Thursday, July 24, 2008
ஜாத கர்மா
ஜாத கர்மா:
முன் காலத்திலே குழந்தை பிறப்பதாக அறியப்படும் நாளுக்கு ஒரு மாசம் முன்னாலேயே எங்கே குழந்தை பிறப்பு இருக்கலாம்ன்னு தீர்மானம் செய்து முடிவு பண்ணுவாங்க. அனேகமா அது நிர்ருதி திசைல இருக்கும் (தென் மேற்கு).பிரவசத்துக்கு சில நாட்கள் முன்னே பெரியவங்களை, தெய்வங்களை எல்லாம் வணங்கிட்டு பாட்டு மணிசத்தத்தோட நுழைவாங்க. என்ன லேகியங்கள், மருந்துகள், உணவு சாப்பிடிடலாங்கிறதுல நிறைய கட்டு பாடுகள். அறை புதுசா பிறக்கிற குழந்தைக்கு இதமா கொஞ்சம் இருட்டாவே இருக்கும்.
குழந்தை பிறக்க கஷ்டமானாலோ இல்லை வலி சரியா எடுக்கலைனாலோ சில வேத மந்திரங்கள் ஓதப்படும்.
குழந்தை பிறந்த சேதி கேட்ட உடன் தகப்பன் அப்படியே ஓடிப்போய் ஒரு குளத்திலேயோ நதியிலேயோ குதிக்கனும். (இல்லைங்க, தற்கொலை முயற்சி இல்லே!) அப்ப தண்ணி பனை மர உயரத்துக்கு எழும்பனும். (ஒபெலிஸ்க் குதிச்சாதான் இது சாத்தியம் என்கிறார் நண்பர்) இதனால பித்ருக்கள் சந்தோஷமாகிறாங்க.
சூதிக அக்னின்னு ஒரு அக்னி பிரசவ ரூமிலே மூட்டி கடுகு, நெல் தானியங்கள் ஹோமம் செய்வாங்க. இந்த சமயத்தில செய்கிற தான, தர்மங்கள் சுபமானது; நிறைய பலன் தரக்கூடியது.
மந்திரம் சொல்லி தேனை குழந்தை வாயிலே ஒரு தங்க காசால் ஒரு சொட்டு விடுவாங்க. இதனால் குழந்தை புத்திசாலியா இருக்கும். குழந்தை காதிலே நீண்ட ஆயுசை வேண்டி தகப்பனால் சில மந்திரங்கள் ஓதப்படும்.
இதுக்கு பிறகுதான் தொப்புள் கொடியை துணிப்பாங்க.
இப்ப இதெல்லாம் சரியா செய்கிறது குறைஞ்சு போச்சு. இந்த கர்மாவை பெண்ணுக்கு கல்யாணம் போதும் பையனுக்கு உபநயனம் போதும் செய்கிறாங்க. என்ன பிரயோசனம்? கர்மாக்களை அததற்கு உரிய காலத்திலே செய்தால்தான் பலன் கிட்டும்.
Labels:
இரண்டாம் சுற்று
Subscribe to:
Post Comments (Atom)
15 comments:
சரி தான். கல்லிடைகுறிச்சியா இருந்தா அப்படி போய் குதிச்சு இருப்பேன். இங்க வாளில தான் குதிக்கனும். :))
தமக்கு நீத்தார் கடன் செய்ய ஒரு வாரிசு வந்து விட்டதுனு நமது மூதாதையர் அறிந்து கொள்ள தான் அப்படி குதிக்கனுமாமே! அந்த நீர்த் துளிகள் அவ்ளோ உயரத்துக்கு தெளித்து சேதி சொல்லுமாம்.
ஹிஹி, கீதா மேடம் தங்க காசு கொண்டு வருவாங்கனு வெயிட் பண்ணினேன். எவ்ளோ மொய் எழுதினாங்கனே தெரியலை.
நேற்று இரவு, முந்தின பதிவுக்கு நான் போட்ட பின்னூட்டம் எங்கே?
அது சரி, கர்ப்ப காலம் முழுதும், கணவன் தீட்சை வைத்துக் கொள்வதும், குழந்தை பிறந்ததும் தீட்சையை எடுத்துவிட்டுப் பின்னர் விரைதானம் செய்வதும் முக்கியமா இல்லையா?? அது பற்றி ஒண்ணும் சொல்லலை, இல்லைனா இது குடும்ப வழக்கமா?????? விரைதானம் அநேகமாய் எல்லாரும் செய்து பார்த்திருக்கேன்!
//இந்த சமயத்தில செய்கிற தான, தர்மங்கள் சுபமானது; நிறைய பலன் தரக்கூடியது.//
இதிலேயே விவரமாச் சொல்லி இருக்கலாமோ??
// இங்க வாளில தான் குதிக்கனும். :))//
வாளில? கத்திதானே சொல்றீங்க? [இல்லை கத்தாம சொல்றேன்னு சொல்லக்கூடாது.] கத்தியைதானே? தாம்பத்யம் அவ்ளோ சீக்கிரம் வெறுத்து போச்சா?
:-))
//எவ்ளோ மொய் எழுதினாங்கனே தெரியலை.//
ஏன்? பறிமுதல் செய்யப்பட்டதா?
//விரைதானம் செய்வதும் முக்கியமா இல்லையா??//
பார்த்து/ கேட்டு சொல்கிறேன்.
//இதிலேயே விவரமாச் சொல்லி இருக்கலாமோ?? //
பொதுவாகத்தான் போட்டு இருக்கு.
அம்பி
மாடரேஷன் பெட்டியிலே கூட ஒண்ணுமே பாக்கி இல்லையே?
கொரியா ஸ்பாம்ன்னு ஒண்ணு டெலீட் பண்ணேன். அது உங்களது இல்லையே?
:-))
//விரைதானம் செய்வதும் முக்கியமா இல்லையா??//
பார்த்து/ கேட்டு சொல்கிறேன்//
சரிதான், நீங்க உங்க பையர் பிறந்தப்போ விரைதானமே பண்ணலைனு சொல்லுங்க, இல்லைனா சில மாவட்டங்களில் மட்டுமே பழக்கமோ????????
//ஹிஹி, கீதா மேடம் தங்க காசு கொண்டு வருவாங்கனு வெயிட் பண்ணினேன். எவ்ளோ மொய் எழுதினாங்கனே தெரியலை.//
அம்பி, அதெல்லாம் சொல்ல முடியுமா என்ன? தங்கக் காசு தானே, வாங்கிக் கொடுங்க, அடுத்த குழந்தைக்குக் கரெக்டா வந்து தேனிலே தோய்ச்சு நாக்கிலே தடவிட்டுக் காசை எடுத்துக்கறேன்@ :P
ஏன்னு தெரியல்ல திவாண்ணா?, இன்னைக்குத்தான் எனக்கு எல்லா பதிவுகளுக்கும் சேர்த்து ஒரே மெயிலா வந்தது....
ஆஹா! என்னை மாதிரி நீச்சல் தெரியாதவங்க, அம்புட்டுத்தான் :)
// ஏன்னு தெரியல்ல திவாண்ணா?, இன்னைக்குத்தான் எனக்கு எல்லா பதிவுகளுக்கும் சேர்த்து ஒரே மெயிலா வந்தது....//
அது எப்படி மெய்ல் வந்தது? எனக்கும் தெரியலை.
// ஆஹா! என்னை மாதிரி நீச்சல் தெரியாதவங்க, அம்புட்டுத்தான் :)//
முக்காலே மூணு வீசம் அப்படித்தான்!
;-))
கீ அக்கா, பையர் பிறந்தபோது நான் இந்த லைனிலேயே இல்லை. இதெல்லாம் கடந்த 15 வருஷங்களாதான்.
//கீ அக்கா, பையர் பிறந்தபோது நான் இந்த லைனிலேயே இல்லை. இதெல்லாம் கடந்த 15 வருஷங்களாதான்.//
ம்ஹும், இன்னும் உங்களுக்குச் சரியாப் புரியலைனு நினைக்கிறேன், நீங்க எந்த லைனிலே இருந்தாலும் குழந்தை பிறந்ததுனு செய்தி கேட்டதும், குழந்தையோட அப்பா, நீங்க சொன்னாப்போல துள்ளிக் குதிச்சுக் குளிச்சுட்டு விரைதானம் கொடுத்தே ஆகணும், இதுக்குனு நெல்லை மூட்டையாகத் தானம் கொடுக்கிறவங்க கூட உண்டு, அது எந்தக் குழந்தையாக இருந்தாலும், அப்படி அப்பாவுக்குக் கொடுக்க முடியலைனா, குழந்தையின் தாத்தா கொடுக்கலாம். அதாவது அப்பாவின் அப்பா கொடுக்கிறது விசேஷம், இல்லைனால் அம்மாவின் அப்பாவும், போனால் போகிறதுனு சிலர் ஒத்துக்கறாங்க, என் பெண்ணுக்கும், பையருக்கும் என்னோட ம.பா. கொடுத்தார், என்ன பெண் பிறந்தப்போ துள்ளிக் குதிச்சாரானு தெரியாது, சென்னையிலே இருந்தார், பையர் பிறந்தப்போ கூடவே இருந்ததாலே, வைகையிலே போய்த் துள்ளினாரோனு நினைக்கிறேன்! :P :P
கீ அக்கா
இன்னும் கொஞ்சம் புரிய வைக்கிறேன்.
எந்த லைனிலே இருந்தாலும் அதை செய்த்து இருக்கணும்தான். என் தந்தைக்கு இந்த விஷயங்களிலே அவ்வளவு சிரத்தையோ பரிச்சயமோ இல்லை. அதனாலே எங்களுக்கும் பரிச்சயம் இல்லாமல் போனது. 25 வருஷம் முன்னாலே என்ன செய்தேன்ன்னு நினைவில்லை. நிச்சயம் எந்த ஆறிலும், குளத்திலும் போய் குதிக்கலை. :-)) நானும் மௌலி மாதிரி நீச்சல் தெரியாது.
வீட்டு வாத்தியார் சொன்னதை செய்து இருப்போம். என்ன செய்தேன் என்ற விவரங்கள் நினைவில் இல்லை.
ஓ. இவ்வளவு சுவையாரமான சடங்குகளா? இப்பத் தான் கேள்விப்படறேன் திவா அண்ணா.
ஆமாம் குமரன். பல நல்ல பொருள் பொதிந்த கர்மாக்கள் பொருள் தெரியாமலே ஏனோதானோ ன்னு நடக்குது. அதனாலதான் கொஞ்சம் விவரமா எழுதறேன்.
"சுவையாரம்" - நல்லா இருக்கே! கேள்வி பட்டதில்லை. "சுவையான" க்கும் இதுக்கும் என்ன வேறூபாடு?
Post a Comment