138.
இன்னவகை விதிவிலக்குக் குணங்கணன்றாய்ச் சேந்தொருமித் தெல்லாம்கூடிச்
சொன்னபொரு ளொன்றன்றி யிரண்டில்லை யொருபொருளைச் சொல்லுஞ் சொற்கள்
பின்னபத மாமதனால் சத்தாதி குணப்பொருளாம் பிரம மேகம்
அன்னபொரு ளொருமையறிந் தகண்டபரி பூரணமா யாவாய் நீயே
இன்னவகை விதி, விலக்குக் குணங்கள் நன்றாய்ச் சேர்ந்து ஒருமித்து எல்லாம் கூடிச் சொன்ன பொருள் ஒன்று அன்றி இரண்டில்லை. ஒரு பொருளை சொல்லுஞ் சொற்கள். பின்ன பதமாம். (வெவ்வேறு சப்தங்களாம்.) அதனால் சத்தாதி குணப் பொருளாம் பிரமம் ஏகம் (ஒன்றே). அன்ன பொருள் ஒருமை அறிந்து அகண்ட பரி பூரணமா யாவாய் நீயே.
139.
நிற்குணவத் துவின்குணங்க ளுரைப்பது தாய் மலடியென னிகரென்னாதே
சற்குணனே வத்துநிலை யுரையாம லறியவல்ல சதுரருண்டோ
நற்குணவே தங்களிந்தச் சீவன்முத்தி பெறப்பிரம ஞானந் தோன்றச்
சொற்குணங்கள் பிரமத்தின் குணங்களன்று பிரமமாஞ் சொரூபந்தானே
நிற்குண வத்துவின் குணங்கள் உரைப்பது தாய் மலடியென நிகர் என்னாதே. சற்குணனே, [ஆசிரியர்] வத்து நிலை உரையாமல் அறியவல்ல சதுரர் (திறமைசாலி) உண்டோ? [யாருமில்லை] நற்குண வேதங்கள் இந்தச் சீவன் முத்தி பெற பிரம ஞானம் தோன்ற சொன்ன குணங்கள் பிரமத்தின் குணங்கள் அன்று. பிரமமாஞ் சொரூபந்தானே.(பிரமத்தின் ஸ்வ ரூபமே ஆகும்)
--
குணமற்றது என்று சொல்லி பின் குணங்களை சொல்லுவது ஏன்? இது "என் தாய் மலடி" என்று முன்னுக்கு பின் விரோதமாக சொல்லுவது அல்ல. பிரமத்தின் குணங்களை கற்பனை செய்து கூறாமல் அதன் உண்மை தன்மையை அறிபவர்கள் யாருமில்லை. ஆக இப்படி சொல்லிய குணங்கள் அனைத்தும் பிரமத்தின் குணங்கள் அல்ல. அதன் சொரூபமே.
வார்த்தைகளுக்கு அகப்படாதது பிரம்மம். ஆனா எதையாவது சொல்லி நமக்கு புரிய வைக்க வேண்டி இருக்கு. ஆக நாம பாக்கிறது பிரமத்தை இல்லை. அதைப்பத்திய நம்மோட சில பார்வைகளே.
1 comment:
உணரணும்னு சொல்லி இருக்கீங்க, அதுவரையில் புரியுது! :P
Post a Comment