Pages

Friday, July 4, 2008

மாலை



நாளைக்கு போட வேண்டியது சேமிக்கும் முன்னால போஸ்ட் ஆயிடிச்சி. அத எப்படி நீக்கறதுன்னு தெரியலை.
சரி, வேலை மிச்சம்.
கீழே இருக்கறதை முதல்ல படிங்க. அப்புறமா இது.
நாளை போஸ்ட் இல்லை.
---------------------------------------
அப்புறமா குடும்பத்துக்கு வேண்டியதை எல்லாம் கவனிக்கணும்.

மாலை சூரிய உபாசனை முடித்து, அக்னி உபாசனையும் முடித்து, வைச்வதேவம் செய்து இரவு சாப்பாடு முடித்து உறங்கச்சொல்றார் வ்யாசர்.

மாலை ஔபாசன அக்னியில் ஹோமம் செய்கிறவன் அடைகிற பலன் மேரு மலை அளவு தங்கம் தானம் செய்வது; பல நூறு வாஜபேய யாகங்கள் செய்வது; கோடி கன்யாதானம் செய்வது இதுக்கெல்லாம் சமம் என்கிறார்.

இரவு பூஜை சிலர் செய்வர்.

கை, கால்களை கழுவி சுத்தம் செய்து துடைத்துக்கொண்டு, படுக்கையில் இடது பக்கமாக படுக்கணும். வடக்கு பக்கம் தவிர எந்த திசையும் பரவாயில்லை. தண்ணீர் சொம்பை தலை பக்கமா வைத்துக்கொள்ளணும். கருட மந்திரங்கள்/ வேத மந்திரங்கள் இதால ரக்ஷை செய்து கொண்டு படுக்கலாம்.

சுகமா தூங்குகிறவங்க அகத்தியர், மாதவர், முசுகுந்தர், கபிலர், அஸ்தீகர் இந்த 5 பேர். இவங்களை நினைச்சுகிட்டு தூங்கினா நல்லா தூங்கலாமாம்!

ருது காலத்தில் பத்னியை அடைய வேண்டும். மற்ற காலங்கள்ல காமம் இருந்தால் அடையலாம். (இது இந்திரன்கிட்டே அவங்க வாங்கின வரத்தால). சில நாட்கள் கூடாது என்கிறது சாஸ்திரம். இந்த கூடாத நாட்கள் எல்லாம் பாத்தா குடும்ப கட்டுப்பாடு தானே வந்துடும்! இரவோட பின் பாகத்தைதான் இதுக்கு பரிந்துரைக்கிறாங்க!

இப்படி எல்லாம் நித்திய கர்மா என்கிற தினசரி கர்மாக்களை கடை பிடிக்கிறவங்க எல்லா புருஷார்த்தங்களையும் (மனிதன் அடைய வேண்டியன எல்லாம்) அடைகிறாங்களாம்.


5 comments:

ambi said...

//வடக்கு பக்கம் தவிர எந்த திசையும் பரவாயில்லை.//

தெற்கு கூடவா?

அறிவியல் ரீதியாவும் இந்த நார்த் போல் சவுத் போல் சொல்றாங்களே, அது தானா?

போன பதிவும் படிச்சாசு. ஆனா இதுக்கு மட்டும் தான் பின்னூட்டம். :p

திவாண்ணா said...

ஆமாம் அம்பி, தெற்கு கூடதான்.குறிப்பா மாமனார் வீட்டுக்கு போனால். தன் வீட்டில் கிழக்கு; வெளியூர் போனால் மேற்கு. இப்படி கார்க்யர் சொல்றார்.

geethasmbsvm6 said...

தூங்கிட்டு வந்து படிக்கிறேன்! கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

மெளலி (மதுரையம்பதி) said...

//குறிப்பா மாமனார் வீட்டுக்கு போனால். தன் வீட்டில் கிழக்கு; வெளியூர் போனால் மேற்கு. இப்படி கார்க்யர் சொல்றார்.//

இதெல்லாம் விரிவா எழுதுங்கண்ணா...
கார்க்யர் எங்க சொன்னார்?.எதுக்கு சொன்னார்?

திவாண்ணா said...

கார்க்யர் சொன்னதா வைத்திய நாத தீக்ஷிதீயத்துல இருக்கு. அதுல விரிவா எழுத ஒண்ணும் வேற இல்லை. அந்த புத்தகத்துல பல ரிஷிகள் சொன்னதையும் கோட் பண்ணி இருக்கார். எல்லாம் படிச்சா தலைதான் சுத்தும்!