Pages

Friday, July 18, 2008

நித்திய கர்மா தொடர்ச்சி -வருட நோக்கில்



குருவே நம:

தடுத்து எம்மை ஆட்கொண்ட குருவுக்கு நமஸ்காரம்.
எடுத்து நல்வழி காட்டிய குருவுக்கு நமஸ்காரம்.
உள்ளிருந்து இயக்கும் குருவுக்கு நமஸ்காரம்.
கேள்வி ஞானம் அளித்த குருவுக்கு நமஸ்காரம்.

இந்த பதிவுகளில் ஏதோ நல்லது எழுதுவது அவர் அனுகிரகம்.
தவறுகள் இருப்பின் அடியேன் புரியாமை.

குருவே நம:
____________


நீத்தார் கடன்கள் குறித்து எழுதிகிட்டே போலாம். அது நிறையவே இருக்கு. சிரத்தையோட செய்கிறதுதானே சிராத்தம்.அதனால சிரத்தை இருக்கிறவங்க மேலே தேடிப்பிடிச்சுக்கலாம்.
இது மிகவும் முக்கியமான விஷயமா இருப்பதாலும்; நாங்கள் பார்த்த அளவில் இந்த விஷயத்தில் பலர் கோட்டை விட்டு விட்டு அவஸ்தை படுகிறதாலும்; உண்மையான கேள்விகள் வந்ததாலும் கொஞ்சம் இங்கேயே தாமதிச்சோம். நாம இதுக்கு இப்ப ஒரு கமா போட்டுட்டு அடுத்ததை பாக்கப்போறோம்.

நித்திய கர்மான்னா தினசரி கர்மா இல்லைங்கிறது ஏற்கெனவே பாத்தாச்சு. தினசரி கர்மா இல்லாத நித்திய கர்மாவை பாக்கலாம். வருஷம் முழுக்க அப்பப்ப வருகிற கர்மாக்கள் இருக்கு இல்லையா?

தினசரி பூஜை ஒரு பக்கம் இருக்க அப்பப்ப வருகிற பூஜைகள் இருக்கே! அதுவும் ஒரு பெரிய லிஸ்ட்தான். விரத பூஜா விதானம்ன்னு ஒரு புத்தகமே போட்டு இருக்காங்க. அதுல செய்முறைகள் முழுக்கவே போட்டு இருக்காங்க. ஒவ்வொரு திதி சம்பந்தமாகவும் போட்டு அப்புறம் வருஷதுக்குள்ள வரதை ஒவ்வொண்ணா போட்டு இருக்காங்க. இதெல்லாம் அனேகமா எல்லாருக்குமே தெரியும் இல்லையா? எந்த எந்த பூஜைக்கு என்ன என்ன நைவேத்தியம்ன்னு யோசனை பண்ணா பட்டியல் முழுதும் கிடைச்சுடும்!

அப்புறம் வருடா வருடம் 3-4 தரம் வருகிற கிரகணங்கள், அதை ஒட்டிய ஜப, ஹோம, தர்ப்பண, தானங்கள் எல்லாம் நித்தியம்தான். சாதாரணமா செய்கிற கர்மாக்களை விட கிரகண காலத்தில் செய்கிற கர்மாக்களுக்கு அதிக பலன் சொல்லி இருக்காங்க. .

அதனால

இந்த காலங்களை பயன்படுத்திக்கணும்.(வருகிற பௌர்ணமி கிரகண புண்ணிய காலம் வருது.) குறைந்தது நம்முடைய ஜபத்தை இந்த நேரங்களிலே செய்யலாம்.

5 comments:

ambi said...

//வருகிற பௌர்ணமி கிரகண புண்ணிய காலம் வருது.) //

நேத்து பவுர்ணமி. ஆக அடுத்த பவுர்ணமியா கிரகணம்? தகவலுக்கு நன்னி.

geethasmbsvm6 said...

ரொம்பவே அவசரமாப் போறாப்பல தோணுதே?? ரொம்பவே நீளமாப் போயிடும்னா?? எல்லாத்தையும் அப்புறம் பார்த்துக்கலாமேனு போனால் என்ன அர்த்தம்???

ம்ம்ம், பதில்களும் காணோமே??? மறுபடி கனெக்ஷன் தகராறு????

திவாண்ணா said...

@அம்பி அதே, தேவையான ஞாபக படுத்தறேன்.

@கீதா அக்கா
நீத்தார்கடன் என்கிறது மிகப்பெரிய கடல். இதிலே ஒரு சரியான அடிப்படை பார்வையை தரணும். அதுக்கு மேலே போறதெல்லாம் PG பாய்ண்டா போயிடும். முக்கியத்துவம் தெரிந்த பிறகு எப்ப வேணுமானாலும் கேட்டு தெரிந்து கொள்ளலாம் இல்லையா?

கனெக்ஷன் அப்பப்ப தகராறாதான் இருக்கு. எதுக்கும் இருக்கட்டும்ன்னு அடுத்த வார பதிவுகள் எல்லாமே மேலேத்தி நேர வெளியீட்டுக்கு ஏற்பாடு செய்தாச்சு.
ஆக அடுத்த வாரம் யாரும் தப்பிக்க முடியாது!
:-))

மெளலி (மதுரையம்பதி) said...

//அப்புறம் வருடா வருடம் 3-4 தரம் வருகிற கிரகணங்கள், அதை ஒட்டிய ஜப, ஹோம, தர்ப்பண, தானங்கள் எல்லாம் நித்தியம்தான். சாதாரணமா செய்கிற கர்மாக்களை விட கிரகண காலத்தில் செய்கிற கர்மாக்களுக்கு அதிக பலன் சொல்லி இருக்காங்க. .//

ஆமாம், கடந்த டிசம்பர் வரை ஜபம் மட்டுமே செய்தேன். இந்த கிரஹணத்திலிருந்து தர்பணமும் ஆரம்பிக்கிறது....

திவாண்ணா said...

@ மௌலி
ஆஹா. பதிவின் பலன் அடைந்தேன்!