Wednesday, July 23, 2008
சீமந்தம்
சீமந்தம் என்கிற சீமந்தோநயனம்:
இது சம்ஸ்காரங்களில் மூன்றாவது.
சீமந்தோநயனம் அப்படினா வகிடு பிளக்கிறதுன்னு அர்த்தம்.
முதல் கர்ப்பத்தின் ஐந்தாம் மாசம் முதல் எட்டாம் மாசம் வரை செய்யலாம்.
இதுல முக்கியமா வெள்ளை நிறம் இருக்கிற முள்ளம் பன்றி முள், நெற்கதிர், அத்தி (ஔதும்பர) மரத்தோட சிறு கிளை இவைகளால பெண்ணோட வகிடு பிரிக்கிறாங்க. (அதாவது நெற்றியில் ஆரம்பித்து மேல் நோக்கி இழுக்கணும்) இப்படி செய்கிறதால் பெண்ணின் மனதிலே இருக்கிற கிலேசங்கள் அகலும். சந்தோஷமா இருப்பாங்க. குழந்தையும் நல்லா இருக்கும்.
இதில கூப்பிடுகிற தேவதை ராகா. இந்த தேவதை பௌர்ணமி சந்திரனுக்கு தேவதை. அப்ப கர்ப்பம் பயனுள்ளதா இருக்கும்; முள்ளம்பன்ரி முள் போல கூர்மையா புத்தி இருக்கும்; பூர்ண சந்திரம் போல குழந்தை அழகா இருக்கும்.
மந்திர அர்த்த சுருக்கம்:
ராகா தேவதையை வேண்டுகிறேன். இந்த கர்மா பழுதில்லாமல் இருக்கட்டும். என் மகன் கூர்மையான புத்தியுடன் இருக்கட்டும். ராகா நமக்கு நிறைய செல்வங்களையும் ஆயிரம் வகையில் அபிவிருத்திகளும் கொடுத்து வளர்க்க வேணும்.
இந்த கர்மா போது வாத்தியங்கள் குறிப்பா வீணை வாசிக்க சொல்கிறங்க. தான் வசிக்கும் இடத்தில் இருக்கிற நதியின் பெயரை சொல்லி ஒருமந்திரத்தை வீணை வாசிக்க தெரிந்தவர்களை கொண்டு வாசிக்க சொல்ல வேண்டும். இது மன அமைதி தரதோட பால் தரும் திறனை அதிகப்படுத்துகிறதாம். பெண்களும் வீரனான குழந்தையை பெற்று எடுப்பாய் ன்னு பாடுவாங்களாம்.
பெண்ணின் தலையில் நெற்கதிரை வைக்கணும். எஜமானனும் கர்ப்பிணி மனைவியும் அன்னைக்கு நக்ஷத்திர உதயம் வரை மௌனமா உபவாசம் இருக்கணும். முடிவில ஒரு காளை கன்னுகுட்டியை தொடணும்.
இனி குழந்தை பிறந்த பிறகு செய்கிற கர்மாக்கள்.
Labels:
இரண்டாம் சுற்று
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
ரொம்பவே நுணுக்கமான தகவல்கள். நெற்கதிர் வெச்ச நினைவு இருக்கு.
அதெல்லாம் விடுங்க, முள்ளம்பன்றியின் முள்னு சொன்னா ஆச்சா? அது ஆண் முபன்றியா? பெண் முபன்றியா? :p
என்னா கூர்மையான அறிவுன்னு வேற சொல்லி இருக்கீங்க. பெண்முபன்றிக்கு தான் அறிவு அதிகம்னு சில பேர் வாதாடுவாங்க இல்லையா? :))
Nowadays Tom is gaining its glory. :p
பரவாயில்லையே! ஞாபகம் இருக்கா?
சாதாரணமா இந்த மாதிரி கர்மாக்கள்ல என்ன செய்யறோம்னே தெரியாது! சொல்லிக்கொடுத்த மாதிரி செஞ்சுட்டு போயிருவோம்!
ஆ.மு.ப வா பெ.மு.ப வான்னு கேக்கறீங்க! யாருக்கு தெரியும்? மு.ப வோட முள் சுலபமா உடையும். அது வேணும்னா மு.ப உலவற இடத்துக்கு போய் எடுத்து வருவாங்க. அதோட முள்ள பிக்கிற தைரியம் யாருக்கும் இருக்குமோ?
:-))
ஆமாம். அது எலி குடும்பத்தை சேர்ந்ததுன்னு தெரியுமில்லையா?
//Nowadays Tom is gaining its glory. :p//
தங்கமணியை கேட்டுதான் ஏத்துக்கணும். உங்க ப்ளாகை பாத்தா அப்படி தெரியலே!
:-))
//அதோட முள்ள பிக்கிற தைரியம் யாருக்கும் இருக்குமோ?
:-))
ஆமாம். அது எலி குடும்பத்தை சேர்ந்ததுன்னு தெரியுமில்லையா?
//
சரியா சொன்னீங்க. ஒன்னரை வருடங்களுக்கு முன்னால் சிருங்கேரி போயிட்டு வரும் வழியில் உடுப்பி, கொல்லூர், மங்களூர் வழியாக மீண்டும் பெங்களூர் திரும்பும் போது இரவு சுமார் 12 மணி இருக்கும்.
எங்கள் பஸ்ஸுக்கு எதிர்புறம் வந்த ஒரு பஸ் அப்படியே நின்று விட்டது. பொதுவா இரவு பயணங்களில் நான் அதிகம் தூங்க மாட்டேன். என்னனு ஜன்னல் வழியா பாத்தா நடு ரோடில் ஒரு முள்ளம் பன்றி ரோடை கிராஸ் செய்து கொண்டிருக்கிறது. அந்த வண்டி கவனிக்காமல் ஏத்தி இருந்தால் டயர் பஞ்சர் தான். புத்திசாலி டிரைவர். :))
Nowadays Tom is gaining its glory. :p
never Tom! no Alnasher dreams please! :P
ம்ம்ம் அல்நாஷர் ஸ்பெல்லிங் சரியா போட்டேனோ?? தெரியலை, பப்ளிஷ் கொடுத்துட்டேனே! :P
@அம்பி,
அனுபவம் சுவாரசியமானது!
@கீ அக்கா,
ம்ம்ம்... என்னவோ செகபிரியர் எல்லாம் படிக்கிறீங்க! எங்களுக்கு எங்கே அல்நாஷர் எல்லாம் தெரியுது?
:-))
Post a Comment