகர் அகவல் அன்ற அருமையான பாடல் பாட பிள்ளையார் சந்தோஷப் பட்டு தும்பிக்கையால ஒரே தூக்கா தூக்கி பாட்டியை கைலாசத்துல கொண்டு வைத்தார்! இவள் சேர்ந்த பிறகு சேரமானும் சுந்தரரும் வந்து சேர்ந்தாங்க. எங்களுக்கு முன்னால எப்படி வந்து சேர்ந்தாய் என்று இருவரும் அதிசயிக்க அவ்வை இந்த பாட்டு பாடினாள்:
மதுர மொழி நல்உமையாள் சிறுவன் மலரடியை
முதிர நினைய வல்லார்க்(கு) அரிதோ? முகில்போல் முழங்கி
அதிரவரும் யானையும் தேரும் அதன்பின் சென்ற
குதிரையும் காதம் கிழவியும் காதம் குல மன்னனே
--
பொருள்:
சாக்ஷாத் பரா சக்தியின் பிள்ளையின் சரணாரவிந்தங்களையே தியானிக்கிறவர்களுக்கு எந்த ரத கஜ துரக பதாதியும் காத தூரம் பின் தங்கிதான் வர வேண்டும்.
--------
கடைசி 3 பத்திகள் எடிட் செய்யப்பட்டன- திவா
Labels:
முதல் சுற்று
Subscribe to:
Post Comments (Atom)
31 comments:
அருமையோ அருமை.
ஒரு வருடம் முன்னால் ஆபிஸ் பஸ்ஸில் போகும் நேரம் தினமும் வினாயகர் அகவல் + ஷஷ்டி கவசம் படிப்பேன். (அவ்ளோ தூரம் பஸ் போயிண்டே இருக்கும்)
நினைவு படுத்தியமைக்கு நன்னி, மறுபடி வீட்லயே படிக்கறேன். (இப்ப நீ ஆபிஸ் போறதில்லையா?னு கேக்கபடாது) :)
//தமிழ் தெய்வம்னு எல்லா உலகுக்கும் பொதுவான தெய்வங்களை குறுக்கறாங்க சிலர்.//
ஹிஹி, யாருங்க அது? எனக்கு தெரியவே தெரியாது. :P
@ அம்பி
//நினைவு படுத்தியமைக்கு நன்னி, மறுபடி வீட்லயே படிக்கறேன்.//
அடடா! இது போதுமே நான் ப்ளாக் எழுத ஆரம்பிச்சதோட பலனுக்கு! நிச்சயம் படிங்க! வாழ்த்துக்கள்!
// (இப்ப நீ ஆபிஸ் போறதில்லையா?னு கேக்கபடாது) :)
என்னிக்கான போகலைனா யாரும் கண்டு பிடிப்பாங்களா என்ன? இருந்தாலும் மெய்ல் எங்க படிக்கிறது, ப்ளாக் எங்க எழுதறது...சரி சரி...
//ஹிஹி, யாருங்க அது? எனக்கு தெரியவே தெரியாது. :P//
அதானே! உங்க ப்ளாகுக்கு சரியான பேர்தான்.
//தமிழ் தெய்வம்னு எல்லா உலகுக்கும் பொதுவான தெய்வங்களை குறுக்கறாங்க சிலர்.//
Exactly!
இந்த சுந்தரர் கதைக்கான மறைபொருள் என்னவென்று யோசித்தபோது, இப்படித் தோன்றியது:
1.மூலதார கணபதி, முழுமுதல் பொருள். அவனே
ஆதாரம். ஆதாரம் இல்லாமல் என்ன யோகமும் செய்து மேலெழுப்ப எத்தனித்தாலும், நீண்ட தூரம் செல்ல இயலாது. ஆதாரப் பொருளின் அருள் பெற்றால், நிலை பெற்று நிற்கலாம், நீட்டலாம்.
2.வினைகளைக் களைபவன் விக்னேஸ்வரன். கர்ம வினைகளைக் களையாமல் என்ன யோகம் செய்தாலும், எங்கே மேலெழும்ப எத்தனித்தாலும், மீண்டும் கீழே வர நேரிடும். ஆகவே, விநாயகன் துணைகொண்டு வினைகளைக் களைவது முதன்முதலில் செய்ய வேண்டியது.
வாங்க ஜீவா
அருமையான விளக்கம். நன்றி!
அருமையான கதை. குழந்தைகளும் படிக்கவேண்டும்.
அம்பி ஒரு வருஷம் முன்னால் என்றால் என்ன? மே மாதம் 1 தேதிக்கு முன்னாலேயா?
அருமையான கதை. குழந்தைகளும் படிக்கவேண்டும்.
அம்பி ஒரு வருஷம் முன்னால் என்றால் என்ன? மே மாதம் 1 தேதிக்கு முன்னாலேயா?
ஆனை முகத்தோன் வரவும், அதன் தொடர்பான விளக்கங்களும் அருமை!
@ஜீவா, இந்த ஆறு ஆதாரங்களையும் குறித்து உங்கள் பதிவுகளில் இன்னும் விளக்கமாய் எழுதலாமே? அருமையான விளக்கம் அளித்துள்ளீர்கள். விநாயகர் அகவலே இதைத் தான் விளக்குகின்றது இல்லையா?
//மதுர மொழி நல்உமையாள் சிறுவன் மலரடியை
முதிர நினைய வல்லார்க்(கு) அரிதோ? முகில்போல் முழங்கி
அதிரவரும் யானையும் தேரும் அதன்பின் சென்ற
குதிரையும் காதம் கிழவியும் காதம் குல மன்னனே//
எழுதினவங்க பேரும், பொருளும் போட்டிருக்கலாமோ?
நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந்துருகத்
தஞ்சத்தருள் சண்முகனுக்கி யல்சேர்
செஞ்சொற் புனைமாலை சிறந்திடவே
பஞ்சக்கரவானை பதம் பணிவாம்.
யானை முகத்தினன்.
பானை வயிற்றனன்.
மாவினை எல்லாம் மருண்டே ஓடிட
நாவினில் அவனது நாமம் சொல்லுவோம்.
ஓம் விக்னேச்வராய நம:
நிர் விக்னம் குரு மே தேவா சர்வ கார்யேஷு சர்வதா ..
சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
http://paattiennasolkiral.blogspot.com
@TRC sir, இல்ல TRC சார், அதுக்கும் முன்னால். உங்க உள்குத்து எனக்கு புரியுது. :)
@ கீதா அக்கா
பொருள் பாட்டுக்கு முன்னாலேயும் அதை எழுதினவங்க யார் என்பதை அதற்கு முன்னால் இருக்கிற வரிகளிலும் பாத்துக்கலாம்.
@ சூரி சார்
வரவுக்கும் பொருத்தமான பின்னூட்டத்துக்கும் நன்ஸ்!
@ அம்பி
இன்னிக்கு பாராயணம் ஆரம்பிச்சாச்சு இல்ல?
//எழுதினவங்க பேரும், பொருளும் போட்டிருக்கலாமோ?
//
@TOM, இதுக்கு தான் பதிவை படித்து விட்டு பின்னூட்டம் இடனும்னு சொல்றது. :P
//இன்னிக்கு பாராயணம் ஆரம்பிச்சாச்சு இல்ல?
//
@diva sir, கையேடை தேடி கொண்டிருக்கிறேன். :(
இன்னிக்கு நாள் நல்லா இருக்குன்னு மொத்தத்தையும் ஒரே மூச்சில் படிச்சுட்டு வந்தேன்.
நல்ல ஃப்ளோ இருக்கு. புரிஞ்சுக்குவேன்னு நினைக்கிறேன்.
மதுர மதுர எனத்துவங்கும் தாங்கள் இயற்றிய விநாயகனின் துதிதனை
ஒரு ஆவலின் உந்துதலால், உங்கள் அனுமதிதனை எதிர்பார்த்து,
பூபாள ராகத்தில் மெட்டமைத்து, யூ ட்யூப் ல் போட்டிருக்கிறேன்.
http://www.youtube.com/watch?v=uzSjdDEwlJ4
நான் பாடகன் அல்ல. கொஞ்சம் சங்கீத இலக்கணம் தெரியும்
அவ்வளவு தான். எனது குரலின் ஸ்ருதியை விட பாடலின் ஸாகித்யத்தில்
தொனிக்கும் பக்தி தான் முக்கியம்.
உங்கள் அனுமதி இல்லையேல் டெலிட் செய்துவிடுகிறேன்.
சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
http://movieraghas.blogspot.com
வாங்க துளசி அக்கா, நல்வரவு!
ஆனை வலைல எங்க இருந்தாலும் கண்டு பிடிக்க ஏதாவது மென்பொருள் வெச்சு இருக்கீங்களா?
:-))
இவ்வளவு நாள் காணோம். ஆனை படம் போட்டதும் வந்துட்டீங்க. தெரிஞ்சிருந்தா முன்னாலேயே போட்டு இருப்பேன்!
:-))
// இன்னிக்கு நாள் நல்லா இருக்குன்னு மொத்தத்தையும் ஒரே மூச்சில் படிச்சுட்டு வந்தேன்.//
யம்மாடி அத்தனையுமா? பாஸ்ட் (fast) ரீடர்தான்.
// நல்ல ஃப்ளோ இருக்கு. புரிஞ்சுக்குவேன்னு நினைக்கிறேன்.//
நன்ஸ்!
(நன்னி ன்னு சொன்னா காப்பிரைட் ன்னு சிலர் சொல்றாங்க!)
தினமும் படிங்க. அதுக்கு லஞ்சமா சீ .. கையூட்டா சீச்சீ ... அன்பளிப்பா ஒரு குட்டி ஆனை படம் அனுப்பறேன்.
:-)))))))))
@ சூரி சார்
//மதுர மதுர எனத்துவங்கும் தாங்கள் இயற்றிய விநாயகனின் துதிதனை
ஒரு ஆவலின் உந்துதலால், உங்கள் அனுமதிதனை எதிர்பார்த்து,
பூபாள ராகத்தில் மெட்டமைத்து, யூ ட்யூப் ல் போட்டிருக்கிறேன்.//
எங்கேயோ ஒரு தப்பு. நான் சாகித்தியம் ஏதும் செய்யவில்லையே! சுட்டுப்போட்டால் கூட தெரியாது!
வேற யாருக்கோ அனுப்ப வேண்டியது இங்கே வந்துவிட்டதா?
பரவாயில்லை. உங்க பின்னூட்டத்தை போட்டாச்சு. பார்க்கிறவங்க பாக்கட்டும். நான் பாக்க முயற்சி பண்ணபோது லேட்டஸ்ட் ப்ளாஷ் ப்ளேயர் வேணும்னு சொல்லிடுச்சு! நானோ லீனக்ஸ் ல இருக்கேன்.
:-(
//எங்கேயோ ஒரு தப்பு. நான் சாகித்தியம் ஏதும் செய்யவில்லையே! சுட்டுப்போட்டால் கூட தெரியாது!
வேற யாருக்கோ அனுப்ப வேண்டியது இங்கே வந்துவிட்டதா?//
Oh my God ! I give below what is exactly i read in your blog. Is this not what u have written !
ாக்ஷாத் பரா சக்தியின் பிள்ளையின் சரணாரவிந்தங்களையே தியானிக்கிறவர்களுக்கு எந்த ரத கஜ துரக பதாதியும் காத தூரம் பின் தங்கிதான் வர வேண்டும்.
மதுர மொழி நல்உமையாள் சிறுவன் மலரடியை
முதிர நினைய வல்லார்க்(கு) அரிதோ? முகில்போல் முழங்கி
அதிரவரும் யானையும் தேரும் அதன்பின் சென்ற
குதிரையும் காதம் கிழவியும் காதம் குல மன்னனே
The song starts with the word " madhura " and I have said the word twice for flow of raga.
Hope you will now find where we are.
@ சூரி சார்
ஆஹா!
பாட்டை எழுதினது அவ்வையார்தான். அவரிடம் பெர்மிஷன் நேரடியா கேக்க முடியாது. அதனால மானசீகமா கேட்டுக்கிடலாம். அவர் கொடுத்துட்டார்ன்னுதான் நினைக்கிறேன்.
:-))
//The song starts with the word " madhura " and I have said the word twice for flow of raga.//
இதனாலதான் இந்த பாட்டுன்னு தோணலை!
//Hope you will now find where we are.//
of course!
தங்கள் சேவைக்கு மிக்க நன்றி சூரி ஐயா!.
செய்யுட்களை இசையுடன் கேட்பதிலேயே அலாதி ஆனந்தம்!
அவ்வை பிராட்டி எழுதியிருக்கிறார் என்பதை கவனிக்காமலே இருந்துவிட்டேன். So sorry.
உடனே அவ்வையிடம் போய் அனுமதி கேட்டேன்.
தந்துவிட்டார், எனக்கு மட்டும்.
திவா சாருக்கும் கொடுங்கள் என்றேன்.
நேரடியாக அப்ளை பண்ணச் சொல்கிறார்.
சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
பி.கு. ஏன் லினக்ஸில் யூ ட்யூப் கிடைக்காதா ?
ஆச்சரியமாக இருக்கிறதே !
அம்பி, கையேடு கிடைக்கலனா சொல்லுங்க.
(அவ்ளோ ஈஸியா விடறதில்லை
:-)
)
சில குழப்பங்கள் வந்ததால போஸ்ட்டை கொஞ்சம் எடிட் செஞ்சு இருக்கேன்.
சுப்பு சார்,
// உடனே அவ்வையிடம் போய் அனுமதி கேட்டேன்.
தந்துவிட்டார், எனக்கு மட்டும்.//
அக்கிரம்மா இல்ல?
// திவா சாருக்கும் கொடுங்கள் என்றேன்.//
ஆஹா வாழ்க!
//நேரடியாக அப்ளை பண்ணச் சொல்கிறார்.//
அப்ப பிள்ளையாரைதான் பிடிக்கனும்.
:-))
//பி.கு. ஏன் லினக்ஸில் யூ ட்யூப் கிடைக்காதா ?
ஆச்சரியமாக இருக்கிறதே !//
கிடைக்கும். வெர்ஷன் மாறினா கொஞ்ச நாள் கழிச்சுதான் கிடைக்கும்.
//(நன்னி ன்னு சொன்னா காப்பிரைட் ன்னு சிலர் சொல்றாங்க!)//
இதுக்குப் பேர் தான் உ.கு.! :P
//@TOM, இதுக்கு தான் பதிவை படித்து விட்டு பின்னூட்டம் இடனும்னு சொல்றது. :P//
அம்பி, உங்களை நீங்களே ஏன் திட்டிக்கிறீங்க, பாவமா இருக்கு? டாம் நீங்க தான், நான் இல்லை! :P
அடடா, ரொம்ப மிஸ் பண்ணிட்டேன் போல இருக்கு....எனிவே இப்போ படிச்சுட்டேன்.
@ சுப்பு சார்
வின்டோஸ் போய் உங்க படைப்பை பாத்து ரசிச்சாச்சு. உண்மைதான் பக்தியும் சிரத்தையும்தான் முக்கியம். பாட்டு பாடறது இறைவன் கொடுக்கிற வரம்.
@ மௌலி
இப்ப வாரம் 5 பதிவுகள்ன்னு மாத்திட்டேன். திங்கள் முதல் வெள்ளி முடிய. ஏனோ நேத்து இணைய இணைப்பு சரியில்லாம போஸ்ட் ஆகலை.
Post a Comment