121.
ஆனந்தம் எத்தனை வகை
மானஞ்சி றந்தகுரு நாதனே யாநந்த வகைகளெத் தனையென்னிலோ
ஞானத்தி கழ்ந்தபிர மாநந்தம் வாசனா நந்தம்விட யாநந்தமென்
றாநந்த மூன்றுவித மெட்டுவகை யென்பர்சில ரவ்வைந்து மிதிலடக்கம்
யானந்த வகைசொலக் கேண்மைந்த னேயெட்டு மிஃதின்ன தின்னதெனவே
மானஞ் சிறந்த குரு நாதனே ஆநந்த வகைகள் எத்தனை என்னிலோ, ஞானம் திகழ்ந்த பிரமாநந்தம், வாசனாநந்தம், விடயாநந்தம் என்று ஆநந்தம் மூன்றுவிதம். எட்டு வகை என்பர் சிலர். அவ்வைந்தும் இதில் அடக்கம். ஆனந்த வகை சொலக் கேள், மைந்தனே எட்டும் இஃது இன்னது இன்னது எனவே.
ஆநந்தம் மூன்றுவிதம். பிரமாநந்தம், வாசனாநந்தம், விடயாநந்தம். எட்டு வகைன்னு சிலர் சொல்வாங்க. அஞ்சும் இதிலேயே அடக்கம். ஆனந்த வகை என்னன்னு பாக்கலாமா?
122.
எட்டு வித ஆநந்தம்.
போகத்தில் வருசுகம் விடயசுக நித்திரைப் போதுளது பிரமசுகமாம்
மோகத்த னந்தலிற் சுகம்வாச னைச்சுகமு ழுப்பிரிய மான்மசுகமாம்
யோகத்தி லுளதுமுக் கியசுகமுதாசீன முற்றசுக நிசசுகமதாம்
ஏகத்தை நோக்கலத் துவிதசுகம் வாக்கியமெ ழுந்தசுக ஞானசுகமே
போகத்தில் வரு சுகம் விடய சுகம்.[1. விடயானந்தம்] (சுசுப்தி) நித்திரைப் போது உளது பிரம சுகமாம் [2.பிரமானந்தம்]. மோகத்து அனந்தலில் (நித்திரை கலைந்து எழும் போது உள்ள) சுகம் வாசனைச் சுகம் [3.வாசனானந்தம்]. முழுப் பிரியம் ஆன்ம சுகமாம். [4.ஆன்மானந்தம்] யோகத்தில் உளது முக்கிய சுகம் [5. முக்கியானந்தம்]. உதாசீனமுற்ற சுகம் [6. நிஜானந்தம்] நிசசுகம் அதாம். ஏகத்தை நோக்கல் அத்துவித சுகம் [7.அத்வைதானந்தம்]. வாக்கியம் எழுந்த சுகம் ஞானசுகமே. [8.வித்தியாநந்தம்]
1. விடயானந்தம்: உலக விஷயங்களை அனுபவிக்கிறதுல வருகிற சுகம் விடய சுகம்.
2.பிரமானந்தம்: ஆழ்ந்த தூக்கத்தில (சுசுப்தி) உள்ளது பிரம சுகமாம்.
3.வாசனானந்தம்: நல்ல காப்பி கிடைக்குது. குடிச்சிட்டு சந்தோஷமா இருக்கோம். அரை மணி ஆகி அந்த சுவை போயிட்டாக்கூட அந்த சந்தோஷம் போகாது. அதப்போல நல்ல தூக்கம் தூங்கி அது கலைஞ்சு முழிச்சுகிட்டு படுக்கையிலேயே கிடந்துகிட்டு ஒரு பிரச்சினையான நினைப்பும் இல்லாம சுசுப்தியை அனுபவிச்ச வாசனை இருக்கே அந்த சுகமே வாசனைச் சுகம்.
4.ஆன்மானந்தம்: எல்லாத்துலேயும் நாமே நமக்கு முழுப் பிரியம்நு நினைக்கிறது ஆன்ம சுகமாம்.
5. முக்கியானந்தம்: யோகத்தில் சமாதில உள்ளது முக்கிய சுகம்.
6. நிஜானந்தம்: மனசில ஒரு சிந்தனையும் இல்லாம உதாசீனமா இருக்க முடிஞ்சா அந்த சுகம் நிசசுகம்.
7.அத்வைதானந்தம்: பிரபஞ்சத்தை அன்னியமா பாக்காம ஏகத்தை -ஒன்றையே- பாக்கிறது அத்துவித சுகம்
8.வித்தியாநந்தம்: மகா வாக்கியத்தோட அனுபவம் -பரமான்ம ஐக்கியத்தில எழுந்த சுகம் ஞானசுகமே.
7 comments:
most of us satisfied with first 1-3 anandas. even doesnot want to know other ananda. what a pity?
பாஸ்!!! (என்னைச் சொல்லிக்கிட்டேன்)
most of us satisfied with first 1-3 anandas./
அது கூட இல்லாம எவ்வளோ பேர் இருக்காங்க? :-|
//பாஸ்!!! (என்னைச் சொல்லிக்கிட்டேன்)//
அதானே பாத்தேன்!
BOSS ன்னு தானே சொன்னீங்க?
:-))
முதல் மூணு வகையிலேயே நிறையப்பேர் திருப்தி அடைஞ்சுடறதா பாலு ரொம்பவுமே வருத்தப் படறார்!
அப்படி வருத்தப் படறதுமே கூட ஒரு விதமான மாயைதான்னும், இப்படி வருத்தப் படறதே கூட நிறையப்பேருக்கு ஏன் ஒரு வகையில ஆனந்தமா இருக்குன்னு பாத்தபோது தான் ஊட்டுல கிண்டின உப்புமாவே பேரானந்தம்னு தெரிஞ்சது:-))
போச்சுடா! இப்ப இன்னொரு ஆனந்தம் சேந்துகிச்சு!
//ஊட்டுல கிண்டின உப்புமாவே பேரானந்தம்னு தெரிஞ்சது:-))//
மனசுக்கு நெருங்கினவங்க செஞ்சா வேப்பம்பூ ரசம் கூட ஆனந்தம் தான்! :))))))))
Post a Comment