Wednesday, July 30, 2008
உபநயனம் 1
உபநயனம்:
வேதத்தை கற்பதற்கு வேத விதிப்படி செய்கிர சம்ஸ்காரம் இது।
உபநயனம் ன்னா கிட்டே கொண்டு போகிறது ன்னு பொருள்। எந்த கர்மாவால வேத வித்தைக்காக மாணவன் குருகிட்டே அழைத்துக்கொள்ள படுவானோ அதுக்கு உபநயனம் ன்னு பெயர். அந்தண க்ஷத்திரிய வைச்யர்களுக்கு தாயால முதல் பிறப்பும் உபநயனத்தால இரண்டாவது பிறப்பும் ஏற்படுகின்றன. இதனால இவர்களுக்கு த்விஜர் (இரு பிறப்பாளர்) என்று பெயர்.
இந்த கர்மா ஆண் பிள்ளைகளுக்குத்தான். பெண்களுக்கு இதற்கு பதிலா திருமணம் ன்னு சொல்லிட்டாங்க.
உண்மையில இதை செய்து வைக்க வேண்டியவர் வேதம் சொல்லித்தரப்போற குரு.
இப்ப இது பெரும்பாலும் வெத்து சடங்கா போயிட்டதால பையனோட அப்பாவே செய்கிறார். செய்து வைக்க அப்பா இல்லைனா அப்பப்பா; அவர் இல்லைனா செய்து வைக்க தகுதி உள்ளவங்க இந்த வரிசைல : அண்ணா, தாயாதி, அதே கோத்திரத்தை சேர்ந்தவங்க இப்படின்னு பட்டியலே இருக்கு. சன்யாசிகள் செய்து வைக்கக்கூடாது. மனைவி இல்லாதவர் செய்து வைக்கிறதும் அதமம்.
கொஞ்சம் கூட ஞானம் இல்லாதவர் செய்து வைக்கிறதும் உபநயனத்தால கொஞ்சம் கூட ஞானத்தை நாடாததும் இருட்டிலிருந்து இருட்டுக்கு போகிறது போலவாம். ஏழு வயதில் அந்தண சிறுவனுக்கும் அவன் நல்ல புத்தி கூர்மை இருந்தா ஐந்து வயசிலேயும் உபநயனம் செய்விக்கலாம். சக்தியை அனுசரித்து பதினாறு வயது வரை தள்ளிப்போடலாம்.
மாணவன் யாரிடமிருந்து தர்மத்தையும் அனுஷ்டானங்களையும் கத்துக்கொள்கிறானோ அவரே ஆசாரியர். உடம்பை மட்டும்தான் அப்பா அம்மா தராங்க. வாழ்கைக்கு தேவையான ஞானத்தை தரவர் ஆச்சாரியர்தான். அதனால அவருக்கு எப்பவுமே தீங்கு நினைக்கறதோ அபசாரம் செய்கிறதோ கூடாது.
உபநயன காலத்தில் குருவானவர் மாணவனை ஒரு கல்லின் மேல் காலை ஊன்றி நிற்கச்சொல்லி ஆசீர்வதிக்கிறார். “ இந்த கல்லைப்போல வலிமை கொண்ட உடலும் உறுதி கொண்ட நெஞ்சமும் உடையவனாக நீ இருக்க வேண்டும். உன் விரதங்களுக்கு ஊறு செய்பவர்களை எதிர்த்துப்போராடி நீ விரட்டி அடிக்க வேண்டும். சந்தியாவந்தனத்தையும் மற்ற கடமைகளையும் தவறாமல் செய்வாயாக. அறியாமையில் இருந்து விழித்து எழு. உறங்காதே.!"
உபநயன காலத்தில் அளிக்கப்படுகிற காயத்ரீ மந்திரம் எல்லா மந்திரங்களிலும் சிறந்ததாக சொல்கிறங்க. அதனாலேயே இதுக்கு பிரம்மோபதேசம் ன்னு பேர். பிரபஞ்ச சாரத்துல சங்கரர் சொல்றார்: இகத்திலேயும் பரத்திலேயும் நல்வாழ்கையை நாடும் த்விஜர்களால் இந்த மந்திரம் ஜபித்தற்கு உரியது.
Labels:
இரண்டாம் சுற்று
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
ம்ம், ஆபிஸில் இருப்பதால் மாத்யானிகம் தொடர்ச்சியாக செய்யாத குற்ற உணர்ச்சியுடன் இந்த பின்னூட்டத்தை இடுகிறேன். :(
விடியும் முன் ஆபீஸுக்கு கிளம்புவதாக இருந்தாலே ஒழிய காலை ஆபீஸுக்கு போகு முன் செய்து விட்டே போய்விடலாம். இதற்கு பரமாச்சாரியாரே கன்செஷன் கொடுத்து இருக்கிறார். இல்லையானால் கை கால் சுத்தம் செய்து கொண்டு கிரியை இல்லாமல் மந்திரங்களை மட்டும் மனதில் ஜபிக்கலாம்.
அவசர கால சந்தியா உபாசனை பற்றி பின்னால் எழுதுகிறேன்
// கை கால் சுத்தம் செய்து கொண்டு கிரியை இல்லாமல் மந்திரங்களை மட்டும் மனதில் ஜபிக்கலாம்//
இது!!, இது பாயிண்ட்.. :)
//பெண்களுக்கு இதற்கு பதிலா திருமணம் ன்னு சொல்லிட்டாங்க//
பழைய காலப் படங்களில் பல பெண் தெய்வங்களுக்கு பூணூல் போன்ற ஒன்று இருக்கறதை கவனித்திருக்கிறேன். அது என்ன?
// பழைய காலப் படங்களில் பல பெண் தெய்வங்களுக்கு பூணூல் போன்ற ஒன்று இருக்கறதை கவனித்திருக்கிறேன். அது என்ன?
//
பெண்களுக்கு உபவீதம் உண்டுன்னு சிலர் சொல்வதுண்டு, கெள்வி பட்டு இருக்கேன்.
என்ன பிரமாணம்ன்னு தெரியலை. எங்க அண்ணாவை கேடா சொல்லுவார். அடுத்த முறை போகும் போது கேட்கிறேன்.
ஸ்ரீ வித்யா பூஜை உபசாரத்திலே உண்டா?
// இது!!, இது பாயிண்ட்.. :)//
மௌலி அப்படிதான் செய்யறாரோ?
ஆஹா!
:-))
// இது!!, இது பாயிண்ட்.. :)//
மௌலி அப்படிதான் செய்யறாரோ?
ஆஹா!
:-))
மதுரையம்பதி அண்ணா பிரம்மதை நோக்கி போய் கொண்டு இருக்கிறார்,அதனால் பாதகம் இல்லை திவாண்ணா........:)
தம்பி
Post a Comment