Pages

Friday, July 25, 2008

நாம கரணம்


நாம கரணம்:

குழந்தைக்கு பெயரிடுதல். எளிய கர்மா. இரட்டைபடை எழுத்துக்கள் இருக்கணும் என்கிறாங்க பெரியவங்க. (க்,ச் மாதிரி புள்ளி எழுத்து கணக்கில்லே) பெண் குழந்தைகளுக்கு அல்லது யில் முடிவதாக வைப்பாங்க.

வைக்கிற பேரு கேட்க இனிமையா இருக்கணும். மாடர்ன்னா வைக்கிறேன்னு பலரும் அர்த்தமே இல்லாத சொற்களை பேராக்கறங்க. நல்ல அர்த்தம் இருக்கணும். தாத்தா பாட்டி பேர்களும் இறைவன் பேர்களும் எப்பவுமே நல்லது. எந்த நக்ஷத்திரத்துக்கு எந்த எழுத்திலே பேர் ஆரம்பிக்கணும்ன்னு கூட நியதிகள் இருக்கு. பஞ்சாங்கத்திலே போட்டு இருக்கும்.
பலருக்கும் அந்த காலத்திலே இரண்டு மூணு பேர் வைப்பாங்க. அபிசியலா ஒண்ணு. கூப்பிடற பேர் இன்னொன்னு. வைக்காத பேரான அம்பின்னும் கூப்பிடறதுண்டு. வழக்கமா மூத்த பிள்ளையை இப்படி "அம்பி"ன்னு கூப்பிடுவாங்க.! :-))
கடவுள் பேரை வைக்கிறதாலே ஒரு லாபம். அடிக்கடி கடவுளை
கூப்பிட்டுகிட்டே இருக்கலாம். அஜாமிளன் கதை தெரியுமில்லையா?

வழக்கமா 11 ஆம் நாள் பெயரிடறாங்க. பிரசவம் முடிந்து சுத்தி செய்து அப்புறம் தகப்பன் குழந்தை காதிலே "உன் பெயர் ........” அப்படின்னு சொல்லுவார். மத்த பெரியங்களும் அதேபோல சொல்லி ஆசீர்வாதம் செய்வாங்க.


7 comments:

Geetha Sambasivam said...

//வழக்கமா 10 ஆம் நாள் பெயரிடறாங்க. பிரசவம் முடிந்து சுத்தி செய்து அப்புறம் தகப்பன் குழந்தை //

அட, என்னங்க இது?? நாங்க எல்லாம் 11-ம் நாள் தானே பேர் வைப்போம், அன்னிக்குத் தான் புண்யாஹவசனம் செய்து பெயர் வைக்கிற வழக்கம், நீங்க பத்தாம் நாள்னு புதுசா சொல்றீங்க???????????????????

Geetha Sambasivam said...

//வைக்காத பேரான அம்பின்னும் கூப்பிடறதுண்டு. வழக்கமா மூத்த பிள்ளையை இப்படி "அம்பி"ன்னு கூப்பிடுவாங்க.! :-))//

இதுவும் நம்ம வீட்டிலே உல்டா தான், 2-வது பையனுக்குத் தான் இங்கே அம்பினு பேரு!! என்னத்தைச் சொல்றது?? :P

Geetha Sambasivam said...

//கேள்வி எதுவும் இருக்கா? பின்னூட்டம் போட தயக்கமா? மின்னஞ்சல் அனுப்புங்க! aanmikam@gmail.com //

இத்தனை கேள்வி கேட்டுட்டு வரேன், பதிலே சொல்லாமல் இப்படிப் போய் ஒளிஞ்சு கொண்டா என்ன அர்த்தம்???? :P

திவாண்ணா said...

நீங்க சொல்கிறது சரிதான்.
பிறந்த நாளை கணக்கு செய்யாமல் பத்தாவது நாள் என்று புத்தகத்தில் போட்டதை நான் சரியாக எழுதலை.

// 2-வது பையனுக்குத் தான் இங்கே அம்பினு பேரு!! என்னத்தைச் சொல்றது//

அம்பி வீட்டிலே எப்படி? :-))

//இத்தனை கேள்வி கேட்டுட்டு வரேன், பதிலே சொல்லாமல் இப்படிப் போய் ஒளிஞ்சு கொண்டா என்ன அர்த்தம்???? :P//

தலைவலின்னு.... அப்புறமா சந்திக்கிறேன்.

jeevagv said...

முன்பெல்லாம் நாமகரணமும் புண்ணியாவாசனமும் தனித்தனியே நடந்ததாகத் தெரிகிறது. இப்போது இரண்டையும் ஒரே நாளில் முடிக்கிறோம்!

எனக்கு நல்ல தோதான நேரத்தில் தான் இந்த இடுகைகள் வருகின்றன!

திவாண்ணா said...

வாங்க ஜீவா, ரொம்ப நாளாச்சு பாத்து!
புண்யாஹம் சுத்தி கர்மா. சின்னதுதானே. அதான் சேத்து வெச்சுட்டாங்க போல இருக்கு!

தோதான நேரமா! சந்தோஷம்!

மெளலி (மதுரையம்பதி) said...

உள்ளேனய்யா மட்டும் போட்டுக்கறேன்.