23. துளசீ மஹிமை.
பகவான் இந்த்ரனைப் பாரிஜாதத்துடன் ஸ்வர்க்கம் செல்லும்படி அனுமதித்தார். துளசீ மநுஷ்யரைபோல பேச ஆரம்பித்து, “ப்ரபோ! நான் உமது பாதத்தையே விரும்புபவள்! என்னைக் கைவிடலாகாது! எனக்கு நீரே கதி!” என்று வேண்டினாள். "அமிருதத்தில் பிறந்த ஓ துளசியே! நீ எனக்கு மிக பிரியமானவள். உன்னை மனதிலும் மார்பிலும் சதா தரிக்கிறேன். பவித்ரமான உனது கோமள தளத்தால் என்னை அர்ச்சிப்போர் கங்கா ஸ்நாந பலனைப்பெறுவர். துளஸீ தள மாலையை எனக்களிபோர் பல கல்பம் வரை வைகுண்டத்தில் வசிப்பர். உன்னை வளர்ப்பவரது உக்ரமான ஸகல் பாபங்களும் நஸி2க்கும். காலையில் எழுந்தவுடன் துளஸீ தர்ஸ2னம் செய்தால் அன்றெல்லாம் சுபதிநமாகும். துன்பம் தோன்றாது. உனது வேரில் உள்ள ம்ருத்திகை உடலிலும் நெற்றியிலும் தரித்தால் சுகமுண்டாகும். பூதப்பிரேதங்கள் அருகே அணுகா. உன்னையும் ஸ்ரீதேவியையும் சமமாகவே கருதுகிறேன்" என்று கூறி பகவான் இரு கைகளாலும் துளஸீ செடியை தடவினார். உடனே அது லக்ஷ்மி போல திவ்ய தேஹம் தரித்துப் பகவானை வணங்கினாள்! துளஸீ! உன்னை யான் ஏற்றுக்கொண்டேன். ஆயினும் நீ பூலோக க்ஷேமத்திற்காக செடி ரூபத்துடனே இரு என்றார். பகவானது இடது கை பட்டவிடம் கருந்துளஸியாயிற்று. அதே க்ருஷ்ண துளஸீ. துளஸீ செடியின் அருகிலுள்ள பூமியே மிக மிகப்பவித்ரமானதாகும்.ஸத்யஜித்தை அநுக்ரஹித்து பகவான் "நீ பதினொரு நாள் உபவாசமிருந்தாயல்லவா? இன்று பூஜையை முடித்து எனக்கு நிவேதனம் செய்வதை பாரணை செய். இது ஏகாதசி எனப்படும். இதே போல் உபவாஸம் இருந்து கண் விழித்து பூஜை செய்பவர் வைகுண்டம் செல்வர்" என்று கூறி மனைவியுடன் கூடிய ஸத்யஜித்தும் துளஸியும் பார்த்துக்கொண்டு இருக்கும் போதே வைகுண்டம் சென்றார். இப்படிப்பட்டது ஏகாதசி விரதம். அதிலும் மிகப்புண்யகரமானது மாக ஏகாதசி. அன்று உபவாஸமில்லாதவன் பிரும்ம ராக்ஷஸனாக ஆவான். த்வாதசியில் வேதமறிந்தவர்க்கு கன்றுடன் கோ, பூமி, ஸ்வர்ணம், வஸ்த்ரம், ஸாளக்ராமம், நிலம், பழம், தத்யன்னம், தாம்பூலம், உபவீதம், முதலியவற்றை பக்தியுடன் தாநம் செய்பவர் சக்ரவர்த்தி போன்ற பாக்கியத்தை அநுபவித்து முடிவில் வைகுண்டம் செல்வர்.
No comments:
Post a Comment