Pages

Tuesday, July 29, 2008

குடுமி வைத்தல் -சௌளம்



சௌளம்

இது குடுமி வைப்பது. ஆண் குழந்தைகளுக்கு மட்டுமேன்னு சொல்ல வேண்டியது இல்லை.
பிறந்த வருஷத்திலேயோ அல்லது மூன்றாவது வருஷமோ செய்யலாம்.

லௌகிக அக்னியில் ஹோமங்கள்.
அக்னிக்கு மேற்கே கிழக்கு பார்த்து குமாரனை உட்கார வைத்து, மந்திரம் சொல்லி தலையை வென்னீர் கலந்த நீரால் நனைத்து,

மூன்று மூன்று தர்பங்களை இடையில் வைத்து, நான்கு மந்திரங்களால், ஒவ்வொரு மந்திரத்துக்கும் ஒவ்வொரு திசையிலும் முடியை வெட்ட  வேண்டும். வலது புறம் தாயாரோ அல்லது ஒரு பிரம்ம சாரியோ நின்று கொண்டு வெட்டியதை வாங்கிக்கொள்ள வேண்டும். அடுத்து காளையின் சாணியில் அவற்றையும் நெல்லையும் சேர்த்து அத்தி மரத்தின் அடியிலோ அல்லது நாணல் (பாத்து இருக்கீங்களாப்பா? ;-)) புதரின் அடியிலோ வைக்கணும். இதனால் முன்னேயே வாங்கிக்கொள்ளும் போதே ஒரு மடக்கில் நெல்லும் சாணமும் சேர்த்து அதிலேயே வாங்கிக்கொள்வதுண்டு.

குடுமி வைத்துக்கொள்வது இப்போது மிகவே அரிதாகி வருகிறது. நம் ஆத்ம சக்தியை விரயமாகாமல் இது கட்டிப்போடுகிறது. யாருக்கு கேசம் பிரிந்து இருக்கிறதோ அவர்களை தீய சக்திகள் எளிதில் அண்டுகின்றன. ஆண்களைப்பற்றி கேட்கவே வேண்டாம். பெண்களும் இப்போதெல்லாம் தலையை விரித்துப்போட்டுக்கொள்வது "நாகரீகம்" ஆகிவிட்டது. கேசத்தின் நுனி வெளியே தெரிவதாக இருந்தால் அது மேல் நோக்கி இருக்க வேண்டும். மடித்து உள்ளே போட்டுவிட்டால் (கொண்டை போல) பிரச்சினை இல்லை. இன்னும் கிராமத்து பெண்கள் தலை வாரி நுனியை மேல் நோக்கி மடித்து கட்டுவதை பார்த்து இருக்கிறேன். வெளியே தெரியாமல் இருக்கத்தான் ரிப்பன் வந்தது. இப்போது வழக்கொழிந்து போய்விட்டது. பிரச்சினைகளும் அதிகமாகி விட்டதல்லவா?

குடுமி வைத்தபின் அதை நீக்கிக்கொள்வது ஆத்ம ஹத்தியாக கருதப்படுகிறது (தற்கொலை). பாரத போரின் முடிவில் அச்வத்தாமாவை என்ன செய்வது, குரு புத்திரனாயிற்றே என்று யோசித்து அவன் சிகையை மட்டும் வெட்டிவிட்டதாக மஹாபாரதத்தில் வருகிறது அல்லவா?

யாருக்கு எப்படி இருக்கிறதோ எனக்கு ஒவ்வொரு பக்ஷமும் வபனம் செய்து கொள்ளாவிட்டால் உடம்பு உபாதையால் கஷ்டப்படுகிறேன். இது அனுபவம்.

2 comments:

ambi said...

குடுமி வேற சிகை வேற இல்லையா? சில பெரிய மனிதர்கள் சிகை வெச்சுக்கறாங்க, அதான் கேட்டேன்.

திவாண்ணா said...

இல்லை அம்பி. ஒண்ணேதான். ஆனால் பல வகைகள் உண்டு. முன் குடுமி, சைட் குடுமி, உச்சி குடுமி...BA குடுமி....!
;-))