Pages

Thursday, July 17, 2008

கோவில் காளை



கோவில் காளைன்னு கேள்வி பட்டு இருக்கோமில்லியா?
கிராமத்திலே யாருக்கும் அடங்காம - யாரும் அடக்க நினைக்காம – பொறுப்பில்லாம, எங்கே வேண்டுமாலும் போய் என்ன வேண்டுமானாலும் செய்கிற இளைஞர் ஒத்தர் இருப்பார். அவரை "என்னடா, கோவில் காளைமாதிரி சுத்தி திறியறியே" என்பாங்க.

அந்த கோவில் காளை இந்த விஷயம்தான்.

அந்தணர்கள் மட்டும் செய்கிற கர்மா இல்லை வ்ருஷோற்சர்கம். எல்லாருமே செய்வது. நல்ல காளை கன்னுக்குட்டி லட்சணமா பிறந்தா "நேர்ந்து கொண்டு" அது கொஞ்சம் வளர்ந்த பிறகு பூஜை செய்து வலது பக்கம் பின்னால் சூலம் மாதிரி சூடு போட்டு விரட்டி விடுவார்கள். அது சும்மா ஜாலியா எங்கே வேண்டுமானாலும் சுத்தி திரியும். எங்கே வேண்டுமானாலும் போய் மேயும். யாரும் அதை விரட்ட மாட்டாங்க. காரணம்?

மந்தையா மேய்கிற பசு மாடுகளை கர்ப்பம் ஆக்குவது இதுதான். இது நல்லா இருந்தாதானே பிறக்கிற கன்றுகளும் நல்லா இருக்கும்? அதனால யாரும் ஒண்ணும் செய்ய மாட்டாங்க.

முன்னே எல்லாம் எல்லாரும் மாட்டுக்கொட்டில், பசுக்கள் எல்லாம் வைத்து இருந்தாங்க. நிறைய பசுக்கள் இருப்பது பெரிய செல்வமா கருதினாங்க.
இப்ப நிறைய சமுதாய "முன்னேற்றம்" வந்து விட்டது. மாடு மேய்க்கவோ பராமரிக்கவோ யாரும் தயார் இல்லை. அப்படியும் சில பேர் பால் வியாபாரத்துக்காக வைத்து இருப்பவங்க யாரும் காளை கன்னுக்குட்டி பிறந்தா வைத்துக்கொள்வதில்லே. கசாப்பு கடைக்கு வித்துடறாங்க. இப்பதான் பசுக்கள் கர்ப்பம் அடையறது ஊசி மூலமாதானே?
அதனாலே இப்ப இந்த கர்மாவை செய்கிற அந்தணர்கள் கூட ப்ரத்யக்ஷமா செய்கிறதில்லை. தேங்காயை வைத்து மந்திரங்களை சொல்லி உருட்டி விடராங்க.

கொஞ்ச நாள் முன் வரை கோவிலுக்கு காளை கன்னு விட்டுகிட்டு இருந்தாங்க. அவங்களும் வாங்கிக்கொண்டு பராமரிச்சாங்க. பிறகு கோவிலேயும் வைத்து பராமரிக்காம ஏலத்துல விட ஆரம்பிச்சாங்க. இதைப்பத்தி சில கசமுசா எழ இப்பெல்லாம் வாங்கிறதில்லைன்னு கேள்வி. இல்லை நிறைய சட்ட திட்டங்கள் போடராங்களாம்.
சொல்ல வந்தது என்னன்னா கொஞ்சம் சிரம சாத்தியமாவே இருக்கிற இப்பவே முடிஞ்சா செய்துடுவோம்.

செய்யக்கூடிய இடங்கள் யாருக்கும் தெரிய வந்தா தயை செய்து சொல்லுங்க.
இன்னும் கொஞ்சம் நாள் போனா இதுவும் கஷ்டமாயிடும்.

8 comments:

geethasmbsvm6 said...

ம்ம்ம்ம்., இது இன்னிக்கும், இப்போவும் வட இந்தியாவில் இருக்கின்றது. நிறையக் காளைகள் இப்படித் திரிவதைக் காணலாம். முன்பெல்லாம் பெரிய ஊர்களில் தமிழ் நாட்டில் காண முடிந்தது. இப்போ இல்லை. ஆனால் நாங்க கோவிலுக்கு ஆட்டுக் கிடா, வாங்கி விட்டிருக்கோம். அந்த ஆடு அப்புறமா என்ன ஆச்சுனு தெரியலை! :(((( இது பத்தி மேலும் விபரங்கள் அறியணும்னா கி.ராஜநாராயணனின் "கோபல்ல கிராமம்"?? அல்லது "கரிசல் காட்டுக் கடிதாசி"??? இந்த இரண்டிலே ஏதோ ஒன்றிலே படிக்கலாம்.

ambi said...

//நாங்க கோவிலுக்கு ஆட்டுக் கிடா, வாங்கி விட்டிருக்கோம். அந்த ஆடு அப்புறமா என்ன ஆச்சுனு தெரியலை! :(((( இது பத்தி மேலும் விபரங்கள் அறியணும்னா கி.ராஜநாராயணனின் "கோபல்ல கிராமம்"?? அல்லது "கரிசல் காட்டுக் கடிதாசி"??? இந்த இரண்டிலே ஏதோ ஒன்றிலே படிக்கலாம்.
//

ஹிஹி, நீங்க வாங்கி விட்ட ஆட்டை பத்தி கி.ரா எல்லாம் எழுதி இருக்காரா? பேஷ்! பேஷ்! :)))

திவாண்ணா said...

கரிசல் காட்டு கடிதாசி படிச்சு ஆனந்தமடைஞ்சு இருக்கேன். அழகாவே பல விஷயங்கள் சொல்லி இருக்கார்.

அம்பியோட சென்ஸ் ஆஃப் ஹ்யூமர் எனக்கு எந்த காலத்திலேயும் வருமான்னு தெரியலை.
:-))
very sharp!

Geetha Sambasivam said...

//ஹிஹி, நீங்க வாங்கி விட்ட ஆட்டை பத்தி கி.ரா எல்லாம் எழுதி இருக்காரா? பேஷ்! பேஷ்! :)))//

enna, rombave aattam jasthiya irukkee?? enna vishayam?? thangamani intha varam puri kattai adi kodukkalai?? :P :P :P


//அம்பியோட சென்ஸ் ஆஃப் ஹ்யூமர் எனக்கு எந்த காலத்திலேயும் வருமான்னு தெரியலை.
:-))
very sharp!//

sirikkave theriyathavangalukellaam sense of humour??? grrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr

மெளலி (மதுரையம்பதி) said...

நாங்க என் தந்தையின் கர்மாவில் செய்தோம்...ஆனா கோ தானத்துக்கு தங்கத்தில் 1 கிராம் காயினும் மட்டை தேங்காயும் தான்.

4 கோதானம் வருகிறது முதல் நாளிலிருந்து 12ஆம் நாள் வரை.

திவாண்ணா said...

@ மௌலி
அந்த 10 நாள்ல சொல்லியபடி தக்ஷிணை எல்லாம் கொடுப்பது இந்த காலத்துல சாத்தியமான்னு அடிக்கடி தோணும்.
இறந்து போவது நிறைய செலவு வைக்கிறது இந்த நாட்கள்ல....
:-(

மெளலி (மதுரையம்பதி) said...

//அந்த 10 நாள்ல சொல்லியபடி தக்ஷிணை எல்லாம் கொடுப்பது இந்த காலத்துல சாத்தியமான்னு அடிக்கடி தோணும்//

நம்புகிறவர்கள், சக்தியிருப்பவர்கள் இன்றும் செய்கிறார்கள் திவாண்ணா.

திவாண்ணா said...

@ mauli
கேக்கவே சந்தோஷமா இருக்கு!
:)