Pages

Monday, September 7, 2009

தூங்கறதா பிரம்ம சுகம்?



125.
தூங்குஞ் சுகமது பிரமச் சுகமெனல் சுருதிப் பொருள் விழி துயில்வோர்கள்
தாங்கும் மலரணை நன்றா கச்சிலர் சம்பாதிப்பது தானூகம்
தீங்குந் நன்மையு மாண்பெண் முறைமையுந் தெரியா தமளிசெய் பொழுதேபோல்
ஆங்குள் வெளிகளு மறியா வநுபவ மதனா லதுபிர மாநந்தம்.

தூங்குஞ் சுகமது பிரமச் சுகம் எனல் சுருதிப் பொருள் (வேதம் ஒப்புக்கொள்வது). விழி துயில்வோர்கள் தாங்கும் மலரணை நன்றாகச் சிலர் சம்பாதிப்பது தான் ஊகம். தீங்கும் நன்மையும் ஆண் பெண் முறைமையும் தெரியாது அமளி (ஆலிங்கனம்) செய் பொழுதே போல், ஆங்கு உள் வெளிகளும் (ஸ்வப்ன ஜாக்ரத்) அறியா அநுபவம். அதனாலது பிரமாநந்தம்.
--
என்னங்க இது? போயும் போயும் தூங்கறதையா பிரம்ம சுகம்ன்னு சொல்லறீங்கன்னா ஆமாம். சுழுத்தியில் பிரம்மானந்த நிலை எட்டுகிறது என்கிறது வேதம் ஒப்புக்கொண்ட விஷயம். அங்க அவ்வளவு ஆனந்தம் இருப்பதாலதான் அந்த தூக்கத்துக்கு பங்கம் வராம இருக்க மிருதுவான மெத்தை தலையணை முதலியன முயன்று சம்பாதிக்கிறான். அனுபவத்தில அந்த சுழுத்தியில் விருப்பு வெறுப்புகள், காலம், இடம் முதலான வித்தியாசங்கள் இல்லாது, இரண்டு இல்லா ஆனந்தத்தையே அனுபவிக்கிறான்.
ஆனா, இது ஆன்மா பிரம்மத்துடன் ஐக்கியமடையும் போது உண்டாகிற ஆனந்தம் இல்லை. அதுக்கு சமமான ஆனந்தம் என்கலாம்.
ப்ரம்ம ஐக்கியம் அடைந்த ஆன்மா மறுபடி அஞ்ஞானத்தில் அழுந்தாது. பிறவியும் அதற்கு இல்லை. இங்க அப்படி இல்லை. கருவி கரணங்கள் எல்லாம் கழன்று ஆன்மா அவித்தையில மூழ்கி இருக்கு. அதாவது மாயையுடன் சம்பந்தப்பட்டே இருக்கு. கர்ம பலன் தூண்ட அது மீண்டும் ஜாக்கிரத்துக்கு வந்து அஞ்ஞானத்தில பொருந்தி உழண்டுகிட்டு இருக்கு.
அந்த பிரம்மத்தோட ஐக்கியம் அடைஞ்சு இருந்தா அப்படி அது அஞ்ஞானத்தில் பொருந்தாம வெளி வரும் போது ஜீவன் முத்த நிலையில இருக்கும்.

ஆக நித்திரை ஆனந்தத்தில் மாயா சம்பந்தம் உள்ளது. பிரம்ம ஐக்கிய ஆனந்தத்தில் மாயா சம்பந்தம் இல்லை.
(உடல் உறவு கொள்ளும் போது ஏற்படும் ஆனந்த நிலை சுசுப்திக்கு சமமாக சொல்கிறார்கள்)


5 comments:

கிருஷ்ண மூர்த்தி S said...

அதைவிடப் பெரும் சுகம் ஒண்ணு இருக்கா என்ன:-))

கடைசியில ஒரு வரி சொன்னீங்க பாருங்க, அதுக்கு மேலே தூங்கறது சொகமானது!

"தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே! அமைதி உன் நெஞ்சில் நிறையட்டுமே"ன்னு ஜானகியம்மா பாடினதைக் கேட்டதில்லை?!

தூங்க முடியாதவங்களுக்குமே கூடத் தான் தூக்கம் எவ்வளவு அருமையானதுன்னு புரியும்!

திவாண்ணா said...

ஹிஹி! இன்னும் சில சுகங்கள் எல்லாம் பதிவிலே வரும். எதுக்கும் அதையும் பாத்துட்டு அப்புறம் சொல்லுங்க.

கிருஷ்ண மூர்த்தி S said...

அதெல்லாம் சரிதாங்கண்ணா! அரிப்பெடுத்தவனுக்குச் சொரிவது சுகம், ப்லோக் எழுதறவனுக்குப் பின்னூட்டம் வந்ததா இல்லையான்னு திறந்து திறந்து பாக்கறது சுகம்,பலோயர்ஸ் ஒண்ணு கொரைஞ்சுபோச்சேன்னு பதருவதில் ஒரு சுகம், கர்புர்ர்னு கனைச்சுக்கரதுல ஒரு சுகம் இதெல்லாம் இருந்தா சொல்லுங்க! இன்னைக்கு இதுக்குத் தான் வெயிட்டுன்னேன்:-))

Geetha Sambasivam said...

:)))))))))))

வல்லிசிம்ஹன் said...

:)))