Wednesday, July 16, 2008
புத்திரன் இல்லாதவருக்கு நீத்தார் கடன்...
அம்பி கயாவில் தனக்குத்தானே கர்மம் செய்வது பற்றி கேட்டார்.
புத்திரன் அல்லது வேற தாயாதி இல்லாதவர் கதி என்ன என்பது அடிப்படையான கேள்வி. கயாவில் ஆத்ம பிண்டம் தனக்குத்தானே போடுவது சரிதான். அத்தோட வேற என்ன செய்யலாம் என்பதுதான் இன்றைய பதிவு. பெரிசா இருக்கிறதால ரெண்டா கூட வரலாம். இப்ப சந்தோஷம்தான அம்பி?
:-))
இது சரி என்கிறதால எங்க அப்பாவுக்கு கயாவில பிண்டம் போட்டாச்சு, இனி சிராத்தம் செய்ய வேண்டாம்ன்னு நினைக்கிறது தப்பு. கீதா அக்கா சரியாவே இதை சொல்லிட்டாங்க.
காலம் மாறிகிட்டு இருக்கு. பலர் வெளி நாட்டில இருக்காங்க. அது எல்லாம் கர்ம பூமியா பெரியோர்கள் ஒத்துக்கிறது இல்லை. இப்ப இருக்கிற நவீன சிந்தனைகள் தாக்கம் இருக்கிறவங்க நாளை கர்ம சிரத்தையோட நீத்தார் கடன்களை செய்வாங்களான்னும் தெரியாது. அதனால சிரத்தை இருக்கறவங்க தங்களுக்கு என்ன செய்து கொள்கிறதுன்னு யோசனை செய்ய வேண்டியதுதான்.
விடை கருட புராணத்தில இருக்கு.
--
பெரிய திருவடியான கருடாழ்வான், ஸ்ரீமந் நாராயண பகவானை தொழுது "வைகுண்ட நாதரே! மனிதர்களுக்கு மிகவும் கொடிதான பிரேத ஜன்மம் வராமல் ஒழியும் மார்க்கம் எது என்பதை தேவரீர் தயை செய்துக்கூறி அருள வேண்டும் " என்று விண்ணப்பித்தான். சர்வாந்தர்யாமியான பகவான் கருடனை நோக்கி கூறலானார்:
“ ஓ கருடா மனிதர்கள் இறந்தவுடன் செய்ய வேண்டிய கருமங்களைப் பற்றி கூறுகிறேன். கேட்பாயாக.
பிரேத ஜென்மத்தை தவிர்க்க விரும்பிய யாவரும் தான் இறப்பதற்கு முன்னதாகவே தமது கையாலேயே வ்ருஷோற்சர்கம் செய்ய வேண்டும். 5 வயதுக்கு மேற்பட்ட யார் இறந்தாலும், அவர் ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி, அவருக்கு பிரேத ஜன்மம் எற்படாமல் இருக்க வ்ருஷோற்சர்கம் செய்தல் அவசியம்.(இதை வ்ருஷப உத்சர்ஜனம் என்றும் சொல்கிறாங்க) பிரேத ஜன்மம் வராமல் இருக்க இதை தவிர வேறு ஒரு கர்ம வழியும் இல்லை. உயிரோடு இருக்கும் போதோ அல்லது இறந்த பிறகோ யாருக்கு வ்ருஷோற்சர்கம் செய்யப்பட்டதோ அவருக்கு பிரேத ஜன்மம் வருவதில்லை. இதை செய்யாமல் வேறு எந்த தான தர்மம் செய்தாலும் விரதங்களை அனுஷ்டித்தாலும், வேள்விகளை செய்தாலும் பிரேத ஜன்மம் பீடிக்காமல் ஒழியாது"
கருடன்: "பகவானே! இதை ஒரு மனிதன் இறப்பதற்கு முன்பானால் எப்போது செய்ய வேண்டும்? இறந்த பிறகானால் எப்போது செய்ய வேண்டும்? அதனால் ஏற்படும் பயன் யாது? அதை சொல்லி அருள வேண்டும்.”
பகவான்: கழுலனே, இறந்தவரை குறித்து இதை செய்யாமல் சிராத்தம் முதலிய எதை செய்தாலும் அவற்றால் அவனுக்கு பலன் ஏதும் ஏற்படாது. எவனுக்கு இறந்த 11ஆம் நாள் விருஷோற்சர்கம் செய்யப்படவில்லையோ அவனுக்கு பிரேத ஜன்மம் நிச்சயமாக ஏற்பட்டே தீரும். அது உறுதி. செய்யப்பட்டால் அவன் பெரியோர்கள் அடையும் உலகை அடைவான்...... எமனால் பீடிக்கப்படாமல் அவன் நல்ல உலகை அடைவான். புத்திரனாவது, மனைவியாவது, பெண் வயிற்று பிள்ளையாவது விருஷோற்சர்கம் செய்யலாம். புத்திரன் இருப்பின் அவன் மட்டுமே அதை செய்ய வேண்டும். வேறு யாரும் செய்யலாகாது....
கழுலனே , அயலூருக்கு பயணம் செய்பவன் கட்டு சோற்றை கையிலே கொண்டு செல்வானாகில் எப்படி பசியைப்பற்றிய கவலையே இல்லாமல் செல்வானோ, அதுபோல ஒருவன் உயிரோடு இருக்கும் காலத்தில் அன்னதானம், கோதானம் முதலியவற்றை செய்து விடுவானாகில் மரணமடைந்து செல்லும்போது பசி, தாகம் ஏதும் அடையாமல் நல்லுலகை சேர்ந்து சுகிப்பான்.
(தொடரும்...)
Labels:
இரண்டாம் சுற்று
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
//புத்திரன் அல்லது வேற தாயாதி இல்லாதவர் கதி என்ன என்பது அடிப்படையான கேள்வி. கயாவில் ஆத்ம பிண்டம் தனக்குத்தானே போடுவது சரிதான்.//
குடும்ப நண்பர் அல்லது, யாரானும் தெரிஞ்சவங்க, அறிந்தவர்கள் கூட, வேற்று ஜாதியாக இருந்தால் கூட கயாவில் குறிப்பிட்டவர்களுக்குச் சந்ததி இல்லை, அவர்களுக்கு சிரார்த்தம் நடக்க வழி இல்லை என்று சொல்லி அவர்கள் பெயரைச் சொல்லிப் பிண்டம் போடலாம். அம்மா இருக்கிறவர்கள் கர்மா செய்யும்போது குறைவாகவும், அப்பா, அம்மா இருவரும் இல்லை என்றால் கூடவோ இருக்கும் எண்ணிக்கை சரியாக நினைவில் இல்லை, கேட்டுட்டுச் சொல்றேன். அம்மாவுக்கு என்று "மாத்ரு கயா" குஜராத்தில் அம்பாஜி என்னும் கோயிலில் இருந்து சற்று மேற்கே இருக்கின்றது. அங்கே தான் அம்மாவிற்கு எனத் தனியாகக் கர்மா செய்வது உண்டு. இந்த இடம் மகாவிஷ்ணு வாமன அவதாரத்தில் காசியபரின் மனைவியான தன் அன்னைக்கு மாத்ரு கடன்களைச் செய்தார் எனவும், அதனால் இந்த இடத்தில் தாயாருக்குக் கர்மா செய்வது விசேஷமாயும் சொல்லப் படுகின்றது.
மேல் தகவல்களிக்கு நன்றி.
மேலும் பல இடங்கள் பித்ரு கடன்களுக்கு உகந்ததா சொல்கிறங்க. கோகர்ணம், திலசபதி என்கிற திலதர்பணபுரி... இப்படி சிலது.
ரொம்ப தெளிவா எழுதியிருக்கீங்க திவாண்ணா...நன்றி.
Post a Comment