Pages

Monday, July 21, 2008

கர்ப்பாதானம்



அடுத்து ஒருவர் வாழ்நாளில் வரும் கர்மாக்களை பாக்கலாம்.
இவற்றுக்கு சம்ஸ்காரங்கள் என்று பெயர். சம்ஸ்காரம் என்றால் "பண்படுத்துதல்" என்பதுதான் பொருள். மனிதனின் வாழ்க்கையை இவை பண்படுத்துவதால அப்படி பெயர் கொடுத்து இருக்காங்க.
மனித வாழ்க்கைக்கான சம்ஸ்காரம் பிறக்கிற முன்னேயே ஆரம்பிக்குது.
அதனால முதல்ல...
--
கர்ப்பாதானம்

இது குழந்தை பெற்றுக்கொள்ள ஏற்பட்ட கர்மா. இதுக்கெல்லாம் ஒரு கர்மாவான்னு கேட்டா, ஆமாம். நல்ல குழந்தை பெற்றுக்கொள்வது முக்கியமானதாலே அதுக்குன்னு பல சட்ட திட்டங்கள் உண்டு. கர்ப்பம் உண்டாகக்கூடிய காலம் ருதுக்காலம் ன்னு பேர். இந்த காலத்தில கர்ப்பம் தரிக்க நல்ல நாள் குறிப்பாங்க.

இதுக்கெல்லாம் நல்ல நாளா?

ஆமாம். பராசரர் நல்ல குழந்தை உண்டாவதற்கான நாளை கண்டு கொண்டதால தன் மனைவியுடன் கூட அவசரமா போகும் போது மழையால தடை வந்தது. நேரம் தப்பி விடுமோன்னு மச்சகந்தியை பரிமளகந்தியாக்கி, அவளோட கூட, வியாசர் பிறந்தார். அதனால நேரம் முக்கியம்தான்.

இதுல சொல்கிற மந்திரங்கள் நல்ல ஆண் குழந்தை பிறப்பை வேண்டிதான் இருக்கு. ஏன் ஆண் குழந்தைனா தனக்கு பின் ஆண் சந்ததி இருப்பதால பித்ரு காரியங்கள் தடங்காம நடக்கும் என்பதாலதான்.

பொதுவா இந்த நேரத்தில சொல்கிற மந்திரங்களோட அர்த்தம் இப்படி இருக்கு. "அரணியில் கட்டையை கடைவதால் ஏற்படக்கூடிய அக்னி போல, நீண்ட ஆயுளும் பலமும் கூடிய ஆண் குழந்தைகள் பிறக்கட்டும். நான் கடவுளின் ஒரு பகுதி. என் பித்ருக்களின் கட்டுகளை நீக்குவதற்காக நல்ல மகன்களை பெறுவேன். தேஜஸும் செல்வமும் கொண்ட புத்திரர்கள் உண்டாகட்டும். அவர்கள் தகுந்தவர்களுக்கு தேவையான தான தருமங்களை செய்து நீண்ட காலம் வாழட்டும். மோட்சத்தை அடையட்டும். இறைவன் உன்னை கர்ப்பம் தரிக்க தகுதி உள்ளவளாக செய்யட்டும். கெட்ட சக்திகள் உன்னை விட்டு அகலட்டும். உன் குழந்தைகள் ஊனம் ஏதும் இல்லாது இருக்கட்டும். நீ தெய்வீக காமதேனு போல இருப்பாயாக.


4 comments:

ambi said...

அர்த்தங்கள் மிகவும் பொருள் பொதிந்தவையாக உள்ளது.

மெளலி (மதுரையம்பதி) said...

சேஷ ஹோமத்து மந்திரங்களின் பொருளா இது?

பும்சுவனம் என்னும் கர்மாவிலும் பிறக்கும் குழந்தை ஆணாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்வதாக கேள்விப் பட்டிருக்கிறேன்.. :-)

geethasmbsvm6 said...

உள்ளேன் ஐயா!!! :)))))))

திவாண்ணா said...

@அம்பி
நன்றி
@மௌலி
இல்லையே. கர்ப்பாதானத்துக்காக நாள் குறித்து செய்ய வேண்டிய கர்மா. ஆனால் இப்போதான் 5 நாள் கல்யாணம் 3 மணி நேரத்துல முடிந்து போகிறதே! இதையும் சொல்லி விடுகிறார்கள்.

@ geethasmbsvm6 said...

// உள்ளேன் ஐயா!!! :)))))//

நன்றி அம்மா!