Saturday, September 5, 2009
பெண்களோட தினசர்யை
ம்ம்ம்ம்ம்ம்...பெண்களோட தினசர்யை பத்தி எழுதலையேன்னு கேட்கிறாங்க. அது இன்னும் நீளமா போகுமேன்னு தயக்கம். சுருக்கமா எழுதப்பாக்கலாம். வீட்டுல காலையில யாரும் எழும் முன்னே எழுந்து பல் தேச்சு, காப்பிக்கு வென்னீர் வெச்சுட்டு, வாசல் தெளிச்சு, திரும்பி வந்து ட்யூஷன் போகிற பையனை எழுப்பிவிட்டு, காபி பொடி மேல வென்னீரை விட்டு மூடி, வாசல்ல கோலம் போட்டுட்டு, பால் வாங்கி வந்து காய்ச்ச அடுப்பில ஏத்திட்டு, புருஷனுக்கு எழுந்திருக்க முதல் எச்சரிக்கை கொடுத்து, குளிக்கப்போய் , பால் பொங்கிடுமோன்னு அவசர அவசரமா நாலு சொம்பு விட்டுகிட்டு, ஈரத்தை துடைச்சுக்கக்கூட நேரமில்லாம பாலை இறக்கி, உடை மாத்தி வந்து, பாலை ஆத்தி ஸ்வாமிக்கு கை காட்டிட்டு, நேரமாச்சுமாங்கிற பையனுக்கு ஹார்லிக்ஸ் கலந்து ஆத்தி கொடுத்து, மணக்க மணக்க போட்ட காப்பியை ருசிச்சு குடிக்கக்கூட நேமில்லாம, பள்ளிக்கு போக வேண்டிய சின்னவளை எழுப்ப முதல் எச்சரிக்கை கொடுத்து, இன்னும் தூங்கற கணவனை "என்னங்க! பொண்ணு கூட எழுந்துடுவா போல இருக்கு. நீங்க இன்னும் தூங்கறீங்க"ன்னு உசுப்பிவிட்டு, எவ்வளோ நேரமா கதவ தட்டறதுமான்னு சலிச்சுக்கிற வேலைக்காரிக்கு கதவு திறந்து, துண்டு எங்கேடின்னு சத்தம் போடற கணவனுக்கு "குளிக்கப்போறப்ப எடுத்துகிட்டு போக மாட்டீங்களா?"ன்னு கடிச்சுகிட்டே துண்டு எடுத்துப்போய் கொடுத்து, பொண்ணை வலுக்கட்டாயமாய் எழுப்பி, டாய்லெட்டுக்கு கொண்டுவிட்டு, டிபன் என்ன செய்யலாம்ன்னு மண்டையை குடைஞ்சுகிட்டு , ஸ்கூல் பசங்களுக்கு மதிய உணவும் கணவனுக்கு சாப்பாடும் தயாராகிற போதே சின்னவளை "ஆச்சா! தேச்சுக்குளிச்சியா?"ன்னு அதட்டி, டிபன் பாக்ஸ் எல்லாம் பாக் பண்ணி, இதுக்குள்ள திரும்பி வந்து குளிச்சு ரெடியா இருக்கிற பையனை "ஏண்டா? நேத்து ஜுவாலஜி ஹோம் வொர்க்க பண்ண சொன்னேனே பண்ணியா?"ன்னு விசாரிச்சு, ரெண்டு படம் போட்டுக்கொடுத்து, சின்னவளுக்கு டிபன் பறிமாறி, சாப்பிட வெச்சு, கிளப்ப,ி" திருப்பி பென்சிலை தொலைச்சா வாங்கித்தர மாட்டேன்"னு எச்சரிக்கையோட உள்ளேந்து புதுசா எடுத்து கொடுத்து, டை காணோம்ன்னு அழறவளுக்கு அதையும் தேடி எடுத்துக்கொடுத்து, ஆட்டோக்காரன் பொறுமையில்லாம ஹார்ன் அடிக்க, சமாதானம் சொல்லிக்கிட்டே குழந்தையை கொண்டுவிட்டு, சைக்கிள்ள வேகமா கிளம்புற பையனை "பாத்து போடா!" ன்னு எச்சரிச்சு இத்தனை அமர்களத்திலேயும் உதாசீனமா பேப்பர் பாத்துகிட்டு, டிபன் சாப்பிடற கணவனைப்பாத்து கோபப்படாம கேட்டு இன்னும் கொஞ்சம் பறிமாறி, காப்பி கலந்து நகத்திட்டு, காரியர்ல சாப்பாடு நிரப்பறப்ப, "ஏண்டி எவ்வளோ தரம் சொல்லறது? காப்பில சக்கரையை கலந்து வை!" ன்னு என்று சத்தம் போடுகிறவனுக்கு "கலந்தா அது ஆறிடாதா?"ன்னு லாஜிக் பேசி காரியரோட பஸ்ஸுக்கு சில்லரையும் எடுத்து கொடுத்து...
என்னங்க அதுக்குள்ள நான் வரேன்னு கிளம்பினா எப்படி? இன்னும் அவங்க டிபன் சாப்பிட்டு, சோப்ல ஊறுகிற துணியெல்லாம் தோச்சு அலசி, உலத்தி, வேலைக்காரி கழுவி வெச்ச பாத்திரம் எல்லாம் உள்ளே கொண்டு வந்து, சமையல் அறையை சுத்தம் பண்ணி, அப்புறம் இன்னும் வெளி வேலை - போஸ்ட் ஆபீஸ், பாங்க், எலக்ட்ரிசிடி பில், மளிகை காய்கறிக்கடை, தையற்கடை .... இன்னும் முற்பகல் கூட முடியலைங்க.
இப்படி மகா பொறுமையோட குடும்ப நிர்வாகம் பண்ணுகிற பெண்களுக்கு நமஸ்காரமே பண்ணணும்.
Labels:
நான்காம் சுற்று
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
கர்மயோகம்.
உண்மையான ;யோகம்' இதுதான். எதாவது பலனை எதிர்ப்பார்க்கிறோமா என்ன?
சரிசரி, மசமசன்னு நிக்காம சீக்கிரமா நமஸ்காரத்தைப் பண்ணிட்டு இடத்தைக் காலி செய்யுங்க. நாளைக்கு டிஃபனுக்கு இட்லிக்கு அரைக்க உக்காரணும் நான்!
துளசி அக்கா,ரொம்ப சரி, நமஸ்கார..
தாங்கீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் துளசிக்கு ஒரு ரிபீட்டே!!!
gi,
our indian house wifes are great women in this world.
i always saluting them.
they are PILLER OF INDIA
அடாடா, தினம்-தினம் திருநாளே! அப்படித்தான் போகுது...
இப்போத்தான் பரமசிவனே பத்நிக்கு நமஸ்காரம் பண்ணியதை செளந்தர்ய லஹரியில் எழுதினேன்...இங்க நீங்கள் சொல்லிட்டீங்க... :)
அடடா! மௌலி பாத்து நாளாச்சு.நலம்தானா?
பதிவை இப்பவே படிக்கீறேன்.
எனக்கு வசூல் ராஜா கமல் ஒரு தோட்டியோடு கட்டிபுடி வைத்தியம் பார்க்கும் சீன் ஏனோ ஞாபகம் வந்து தொலைக்கிறது:-))
அப்புறம், மௌலி, இந்தக் கதையெல்லாம், ஒரு தற்காப்புக்கு உதவும் என்றே பெரியவர்களும் நமக்குச் சொல்லி வைத்து விட்டுப் போன மாதிரி ஒரு......
வேற மாதிரி ரிப்பீட்டாகறதுக்கு முன்னால....ஊட்டுக்காரம்மா கூப்பிடறாங்க!
....இதோ வந்துட்டேங்க!
Post a Comment