128.
ஒன்றா கியபிர மாநந் தச்சுக மொழிவா னேன்வெளி வருவானேன்
என்றான் முன்செய்த கருமம் வெளியினி லிழுக்குஞ் சுழுத்திவிட் டெழுந்தோனும்
நன்றா யினசுக மகலாம் வெளியிலு நடவான் மறதியும் பெறமாட்டான்
அன்றா மெனவிருந் துறங்குஞ் சிலகண மதுவே வாதனை யாநந்தம்
ஒன்றாகிய பிரமாநந்த சுகம் ஒழிவானேன்? வெளி வருவானேன்? என்றால் முன் செய்த கருமம் வெளியினில் இழுக்கும். சுழுத்தி விட்டு எழுந்தோனும் நன்றாயின (அநுபவித்த) சுகம் அகலான். வெளியிலும் நடவான். மறதியும் பெறமாட்டான். அன்றாம் (ஜாக்ரத்தும் அல்ல, சுசுப்தியும் அல்ல) என இருந்து உறங்கும் சில கணம் அதுவே வாதனையாநந்தம். (வாசனாநந்தம்)
--
சுழுத்தி விட்டு வெளி வந்தாலும் கொஞ்ச நேரம் ஜாக்ரத்துக்கு வராமலே சுகத்தை விடாது இருப்பது வாசனை ஆனந்தம்.
பிரம்மானந்தத்தில முழுகி இருக்கிற நாம அப்படியே இருந்துடலாமே? ஆனா நாம இந்த ஜன்மத்தில அனுபவிக்க வேண்டிய சுக துக்கம் இன்னும் நிறைய இருக்கே? அதனால் தூக்கத்தை விட்டு வெளியே வரோம். சிலர் அனுபவம் தூங்கி வெளியே முழுக்க உடனே வராம ஒரு அரைத்தூக்கம்- சொகமா இருக்கும். அது சொல்லித்தெரியாது. அனுபவிக்கணும். இப்படி தூக்கத்தை விட்டு வெளி வந்தாலும் கொஞ்ச நேரம் ஜாக்ரத்துக்கு வராமலே சுகத்தை விடாது இருக்கிறது வாசனை ஆனந்தம்.
5 comments:
வாசனை செய்யும் மாயமென்ன கிளியே?
வந்து வந்து போவதென்னே கிளியே?
போதனை இருந்தும் பயனென்ன கிளியே?
சாதனை செய்தாலன்றி செத்து மாயுமோ கிளியே?
எனக் கிளிப்பாட்டு பாடிடத் தோணுது...
வாசனைதான் தூண்டுவதென அறி கிளியே!
வாசனைபோவதற்கும் அது தான் வழிகிளியே
போதனையால் தெளிவு வரும் பிடி! கிளியே
சாதனையால் நிலைத்து நில்லு செல்லக்கிளியே!
அதற்கோர் நேரம் வரும்! உண்மையும் வெளிப்படுமே!
பதற்றம் உதவாது வெறும் பயிற்சியில் வாராது
குதர்க்கமெனக் கொள்ளாமல் கொஞ்சம் யோசித்தால்
அதற்கான நேரத்தை அவனேதான் சொல்லவேணும்!
அதற்கோர் நேரம் வரும்! உண்மையும் வெளிப்படுமே!
அதற்கான நேரத்தை அவனேதான் சொல்லவேணும்!
thats it. thanks krishnamoorthy sir.
you explained so simply upanasid truths.
வாதனை என்றால் வேதனை,துன்பம் என்றுதான் நினைத்திருந்தேன். வாசனை அப்படீன்னும் ஒரு பொருள் இருக்கா? புது விஷயம் தெரிஞ்சுக்கிட்டேன். நன்றி
//...வராம ஒரு அரைத்தூக்கம்- சொகமா இருக்கும். அது சொல்லித்தெரியாது. அனுபவிக்கணும்.//
உம். அந்த அனுபவம் நல்லாவே உண்டு. :)
கிளிப்பாட்டுகள் நல்லாவே இருக்கு!
ஸ்ரீ பாலு நன்றி!
கபீரன்பரே, முதல்ல படிக்கும் போது எனக்கும் ஆச்சரியமாதான் இருந்தது. இப்பவும் திப்பி அகரதியை பாத்தேன்.
http://dsal.uchicago.edu/cgi-bin/
http://tinyurl.com/kj6pb6
வாதனை (p. 859) [ vātaṉai ] {*}, s. pain, வேதனை; 2. impediment, தடை; 3. experience of senses, knowledge of pleasure and pain, வாசனை.
Post a Comment