135.
குளிரிளகல் வெண்மையென்ற பதங்களினா னீர்மூன்று கூறா யிற்றோ
வொளிதவனஞ் செம்மையென்ற பதங்களா லக்கினியு மொருமூன் றாமோ
வெளிமுதலாஞ் சகமசத்து மூடமிட ரெனப்பிரித்து விலக்கி வேதம்
எளிதறிய முரண் மொழிந்த சத்தாதி யெனும்பிரம மேகந்தானே.
குளிர், இளகல், வெண்மை என்ற பதங்களினால் நீர் மூன்று கூறாயிற்றோ? ஒளி, தவனம் (சூடு) செம்மை (சிவப்பு) என்ற பதங்களால் அக்கினியும் ஒரு மூன்றாமோ? [ஆகாய] வெளி முதலாம் (முதலான) சகம், அசத்து (unreal) மூடம் (ஜடம்) இடர் (துக்கம்) எனப்பிரித்து விலக்கி வேதம், [பக்குவிகள்] எளிது அறிய முரண் மொழிந்த (எதிராக கூறிய) சத்தாதி (சத் முதலான [சத் சித் ஆநந்தம்]) எனும் பிரமம் ஏகந்தானே.
--
"தண்ணி சில்லுன்னு இருக்கும் உருவமில்லாம, இளகி ஓடும் (fluid), நிறமில்லாம இருக்கும்"ன்னு சொன்னா அது மூணு பொருளா ஆயிடுமா?இல்லை. சூடு, ஒளி, சிவப்பு நிறம் உடையதுன்னு சொன்னா நெருப்பு மூன்றாகுமா? இந்த பிரபஞ்சமானது அசத்து, சடம், துக்கம் ன்னு தெரிஞ்சுக்க பிரமத்தில அவற்றுக்கு மாறா சத், சித், ஆனந்தம் ன்னு 3 குணங்கள் உள்ளதாக வேதம் கூறியதே ஒழிய அக்குணங்கள் உள்ள பிரமம் ஒண்ணுதான்.
7 comments:
வாழ்த்துக்கள் நண்பரே
தொடர்ந்து எழுதுங்கள்
நிகழ்காலம், முதல் வருகைக்கு (இல்லை பின்னூட்டத்துக்கு ?) நன்றி. பின்னாலே நிகழ்காலத்திலேயே இருப்போம்ன்னு எழுதப்போறேன்!
:-))
/நிகழ்காலத்திலேயே இருப்போம்ன்னு எழுதப்போறேன்!/
வேறு வழி இல்லை!
:-))
என்ன தி வா சார்! இங்க இப்படி ஒரு கச்சேரி நடக்கறதா? சக்கை போடு போடுகிறீர்கள் போல!
/இங்க இப்படி ஒரு கச்சேரி நடக்கறதா?/
மோகனத்தமிழும் சேர்ந்தாக்க கச்சேரி நன்றாகவே களைகட்டும்!
வாங்க!
அரங்கனாருக்கு நல்வரவு!
ஆமாம் அண்ணா ரொம்ப நாளாவே தனி ஆவர்த்தனம் வாசித்து வரேனே இங்கே! ரசிகர் சிலர் பேஷ் பேஷ் உம் சொல்லறாங்க. தாளம் தப்புது சுருதி சரியில்லைன்னும் சொல்லறாங்க. பரம சௌக்கியமா இருக்கிறேன்.
:-))
ithu OK
Post a Comment