Pages

Wednesday, September 16, 2009

செவன்த் ஹெவன்...




132.
இப்பிரமாநந்தம் அடைந்ததற்கு திருஷ்டாந்தம்.
எவனா கிலுமிந்தத் துரியா தீதத்தி லேழாம் பூமியி லிருந்தானேல்
அவனா ரதன்சுகன் சிவன்மா லயன்முத லறிவோ ரநுபவ சுகபோதம்
விவகா ரதிர்சய மிதுவே யநுபவ மெனமுன் சொல்லிய விவகாரி
உவமா னமுமறி மகனே யவனடி யுதிரும் பொடிகளென் முடிமேலே.

எவனாகிலும் இந்தத் துரியாதீதத்தில் ஏழாம் பூமியில் இருந்தானேல், அவன் (அவனுக்கு) போதம் (தத்வ ஞானம்) விவகார (பிரபஞ்ச) அதிரிசயம் (அத்ருஷ்யம் =பார்வையின்மை) [ஆகிய] இதுவே [ஸ்வ]அநுபவம் எனவும், நாரதன் சுகன் சிவன் மால் அயன் முதல் அறிவோர் (அறிவோருக்குமுள்ள) அநுபவ சுகமும் (ஆநந்தம்) என முன் சொல்லிய (துரீயாதீதனின்) விவகாரி உவமானமும் அறி மகனே, அவனடி உதிரும் பொடிகள் என் முடிமேலே [தரிக்கத்தக்கன].
--
இரண்டற்றதாயும் சுழுத்தி அல்லாததுமா இருக்கிற முக்கிய நிஜ ஆனந்தத்தோட அனுபவமே துரியாதீதம் என்கிற ஏழாம் பூமியாம்.
[ஆங்கில வழக்கிலேயும் செவன்த் ஹெவன் என்கிறாங்க]

எவன் இந்த நிலையில இருக்கானோ அவன் நாரதன், சுகன், சிவன், விஷ்ணு, பிரமன் ஆகியவருடைய அனுபவ ஆனந்த நிலையில் இருக்கிறான். அத்தகைய மகா புருஷனின் பாத தூசிகள் என் தலையில் தாங்கத்தக்கன என்கிறார் நமக்கு இவ்வளவு தூரம் சமாசாரம் சொன்ன தாண்டவராய ஸ்வாமிகள்.

2 comments:

கிருஷ்ண மூர்த்தி S said...

ஏழாவது உலகம்னு சொன்னவுடனேயே கமென்ட் எழுதவும் கை வர மாட்டேங்குது!!

மூலாதாரத்து மூண்டெழு கனல் இன்னமும் சரியாப் பத்திக்கலை போலன்னு விடவும் முடியல!

திவா அண்ணா! ஷார்ட் கட், ஹெல்ப் லைன், ஏதாச்சும் உண்டா:-))

திவாண்ணா said...

ரொம்ப ஷார்ட்டா ஒரு கட் என்ன 2-3 சொல்லி இருக்கார். வரும் பதிவுகளிலே வரும்!
:-))