Tuesday, July 22, 2008
பும்ஸவனம்
பும்ஸவனம்
இது கர்ப்பம் தெரிந்த உடனே செய்யப்படவேண்டியது. ஒரு ஆண் குழந்தையை பெறுவதற்கான கர்மா. புஷ்ய நக்ஷத்திரத்துல செய்ய வேண்டியது. (அதாங்க பூசம்). எப்படியானாலும் ஆண் நக்ஷத்திரத்துல செய்யணுமாம்.
ஒவ்வொரு கர்ப்பத்துக்கு முன்னேயும் செய்யணுமா என்கிறதுல ரிஷிகளுக்கு கொஞ்சம் அபிப்பிராய பேதம் இருக்கு. அவரவர் குடும்ப பழக்கமும் க்ருஹ்ய சூத்திரமும்தான் இதை முடிவு செய்யணும்.
ஔபாசன அக்னில ஹோமம் உண்டு .
முக்கிய காரியமா இந்த கர்மாவில மரத்தின் கிழக்கிலோ அல்லது வடக்கிலோ உள்ள இரு காய்களுடன் கூடிய ஆலங்கொழுந்தை எடுத்துவந்து மந்திரத்தோட மூக்கில வலது பக்கம் பிழிகிறாங்க. அது தொண்டைக்கு வரும்போது அவள் அதை விழுங்கணும். ஆண் குழந்தையோ அல்லது நல்ல பிரஜையோ பிறக்க வேண்டிக்கிறாங்க.
ஏன் ஆல மொக்கு? சுஷ்ருதர் கர்ப்பிணிகளுக்கு இது பல பிரச்சினைகளை சரி பண்ணும் என்கிறாராம்.
கூடவே வலது கையிலே ஒரு மந்திரிச்ச கயிறும் கட்டுவாங்க.
மந்திரங்களோட பொதுவான அர்த்தம்:
ஈசான தேவதை நம் வேண்டுதல்களை நிறைவேற்றட்டும். தாதா உலகை குழந்தைகளாலும் மற்ற செல்வங்களாலும் வாழ்த்தட்டும். அவர் இந்த வீட்டையும் குழந்தைகள் தந்து வாழ்த்தட்டும்.யமனை வென்றவர்கள் இந்த வீட்டில் வசிக்கட்டும். அக்னி எனக்கு குழந்தைகள் கொடுத்து அருளட்டும். இந்திரன் அதே போல் அருளட்டும். அழகான குழந்தைகள் எனக்கு பிறக்கட்டும்.
Labels:
இரண்டாம் சுற்று
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
//ஒரு ஆண் குழந்தையை பெறுவதற்கான கர்மா. புஷ்ய நக்ஷத்திரத்துல செய்ய வேண்டியது. (அதாங்க பூசம்). எப்படியானாலும் ஆண் நக்ஷத்திரத்துல செய்யணுமாம்.//
அது ஏன் ஆண் குழந்தையை மட்டும் பெற வேண்டும்?? பெண் குழந்தைகளுக்குக் கிடையாதா??? இது கொஞ்சம் பாரபட்சமாக இருக்கே??? :(
//ஒவ்வொரு கர்ப்பத்துக்கு முன்னேயும் செய்யணுமா என்கிறதுல ரிஷிகளுக்கு கொஞ்சம் அபிப்பிராய பேதம் இருக்கு. அவரவர் குடும்ப பழக்கமும் க்ருஹ்ய சூத்திரமும்தான் இதை முடிவு செய்யணும்.//
ஒவ்வொரு கர்ப்பத்துக்கு முன்னேயும் செய்யறது உண்டுனு என் அப்பா சொல்லிக் கேட்டிருக்கேன். எங்க அத்தைக்கு அப்படி நடந்ததாகவும் சொல்லுவார். இப்போ சமீபத்திலேயும் ஒருத்தர் சொன்னார்.
ரொம்ப பிசியோ, கமெண்ட் இன்னும் பப்ளிஷ் பண்ணலை??? போகட்டும்! பும்ஸுவனம், என்பது 90 நாட்களுக்குள் செய்யவேண்டிய ஒன்று என எங்கேயோ படிச்ச நினைவு. அப்படி முடியாவிட்டால் 120 நாட்கள்?? அல்லது 200 நாட்களுக்குள் செய்யவேண்டுமோ??? மத்தியானத்தில் இருந்து புத்தகம் தேடுகிறேன், கிடைக்கவில்லை, பும்ஸுவனம் தனி, சீமந்தம் தனி இல்லையா??? சீமந்தம் என்பது 6 அல்லது 8-ம் மாசம் செய்யவேண்டியது இல்லையா??? தனித் தனி விளக்கம் தேவை! அப்படிப் பண்ண முடியாவிட்டால் குழந்தை பிறந்ததும், அந்தக் குழந்தையைத் தாய் மடியில் வைத்துக் கட்டித் தகப்பன், பும்ஸுவனம், சீமந்தம் இரண்டும் செய்து முடித்ததும் தான் பிறந்த குழந்தையைப் பார்க்கவேண்டும் என்பார்கள். அதுக்கும் விளக்கம் தேவை!
//ஆலங்கொழுந்தை எடுத்துவந்து மந்திரத்தோட மூக்கில வலது பக்கம் பிழிகிறாங்க.//
ஆமா நானும் புழிஞ்சேன். தொண்டைக்கு எல்லாம் வரலையாம். :)
//பெண் குழந்தைகளுக்குக் கிடையாதா??? இது கொஞ்சம் பாரபட்சமாக இருக்கே??? //
மேடம், முந்தின பதிவை படிச்சு பின்னூட்டிருந்தா இந்த சந்தேகம் வந்து இருக்காது. :p
ஆண் குழந்தையால் தான் நீத்தார் கடன்கள் செய்ய முடியும். அதான். சான்ஸ் கிடைச்சா உடனே கொடி புடிக்க ஆரம்பிச்சுடுவீங்களே! :))
//இது கொஞ்சம் பாரபட்சமாக இருக்கே??? :(
//
ஆமாம். பதில் அம்பி சொல்லி இருக்கார்.
:-))
வர வர tom is gaining the upper hand in the tussles!
//ஆமாம். பதில் அம்பி சொல்லி இருக்கார்.
:-))
வர வர tom is gaining the upper hand in the tussles!//
என்ன பதில் இது??? ரொம்பவே அக்கிரமமாக இல்லை??? ஆணாதிக்கம்???? :P :P :P :P
பும்ஸவனம் ஆண் குழந்தையை விரும்பி செய்கிற கர்மா. குழந்தை நல்லா வளாரவிட்டு செய்கிரதுல என்ன பிரயோசனம்?
செய்யாம இருக்கக்கூடாது என்று காலம் தாழ்ந்தாலும் செய்ய சொல்றாங்க. அதிக பலன் இருக்காது.
செய்ய வேண்டிய காலம் கர்ப்பம் தெரிந்த உடனே. அதுக்குன்னு இப்ப இருக்கிற மாடர்ன் டெஸ்ட் செய்து தெரிந்து கொள்கிறது இல்லை. குழந்தை அசைவு தெரியனும். அதுக்கு 3 மாசம் ஆகலாம்.
சீமந்தம் வேறதான். அது இன்னைய பதிவு.
அம்பி, கொஞ்சம் ஹார்லிக்ஸ் குடிச்சுட்டு பிழிஞ்சு இருக்கணும். பரவாயில்லை.
:-))
தேவ ஆராதனை பத்தி மக்கள் புரிஞ்சுகிட்டு இருக்கிற மாதிரி பித்ரு கடன்களை பத்தி புஞ்சுக்கலைன்னு நினைக்கிறேன். எந்த தேவ கர்மா செய்யப்போனாலும் அதுக்கு முந்தி "நாந்தீ சிராத்தம்" போல பித்ரு கர்மா செய்கிறதை பாத்தா அதோட முக்கியத்துவம் தெரியும்.
//என்ன பதில் இது??? ரொம்பவே அக்கிரமமாக இல்லை??? ஆணாதிக்கம்???? :P :P :P :P//
:-))))))))))))))
பும்ஸவனம் என்பது ஒவ்வொரு குழந்தைக்கும் செய்யலாம் என்றே கேள்விப்பட்டிருக்கேன். சீமந்தம் தான் முதல் குழந்தைக்கு மட்டும்.
Post a Comment