Pages

Monday, September 28, 2009

துரியாதீதம், ஏழாம் பூமி இதெல்லாம் என்ன?




145.
துரியாதீத ஏழாம் பூமி முக்கியமென்றது ஏன் எனவும் அதில் இன்ன வகை எனவும் கூற வேண்டுமென்றது.

இதயமொத்த சற்குருவே நமக்கிதுவே வினோதமன்றி யினிவே றுண்டோ
அதையுரைத்து மதைநினைத்து மிருப்பதன்றோ ஞானிகளுக் கானநீதி
முதலுரைத்த துரியாதீ தமுமேழாம் பூமியுமுக் கியமாமென்ற
பதமுமதன் வகையுமெனக் கெளிதாகத் தெளியும்வண்ணம் பணித்தி டீரே

இதயம் ஒத்த சற்குருவே! நமக்கு இதுவே வினோதம் அன்றி இனி வேறுண்டோ? அதை உரைத்தும், அதை நினைத்தும் இருப்பது அன்றோ ஞானிகளுக்கான நீதி? [ஆகவே] தாங்கள் முதல் (முன்பு) உரைத்த துரியாதீதமும் ஏழாம் பூமியும் முக்கியமாம் என்ற பதமும் அதன் வகையும் எனக்கு எளிதாகத் தெளியும் வண்ணம் பணித்திடீரே.

சமாதியிலிருந்து வெளி வந்த சீடர் மேலே கேள்வி கேட்கிறார்.

சீவன் முத்தருக்கு என்ன வேலை? மனமில்லாத போது பிரம்மத்தில திளைக்கிறதும் மனம் இருக்கும் போது பிரம்மத்தைப்பத்தி யோசிக்கிறதும்தானே. நமக்கு இத்தானே வேலைங்கிறார் சீடர். கவனிங்க. நமக்கு.

முன்ன துரியாதீதம் ஏழாம் பூமி இதெல்லாம் முக்கியம் ன்னு சொன்னீங்களே அது என்ன? முன்ன மாதிரி சுலபமா புரிய வையுங்க.

146.
வினவுமிடத் தஞ்ஞான பூமிகளேழ் ஞானபூமிகளே ழென்பார்
இனியவற்று ளஞ்ஞான பூமிகளே ழையுமுந்தி யியம்பக் கேளாய்
தனிவித்துச் சாக்கிரஞ்சாக்கிரமகா சாக்கிரஞ்சாக் கிரத்தைச் சார்ந்த
கனவுகனாக் கனவுசாக் கிரஞ்சுழுத்தி யென்றெழுபேர் கணித்தார் மேலோர்

வினவுமிடத்து அஞ்ஞான பூமிகள் ஏழ், ஞானபூமிகள் ஏழ் என்பார். இனி அவற்றுள் அஞ்ஞான பூமிகள் ஏழையும் முந்தி இயம்பக் கேளாய். தனி, வித்துச் சாக்கிரம், சாக்கிரம், மகா சாக்கிரம், சாக்கிரத்தைச் சார்ந்த கனவு, கனாக் கனவு, சாக்கிரஞ் சுழுத்தி என்று ஏழு பேர் (பெயர்கள்) கணித்தார் மேலோர்.

பூமின்னா ஏதோ நிலப்பரப்புன்னு இல்லை. அது ஒரு நிலை. அவ்வளோதான். கொஞ்சம் சுலபமா விஷயங்களை புரிஞ்சுக்க ஒரு பாகுபாடு செய்கிறாங்க. ஞான பூமிகள் ஏழு அஞ்ஞான பூமிகள் ஏழுன்னு பிரிக்கிறாங்க.

முதல்ல அஞ்ஞான பூமிகள்:
தனி வித்துச் சாக்கிரம், சாக்கிரம், மகா சாக்கிரம், சாக்கிரத்தைச் சார்ந்த கனவு, கனாக் கனவு, சாக்கிரஞ் சுழுத்தி.

3 comments:

கிருஷ்ண மூர்த்தி S said...

/பூமின்னா ஏதோ நிலப்பரப்புன்னு இல்லை. அது ஒரு நிலை./

இங்க தான் இருக்கு விஷயமே! ஈரேழு பதினாலு லோகமென்று சொல்வதெல்லாம், விழிப்பு நிலையின் வெவ்வேறு தளங்கள் மட்டுமே. சொர்கமும், நரகமும்,அவை ஒட்டிய கதைகளும் கற்பிதங்களே!

இன்னமும் தெளிவாகச் சொல்ல வேண்டுமானால், கீழே பாதாள லோகமென்று சொல்வது, பழைய இயல்பின், பழக்கங்களின் அடிமையாகவே இருந்து விடுகிற, மிருக உணர்வைத்தான்.

Geetha Sambasivam said...

//பூமின்னா ஏதோ நிலப்பரப்புன்னு இல்லை. அது ஒரு நிலை. அவ்வளோதான். கொஞ்சம் சுலபமா விஷயங்களை புரிஞ்சுக்க ஒரு பாகுபாடு செய்கிறாங்க. ஞான பூமிகள் ஏழு அஞ்ஞான பூமிகள் ஏழுன்னு பிரிக்கிறாங்க//

நம்ம பூமி எதிலே வருது??? ஞானமா? அஞ்ஞானமா? அஞ்ஞானம் தானே??? குழப்பிக்கிறேனோ?

திவாண்ணா said...

@கிருஷ்ணமூர்த்தி.
இந்த 7 லோகங்களும் பூர் புவ ஆதி 7 லோகங்களூம் வேறு வேறு. அதே போல தல சுதலாதி லோகங்களும் வேறு. இப்படித்தான் என் புரிதல். எப்படி இருந்தாலும் இங்கே சொல்ல வந்தவை அவை அல்ல.
@ கீதா அக்கா
ஆமாம். குழப்பிக்கிறீங்க. அடுத்து வர பகுதிகளையும் சேத்து படிச்சா குழப்பம் இராது.