130.
நிசமா னதுமுக் கியமோ குடத்துள நீரன் றேவெளி யீரந்தான்
வசமாவ கங்கர மறைந்தா னிசமது படிந்தான் முக்கிய வகையாகும்
திசையார் திரிசய மரியா தேதுயில் செறியா தேயுட றறிபோலே
அசையா தேமதி சமமா கியநிலை யதுதான் முக்கிய வாநந்தம்
வசமாய் அகங்கரம் (சாமானிய அகங்கார வசமாக பிரமாநந்தம்) மறைந்தால் நிசம். அந்த நிசமானது முக்கியமோ (முக்கிய ஆநந்தம் ஆகுமா? இல்லை). குடத்துள நீரன்று; வெளி ஈரந்தான். அது படிந்தால் (அந்த சாமானிய அகங்காரம் சமாதி அப்பியாசத்தால் நீங்கினால்) முக்கிய வகையாகும். திசையார் திரிசயம் (திக்குகளில் காணப்படும் விஷயங்கள்) அரியாதே, (அறியப்படாது) துயில் செறியாதே, (உறங்காது) உடல் தறி போலே அசையாதே, மதி (மனம்) சமமாகிய நிலை அதுதான் முக்கியவாநந்தம்.
--
நித்திரையில் உள்ள பிரம்மானந்தம் "நான்" என்ற அகங்கார எண்ணம் தோன்றியதுமே மறைஞ்சு போயிடும். அப்படி மறைஞ்சும் அதோட நினைவிருக்கிறது வாசனானந்தம்ன்னு பாத்தோம். யோக பயிற்சியால இந்த சாமான்ய அகங்காரமும் மறைந்து, தூக்கமும் இல்லாம, பெயர் உருவம் எல்லாம் மறைஞ்சு, உடல் தூண் போல அசைவில்லாமல் நிக்க, ஆன்மா சூக்ஷ்மமான தன்மை அடைந்துள்ள நிலையே முக்கியானந்தம்.
1 comment:
//யோக பயிற்சியால இந்த சாமான்ய அகங்காரமும் மறைந்து, தூக்கமும் இல்லாம, பெயர் உருவம் எல்லாம் மறைஞ்சு, உடல் தூண் போல அசைவில்லாமல் நிக்க, ஆன்மா சூக்ஷ்மமான தன்மை அடைந்துள்ள நிலையே முக்கியானந்தம்.//
ஆஹா, வராதா அந்த நிலைனு இருக்கு! இது புரியறது எனக்கே! :D
Post a Comment