Pages

Thursday, July 10, 2008

தினசரி கர்மா அல்லாத நித்திய கர்மா


நித்திய கர்மா குறித்து கொஞ்சம் குழப்பம் இருந்தது. அதனால் பதிவு ஒரு நாள் தள்ளி போட்டேன்.
நித்திய கர்மா என்கிறது தினசரி கர்மா என்று சாதாரணமா அர்த்தம் பண்ணிகிட்டாலும் எப்போதுமே வரும் கர்மா என்பதே சரியான அர்த்தம்.
தினசரி கர்மாவா இல்லாம நித்திய கர்மாவா வருகிறவை பலதும் இருக்கு. நீத்தார் சடங்குகளை தவிர்த்த மற்றது எல்லாம் சிலரே செய்யறாங்க. அதெல்லாம் 40 சம்ஸ்காரங்களை பாக்கிறப்ப வந்துடும்.

நீத்தார் சடங்குகள்ல அமாவாசை தர்ப்பணம் முக்கிய எல்லாருக்கும் தெரிஞ்சது. இது சேத்து ஷண்ணவதி தர்ப்பணம் ன்னு வருஷத்துக்கு 96 நாட்கள் தர்ப்பணங்கள் இருக்கு. செய்கிறவங்க ரொம்பவே கம்மிதான். அமாவாசை தர்ப்பணமே சிராத்தம் செய்கிறதுக்கு பதிலா செய்கிறதுதான். 96 நாட்கள் தர்ப்பணமே அரிதா இருக்கிறப்ப மிகவும் அரிதாதான் 96 சிராத்தம் இருக்கு.

பட்டியல் போடுவோமா?
வருட பிறப்பு -1
அயன பிறப்பு (தக்ஷிணாயனம், உத்தராயணம்) -2
ஸௌர மாத பிறப்பு -12
அமாவாசை -12
மன்வாதி 14
யுகாதிகள் 4
பூர்வேத்யு, அன்வஷ்டகா, அஷ்கா. 12
( இதெல்லாம் ஹேமந்த சிசிர ருதுக்கள்ல வருகிற க்ருஷ்ணபக்ஷ அஷ்டமிகள், அதன் முன் திதி, பின் திதி. )
மஹாலய பக்ஷம் 15
வ்யதீபாதம் 12
வைத்ருதி 12

இல்லீங்க, இதெல்லாம் நம்ம பார்லிமெண்ட் கட்சி நிலவரம் இல்ல.
:-))
எப்படி 96 சிராத்தம் வந்தது? என்கிறதுக்கு கணக்கு.


கூடவே வருடா வருடம் வருகிற திதிகளில (ஆப்திக) சிராத்தம் - இப்படி 96 இருக்காம்.

நிறைய பேர் இந்த காலத்தில கஷ்டப்படுகிறது நீத்தார் என்கிற பித்ருக்கள் கடனை சரியா செய்யாத்தாலன்னு சில பெரியவங்க சொல்றாங்க.
இந்த சிராத்தங்கள்ல குழந்தை இல்லாதவர்களுக்கு உதவக்கூடிய ஒரு நடைமுறை கூட இருக்கு. இது பலருக்கும் தெரியாம போச்சு.

குறிப்பிட்டதெல்லாம் நித்திய கர்மா. அப்படி இல்லாம காம்ய சிராத்தம் கூட உண்டு. அதாவது சில விஷயங்கள் வேண்டும்ன்னு பித்ருக்கள் ஆசிகளை வேண்டியும் பலன் கிடைக்கவும் செய்கிறது.ஸ்வர்க்கம், பிள்ளை, பெண்கள், ஓஜஸ், சௌர்யம், பூமி, பலம், புத்திரர்கள், சிறப்பு, சௌபாக்கியம், ஸம்ருத்தி, ரோகமின்மை. கீர்த்தி ... இப்படி பல விஷயங்களை வேண்டி இதை செய்யலாம்ன்னு யாக்ஞவல்கியர் சொல்றார். இந்த இந்த கிழமைகள், இந்த இந்த நக்ஷத்திரங்கள், யோகம், கரணம் இப்படி எல்லாம் சொல்லி அந்த அந்த நேரத்துல எந்த விஷயம் வேண்டி சிராத்தம் செய்யலாம்ன்னு பட்டியல் இருக்கு. தேவையானவங்க தேடி கண்டு பிடிச்சுக்கலாம்.

பாத்தீங்களா, திடீர்ன்னு நித்தியத்துலேந்து காம்யத்துக்கு போயிட்டோம்? ஏன்னா அதுதான் அடுத்த டாபிக். சிராத்தம் பத்தி பேசறப்பவே சொல்லிடலாமேன்னுதான்...

நடுல நைமித்திகம்ன்னு ஒண்ணு இருக்கு. அதாவது ஒரு நிமித்தத்தை முன்னிட்டு வருகிறது. அது எப்பவுமே வரதில்லை. ஏதாவது ஒரு அசாதாரண சந்தர்பத்தில வரது. உதாரணமா அக்னிஹோத்ரியோட அக்னிஹோத்திர சாலை எரிஞ்சு போச்சுனா இந்த தேவதைய உத்தேசிச்சு ஒரு இஷ்டி செய்யணும்ன்னு இருக்கு. இது போல இருக்கிற சிலது நைமித்திகம்.

அடுத்து காம்ய கர்மாக்களுக்கு போவோம்.


11 comments:

geethasmbsvm6 said...

//அடுத்து காம்ய கர்மாக்களுக்கு போவோம்.//

விளக்கம் தெளிவா இல்லையோ??? அதுக்குள்ளே காம்ய கர்மாவுக்குப் போனா என்ன அர்த்தம்??

geethasmbsvm6 said...

//வருட பிறப்பு -1
அயன பிறப்பு (தக்ஷிணாயனம், உத்தராயணம்) -2
ஸௌர மாத பிறப்பு -12
அமாவாசை -12//

இது வரைக்கும் சரி, புரியுது.


//மன்வாதி 14
யுகாதிகள் 4
பூர்வேத்யு, அன்வஷ்டகா, அஷ்கா. 12//
இது கொஞ்சம் இல்லை, நல்லாவே புரியலை, ஆனால் தேய் பிறை அஷ்டமி, முன் திதி, பின் திதியில் செய்யறவங்களைப் பார்த்ததுண்டு. காரணம் தெரியாது. அப்போ ரொம்பச் சின்ன வயசுங்கறதாலே இதெல்லாம் சொல்ல மாட்டாங்க.

//மஹாலய பக்ஷம் 15//
இது ஓகே, நல்லாவே தெரியும்,


//வ்யதீபாதம் 12
வைத்ருதி 12//

இது புரியலை!

இதை எல்லாம் விளக்கமாச் சொல்லிட்டு அடுத்துப் போகமுடியுமா??????????????

ramesh sadasivam said...

நண்பரே தாங்கள் கேட்ட கேள்விக்கு விளக்கம் தந்திருக்கிறேன். விவாதிக்க அழைக்கிறேன். நல்வரவு.

ramesh sadasivam said...

நண்பர் திவாவிற்கு வணக்கம். தங்கள் கேள்விக்கு கருத்து தெரிவிக்கும் பகுதியில் பதில் சொல்லியிருக்கிறேன். மேலும் ஒரு விளக்க கட்டுரையும் என் தளத்தில் பதிவு செய்திருக்கிறேன். தங்கள் கருத்தை தெரிவிக்கவும்.

ambi said...

ம்ம், கயாவுல தமக்கு தாமே கர்மா செஞ்சுட்டா அப்புறம் தம் பிள்ளைகள் தமக்கு செய்யலைன்னாலும் பரவாயில்லைன்னு ஒன்னு இருக்காமே நெஜமா?

Geetha Sambasivam said...

//ம்ம், கயாவுல தமக்கு தாமே கர்மா செஞ்சுட்டா அப்புறம் தம் பிள்ளைகள் தமக்கு செய்யலைன்னாலும் பரவாயில்லைன்னு ஒன்னு இருக்காமே நெஜமா?//
@அம்பி, கயாவிலே யாருக்கு வேணா பிண்டம் போடலாம், எதிரிகள், நண்பர்கள், தெரிந்த, தெரியாதவர்கள், பறவைகள், மிருகங்கள், வளர்ப்புப் பிராணிகள் என அனைத்துக்கும் பிண்டம் போடலாம், அப்படியே ஆத்மபிண்டமும் உண்டு. இதுதான் நீங்க கேட்டது. ஆனால் அதனால் சிரார்த்தம் செய்யக் கூடாது என்றோ, இல்லை அப்பா ஆத்மபிண்டம் போட்டுக் கொண்டதினால் பையன் கர்மா செய்யவேண்டாம் என்பதோ இல்லை. நாங்க காசிக்கும், கயாவுக்கும் போயிட்டு வந்து பத்து வருஷத்துக்கு மேலே ஆச்சு, ஆனால் இன்னமும் சிரார்த்தம் செய்து கொண்டுதான் இருக்கின்றோம். இது கட்டாயம் செய்யவேண்டிய ஒன்று. காசி, கயாவில் செய்வது வைப்பு நிதி என்றால், இது அன்றாட சேமிப்பு என்று கொள்ளலாம். ஓரளவு புரியறாப்பலே சொல்றேன்னு நினைக்கிறேன்.

திவாண்ணா said...

ம்ம்ம்ம்ம்ம்ம்
நான் இதை படிச்சுட்டு அம்பிக்கு பதில் சொல்லி இருக்கணும். வேலை மிச்சமாகி இருக்கும்.

geethasmbsvm6 said...

//ம்ம்ம்ம்ம்ம்ம்
நான் இதை படிச்சுட்டு அம்பிக்கு பதில் சொல்லி இருக்கணும். வேலை மிச்சமாகி இருக்கும்.//
அ.கு.ன்னா இப்படித் தான்! :P

மெளலி (மதுரையம்பதி) said...

மிக அறிதானவற்றை எழுதியிருக்கீங்க திவாண்ணா..பலரும் அறியவேண்டிய ஒன்று.

//ஆனால் அதனால் சிரார்த்தம் செய்யக் கூடாது என்றோ, இல்லை அப்பா ஆத்மபிண்டம் போட்டுக் கொண்டதினால் பையன் கர்மா செய்யவேண்டாம் என்பதோ இல்லை. இது கட்டாயம் செய்யவேண்டிய ஒன்று.//

மிகவும் உண்மை.

geethasmbsvm6 said...

//ஆனால் அதனால் சிரார்த்தம் செய்யக் கூடாது என்றோ, இல்லை அப்பா ஆத்மபிண்டம் போட்டுக் கொண்டதினால் பையன் கர்மா செய்யவேண்டாம் என்பதோ இல்லை. இது கட்டாயம் செய்யவேண்டிய ஒன்று.//

மிகவும் உண்மை.//
sari, sari, aanal ithai chonnathu "Thivaannaa"(grrrrr) illai, me!!!!!!!

திவாண்ணா said...

//sari, sari, aanal ithai chonnathu "Thivaannaa"(grrrrr) illai, me!!!!!!!//

அதாகப்பட்டது, மௌலியின் பின்னூட்டத்துல 2 பாகம்.
ஒண்ணு, க்கும், என்னை பாராட்டினது.
இரண்டு, நீங்க எழுதினது ரொம்ப சரின்னு சொன்னது.
ஆமாம் திவாண்ணான்னு சொன்னா ஏன் இவளோ கடுப்பு?
:-))))))))))))))))))
சரியாதான் சொல்றாருஃ