129.
அந்தக் கணமுட லகமென் றிடர்களி லலைந்தே சுகந்தனை மறந்தேபோம்
முந்தைச் செயும்வினை சுகதுக் கந்தரு மோனந் தருநடு வடிவே காண்
எந்தப் புருடனு மொருசிந் தையுமற விருந்தே னெனலநு பவமாகும்
இந்தப் படிதனுதாசீ னச்சுக மிதுவே நிசமெனு மாநந்தம்.
[வாசனாநந்தம் போன] அந்தக் கணம் உடல் அகம் என்று இடர்களில் அலைந்தே [பிரமாநந்த] சுகந்தனை மறந்தே போம். முந்தைச் செயும் வினை சுக துக்கம் தரும்.
{அடுத்ததாக} மோனந் தரும் (தருவது) நடு (சுக துக்கமில்லாத) வடிவே காண். எந்தப் புருடனும் ஒரு சிந்தையும் அற இருந்தேன் எனல் அநுபவமாகும். இந்தப்படி தன் உதாசீன சுகம் இதுவே நிசம் எனும் ஆநந்தம்.
--
தூக்கம் கலைஞ்ச பின்னே, பழையபடி உடல்தான் நாம் என்கிற நினைப்பு வந்து, உலக விஷயங்களிலே வேலைகளில ஈடு பட்டு தினப்படி அவஸ்தை ஆரம்பிச்சுடும். அப்ப அந்த பிரம்மானந்த சுகம் மறந்தே போகும்.
சாதாரணமா மனசை நிறுத்தறது நடக்காத காரியம். ஆனா கொடுப்பினையாலோ பயிற்சியாலோ அப்படி செய்ய முடியும். (நெரூர் பிரம்மேந்திரர் அதிஷ்டானத்தில அப்படி செய்ய முடிஞ்சதுன்னு முன்னே எழுதி இருக்கேன்.) நல்லது, கெட்டது; சுகம், துக்கம் ன்னு ஒரு ஜட்ஜ்மெண்ட் பண்ணாம நடப்பதை சும்மா பார்த்துக்கிட்டு உதாசீனப்படுத்த முடியும். அப்படி இருக்க முடிஞ்சா அதுவே உண்மையான சுகம்.
அதாவது ஜாக்ரத் அவஸ்தையில் சுக துக்கம் இல்லாது இருக்கும் சுபாவ ஆநந்தம் நிஜ ஆநந்தமாகும்.
3 comments:
சதாசிவ ப்ரஹ்மேந்திறாள் சன்னதியில் மனசொடுங்கி...!
மனசுக்குப் புடிச்ச வாத்தியார் க்ளாஸ் எடுக்க வரும்போது பசங்க வாலைச் சுருட்டிக் கொண்டு, ரொம்ப நல்ல பிள்ளைங்களா,அமைதியா, அடக்கமா இருக்கறதில்லே...அது மாதிரி!
அனுபவிச்சிருக்கேன்!
கொடுப்பினை, பயிற்சி இதெல்லாம் இருந்ததோ, இல்லையோ யாருக்குத் தெரியும்?
மகான்களுடைய கருணை, இல்லாதவனுக்கும் தரும் அற்புதம் அது! அவ்யாஜ கருணாமூர்த்தி!
ஆஹா! என்ன உதாரணம்பா! முன் ஜென்மத்திலே விட்டு வெச்சதோ என்னவோ! மொத்தத்தில கொடுத்து வெச்சவர்!
//சாதாரணமா மனசை நிறுத்தறது நடக்காத காரியம். ஆனா கொடுப்பினையாலோ பயிற்சியாலோ அப்படி செய்ய முடியும். (நெரூர் பிரம்மேந்திரர் அதிஷ்டானத்தில அப்படி செய்ய முடிஞ்சதுன்னு முன்னே எழுதி இருக்கேன்.)//
புண்ய கர்ம ப்ராரப்த அநுபவத்தைக் கொடுப்பினை என்கிறோம். கொடுப்பினையால் மனம் அடங்கினால்
அது புண்ய நாசம் என்பதோடு நின்றுவிடுகிறது.அதை ஒரு ஸாதனை என்றோ, உயர்ந்த ஆன்மிக அநுபவம் என்றோ எப்படிக் கூறுவது?
ஸந்நிதாந விசேஷத்தால், அநுக்ரஹத்தால் அப்படி ஏற்பட்டிருக்கும்; அதற்கும் ஒரு காரணம் தேடத் தேவையில்லை; அது அவ்யாஜமானதாகும்.
தேவ்
Post a Comment