13. மாக புராணம் பேய் பிறவி அகற்றிற்று.
வஸிஷ்ட முனிவர் தன் சிஷ்யர்களுடன் பம்பையில் மாக ஸ்நாநம் செய்து மாகபுராணம் கூறிவந்தார். "மாக மாசத்தில் ஸூர்யோதய காலத்தில் ஸ்நாநம் செய்தால் முன் செய்த ஸஞ்சித பாபமும், ஆகாமி எனும் புதிய பாபமுமகலும். சிறிய பாபங்களும் பெரிய பாபங்களுமகலும். மாகஸ்நாநம் மறவாமல் செய்ய வேண்டும்" என மாகபுராணத்தை விஸ்தாரமாக கூறினார். அங்கு ஆலமரத்திலிருந்து வைச்ய பேய் பயங்கர உருவுடன் விழுந்தது. அதிலிருந்து ஒரு திவ்ய புருஷன் தோன்றி தனது சரிதத்தைத் கூறி வஸிஷ்டரை பணிந்து வைகுண்டஞ் சென்றது.
வஸிஷ்டர் அதைக்கண்டு ஆச்சர்யமடைந்து கூறினார்: "அந்த பேய் விழுந்தவுடன் தர்ப்பத்தின் நுனியால் நீரை தோய்த்து ஸ்நாநம் செய்வித்தேன். சிறிது நேரம் புராணம் கேட்டது. அதனால் அந்த பாக்கியத்தை பாருங்கள்! ஒரு நிமிஷம் கதாஸ்2ரவணம் செய்ததும் சிறிது ஸ்நாநம் செய்வித்ததுமே இந்த பாப சரீரத்தைப் போக்கி திவ்ய சரீரத்தை தந்ததென்றால் முப்பது நாளும் முறைப்படி ஸ்நாநம் செய்வோர் பெருமை, அவர் பெறும் பாக்கியம் பற்றி கூறவும் வேண்டுமோ? பகவத் கதையை விட்டு வீண் கதை பேசுவோர் முகத்திலும் ஸத்கதை கேளாதவர் முகத்தில் விழித்தாலும் பாபம். பக்தியுடன் கதை கேட்போரும், பக்தியுடன் கதை சொல்பவரும், பக்தியுடன் ஒரு சுலோகமாவது கேட்பவரும், வலைப்பூவில் எழுதுபவரும், படிப்பவரும் பகவத் ஸ்வரூபத்தை அடைவர்.”
2 comments:
//வஸிஷ்டர் அதைக்கண்டு ஆச்சர்யமடைந்து கூறினார்:.....
..... வலைப்பூவில் எழுதுபவரும் பகவத் ஸ்வரூபத்தை அடைவர்.//
:))) ’வலைப்பூவில் படிப்பவரும்’ என்று எங்கள் மேலும் இரக்கப்பட்டு சிபாரிசு பண்ணுங்களேன்.
:-)))
செஞ்சாச்சு!
Post a Comment