Pages

Thursday, July 3, 2008

சாப்பிட்டு முடிச்சாச்சா



சாப்பிட்டு முடிச்சாச்சா?

கொஞ்சம் தண்ணீர் குடிச்சு நகர்ந்து போய் 18 முறை வாய் கொப்பளிக்கணும். (ரொம்ப நாள் முன்னே பல் வைத்தியர்கிட்டே போக வேண்டி இருந்தது. என் விஸ்டம் பல் தொந்திரவு செய்யுதுன்னு அதை பிடுங்கிட்டார். அப்புறம் நாலு நாள் பல் தேய்க்காதே. அதுக்கு பதிலா 18 தரம் கொப்பளிச்சுடுன்னார்!) தண்ணியை இடது பக்கமா துப்பணும்.

சர்யாதி என்கிற அரசனையும் சுகன்யா என்கிற அவரோட பெண்ணையும் ச்யவனர் என்கிற ரிஷியையும் (அதே ச்யவன ப்ராஷ் ரிஷிதான்!) இந்திரன், அச்வினி குமாரர்களையும் நினைத்துக்கொண்டு கண்களை நனைக்கணும். ஈரமான கட்டை விரல்களால கண்களை தேய்க்கனுமாம். அப்ப கண் நோய்கள் வராதாம். கௌதமர் சொல்கிறார்.

நல்ல வெத்திலை, நல்ல சுண்ணாம்பு, நல்ல பாக்கு இதெல்லாம் சேத்து தாம்பூலம் எடுத்துக்கலாம். இது ஜீரணத்துக்கு உதவும். வெள்ளிக்கிழமை கட்டாயம் செய்யணும் என்கிறார்கள் சிலர். லக்ஷ்மி காடாக்ஷம் கிடைக்குமாம்.

எப்போதுமே வெத்திலை பாக்கு சாப்பிட்டால் ஆயுஸ், புத்தி, பலம், ப்ரக்ஞை, வீரியம், இதெல்லாம் நசிக்கப்படும். நாக்குக்கு ருசியே தெரியாம போகும்.

200 அடிகள் நடக்கணுமாம். பிறகு உட்கார்ந்து வேலை செய்யலாம். வேதம்/ இதிகாஸ புராணம், சாஸ்திரம் இதெல்லாம் படிக்கலாம்.

அப்புறமா குடும்பத்துக்கு வேண்டியதை எல்லாம் கவனிக்கணும் - லௌகிக சமாசாரங்கள்.

7 comments:

geethasmbsvm6 said...

//சர்யாதி என்கிற அரசனையும் சுகன்யா என்கிற அவரோட பெண்ணையும் ச்யவனர் என்கிற ரிஷியையும் (அதே ச்யவன ப்ராஷ் ரிஷிதான்!) இந்திரன், அச்வினி குமாரர்களையும் நினைத்துக்கொண்டு கண்களை நனைக்கணும்.//

இதுக்கெல்லாம் காரணமும் சேர்த்துச் சொல்லி இருக்கலாமோ????

திவாண்ணா said...

காரணம்... விளக்கம்ன்னு வேண்டுமானால் சொல்லலாம். அது பெரிய கதை ஆச்சே!

மெளலி (மதுரையம்பதி) said...

//காரணம்... விளக்கம்ன்னு வேண்டுமானால் சொல்லலாம். அது பெரிய கதை ஆச்சே//

நான் ஸ்ரீவத்ஸ கோத்திரத்தின் பஞ்ச ரிஷிகளை பற்றி ஒரு தொடர் எழுத இருக்கிறேன்....அதில் இதுவும் வரும். :-)

திவாண்ணா said...

@மௌலி
ஆஹா! ஒரு புண்ணியவான் புத்த்கமே போட்டுட்டார். கிரி ட்ரேடிங்க்ல வாங்கினேன்.
நான் படிச்ச உடனே பையர் தள்ளிட்டு போயிட்டார். புத்தகம் இன்னும் திரும்பி வரலை!

geethasmbsvm6 said...

//நான் படிச்ச உடனே பையர் தள்ளிட்டு போயிட்டார். புத்தகம் இன்னும் திரும்பி வரலை!//

ம்ம்ம்ம்ம், கத்துக்கணும், நமக்குத் தெரியலை!!!! கிரி ட்ரேடர்ஸா??/ ஓகே! பார்க்கிறேன்!!!!

geethasmbsvm6 said...

//நான் ஸ்ரீவத்ஸ கோத்திரத்தின் பஞ்ச ரிஷிகளை பற்றி ஒரு தொடர் எழுத இருக்கிறேன்....அதில் இதுவும் வரும். :-)//

ரொம்பவே சுயபுராணமாப் போயிடாது???? :P

மெளலி (மதுரையம்பதி) said...

//ஆஹா! ஒரு புண்ணியவான் புத்த்கமே போட்டுட்டார். கிரி ட்ரேடிங்க்ல வாங்கினேன்//

அப்படியா?....அப்ப சரி, ஒரு வேலை மிச்சம்.. :)