Pages

Saturday, January 30, 2016

கிறுக்கல்கள் - 85


கடவுளைப்பத்தி யாரும் பேசினால் அவரிடம் கேட்க மாஸ்டரிடம் கேள்வி எப்பவும் இருக்கும்.
ஒரு பிரசங்கி சொன்னார் “ எனக்கு கடவுளைப்பத்தி தெரிஞ்சது இவ்ளோதான்; அவர் ரொம்ப புத்திசாலி, நல்லவர்!”
மாஸ்டர் கேட்டார், “ அப்படின்னா ஏன் கெட்டதுக்கு எதிரா அவர் எதுவும் செய்யறதில்லை?”
எனக்கு எப்படி தெரியும்? நான் ஞானியா என்ன?”

பின்னால் மாஸ்டர் சொன்ன கதை: இரண்டு யூதர்கள் ரெஸ்டாரண்டில் சூப் அருந்திக்கொண்டு இருந்தார்கள். ஒருவர் சொன்னார் “ வாழ்க்கை ஆறின கஞ்சி போல இருக்கு!”
ஏன் அப்படி சொல்லறே?

எனக்கு எப்படி தெரியும்? நான் என்ன தத்துவவாதியா என்ன?

Friday, January 29, 2016

நான் யார்? - 16


எதுக்கு இவ்வளோ கஷ்டப்படணும்? கடவுளையோ குருவையோ பலமா பிடிச்சுக்கொண்டு வேண்டிக்கொண்டா அவங்க நம்மளை ஜீவன் முக்தனாக்க மாட்டாங்களா?

மாட்டாங்க. இதோ பாருப்பா இதான் வழின்னு காட்டுவங்களே தவிர அவங்களா நம்மை ஜீவன் முக்தனாக்க மாட்டாங்க.
குரு வேற கடவுள் வேறன்னு ரெண்டா இல்ல. இருவரும் ஒருவரே. புலி வாயில் அகப்பட்ட இரை எப்படி தப்பும்? வாய்ப்பே இல்லை. இது போல குருவோட அருள் கிடைச்சாச்சுன்னா அவர் கைவிடப்பட மாட்டார். ஆனாலும் அவர் காட்டற வழியில நாம்தான் நடக்கணும். அந்த பாதையில் கல்லு இருகோ முள்ளு இருக்கோ எல்லாத்தையும் நாம்தான் எதிர்கொள்ளணும். நான் யார்ன்னு நம்மை நாமே அறியாம இன்னொருத்தர் மூலமா எப்படி அறிய முடியும்? பாதையை தெரிஞ்ச பிறகு நாமேதான் அது வழியா போய் நம்மை நாமே அறிஞ்சுக்கணும். நம்மோட கண்ணை நாமேதான் திறக்கணும். ஞான ஒளியில நாம் நம்மையே அறியலாம். அதுக்கு நம்மோட புலன்களே வேண்டாம்; மனசே வேண்டாம்ன்னா, கண்ணாடி ஒண்ணு வேணுமான்னா?


20. கடவுளாலும் குருவாலும் ஒரு ஜீவனை முக்தனாக்க முடியாதா?
கடவுளும் குருவும் முக்தியை யடைவதற்கு வழியைக் காட்டுவார்களே யல்லாமல், தாமாகவே ஜீவர்களை முக்தியிற் சேர்க்கார். கடவுளும் குருவும் உண்மையில் வேறல்லர். புலி வாயிற்பட்டது எவ்வாறு திரும்பாதோ, அவ்வாறே குருவின் அருட் பார்வையிற் பட்டவர்கள் அவரால் ரக்ஷிக்கப்படுவரே யன்றி ஒருக்காலும் கைவிடப்படார்; எனினும், ஒவ்வொருவரும் தம்முடைய முயற்சியினாலேயே கடவுள் அல்லது குரு காட்டிய வழிப்படி தவறாது நடந்து முத்தியடைய வேண்டும். தன்னைத் தன்னுடைய ஞானக் கண்ணால், தானே யறியவேண்டுமே யல்லாமல், பிறராலெப்படியறியலாம்? ராமனென்பவன் தன்னை ராமனென்றறிவதற்குக்கண்ணாடி வேண்டுமோ?


Thursday, January 28, 2016

கிறுக்கல்கள் - 84


மாஸ்டரின் நண்பர் ஒருவர் சீனாவுக்கு போயிருந்தார், ஒரு படகில் இருந்த போது சற்று தூரத்தில் தொபால் என்று சத்தம் கேட்டது. பார்த்தால் ஒரு ஆசாமி தண்ணிரில் விழுந்துவிட்டிருந்தார். படகுக்காரன் அவருடைய முடியை பிடித்து மேலே தூக்கினான். இருவருக்கும் இடையில் ஏதோ சூடான விவாதம் நடந்தது. பின் படகுக்காரர் ஆசாமியை தண்ணீரில் முக்கினார். மேலே வந்த பிறகு திருப்பியும் விவாதம் தொடர்ந்தது.

நண்பருக்கு ஒன்றும் புரியவில்லை. தன் படகுக்காரனை பார்த்து என்ன நடக்கிறது என்று கேட்டார்.
ஒண்ணுமில்லை. படகுக்காரர் ஆசாமியை காப்பாத்த 60 யுவான் பணம் கேக்கறார். இவரோ 40 தான் தருவேன்னு சொல்லறார். பேரம் நடக்குது!”

இதை கேட்டு எல்லோரும் சிரித்தார்கள்.
பின்னர் மாஸ்டர் கேட்டார், “ இங்கே யாரும் இருக்கிற தன் ஒரே வாழ்கையைப்பற்றி பேரம் பேசாமல் இருக்கிறீர்களா?”
பலத்த மௌனம் நிலவியது.

Wednesday, January 27, 2016

நான் யார்? - 15


இந்த வைராக்கியம், வைராக்கியம்ன்னு சொல்றாங்களே அது என்ன?
பற்றின்மையே வைராக்கியம். எப்படியோ பழக்கத்துல இது உறுதித்தன்மை- டிடர்மினேஷன் - என்கிற பொருள்ள மட்டுமே வழங்கப்பட ஆரம்பிச்சுடுத்து.
கிளம்புகிற நினைவுகளில ஒரு பற்றையும் வைக்காம கிளம்பற இடத்திலேயே நசுக்கிப்போடணும். இதுவே வைராக்கியம்.
சாதாரணமா உடம்பு மிதக்கும். அது தண்ணிக்குள்ள போகணும்ன்னா வேற ஒரு உதவி தேவைப்படும். அதுக்காக கனமான கல்லை கால்ல கட்டிகிட்டு முத்து குளிக்க குதிப்பாங்க. முத்தை கண்டு எடுக்கிறதே லட்சியம். அத கண்டுபிடிச்சு சேர்த்தவுடன் கல்லை கழட்டி விட்டுட்டா சுலபமா மேலே வந்துடலாம்.
அது போல ஆத்மாவை தரிசிக்கணும் என்கிற ஒரே ஒரு பற்றை மட்டும் வெச்சுக்கொண்டு உள்ளே ஆழ்ந்து முழுகி லட்சியத்தை அடந்தவுடன் அந்த பற்றும் நீங்கி ஆத்மாவிலேயே நிலையாக நிக்கலாம்.

19. வைராக்கியமாவது எது?
எவ்வெந் நினைவுகள் உற்பத்தியாகின் றனவோ அவற்றை யெல்லாம் ஒன்றுகூட விடாமல் உற்பத்தி ஸ்தானத்திலேயே நசுக்கிப் போடுவதே வைராக்கியமாம். முத்துக் குளிப்போர் தம்மிடையிற் கல்லைக் கட்டிக் கொண்டு மூழ்கிக் கடலடியிற் கிடைக்கும் முத்தை எப்படிஎடுக்கிறார்களோ, அப்படியே ஒவ்வொருவனும் வைராக்கியத்துடன் தன்னுள் ளாழ்ந்து மூழ்கி ஆத்ம முத்தையடையலாம்.


Tuesday, January 26, 2016

கிறுக்கல்கள் - 83


நவீன தொழிற்நுட்பம் பற்றி பேசுகையில் மாஸ்டர் ஒரு கதை சொன்னார்.
என் நண்பர் ஒருவர் அவருடைய குழந்தைகளுக்கு இசை கற்றுத்தர விரும்பினார். அதற்காக ஒரு பியானோவை வாங்கினார். குழந்தைகள் எல்லாம் அதைச்சுற்றி கும்மாளமிட்டன.
இதுலேந்து என்ன வரும்?”
இசை”
சரி, கரண்ட் கனக்‌ஷன் கொடுக்க வயரே காணமே?”

Monday, January 25, 2016

நான் யார்? - 14



அப்படின்னா பக்தி செய்யறது எல்லாம் வேணாமா?


நம்மோட உள்ள்ள்ள்ள்ளே இருக்கிற சொரூபமேதான் கடவுள். யார் தன்னையே இந்த கடவுளுக்கு கொடுத்துவிடறானோ அவந்தான் மிகச்சிறந்த பக்திமான்! அதனால உள்ளே இருக்கிற ஆத்மா பத்திய சிந்தனைக்கு மட்டுமே இடம் கொடுத்து மத்த சிந்தனை எதுக்கும் இடம் கொடுக்காம ஆத்ம நிஷ்டையிலேயே இருக்கறதுதான் முழு அர்ப்பணிப்பு -சாக்ரிஃபைஸ்!

பின்னே நாம செய்ய வேண்டிய காரியங்களை எல்லாம் யார் செய்வாங்க?

முன்னே சூரியனைப்பத்தி சொன்னா மாதிரி இயற்கையா எல்லாம் நடக்கும். ஒரு பரமேஶ்வர சக்தி அப்படி தன் முன்னிலையில் எல்லாம் தானாக நடக்க விதிச்சு இருக்கு. அப்படி இருக்கறப்ப எதுக்கு நாம இப்படி செய்யணும் அப்படி செய்யணும்ன்னு மண்டையை உடைச்சுக்கணும்பரமேஶ்வரன் மேல பாரத்தை போட்டுட்டு சும்மா இருக்க கத்துக்கணும்.
ஒரு ட்ரெய்ன்ல போறோம். நம்ம தலை மேல ஒரு கனமான மூட்டையை வெச்சுகிட்டு போறோம். யாரும் என்னப்பா இதுன்னு கேட்டா நான் இந்த மூட்டையை தூக்கிகிட்டு போறேன்ன்னு சொன்னா எப்படி இருக்கும்? ட்ரெய்ந்தான் நம்மை சுமக்குது. நாம் மூட்டையை தூக்கி மேலே வெச்சுகிட்டா அதையும் சேத்து தூக்கிக்கும், மூட்டையை கீழே வைச்சாலும் வைக்காட்டாலும் மூட்டையை சுமக்கறது ட்ரெய்ந்தானே? அப்ப அதை நாம் ஏன் தலையில தூக்கி வெச்சுக்கணும்?

அது போலத்தான் எல்லா காரியங்களையும் அதே பரமேஶ்வர சக்தி நடத்தறபடி நடத்திகிட்டு போகட்டும்ன்னு விட்டுடணும். நாம நம்ம வாசனைப்படி இயங்கி நம்முடைய கர்மாவை தீர்த்துப்போம். புதுசா எதையாவது செஞ்சு கர்மாவை மேலும் சம்பாதிச்சுக்காம இருந்தாலே போதும்.

18. பக்தருள் மேலான பக்தர் யார்?
எவன் தன்னையே, கடவுளாகிய சொரூபத்தினிடத்தில் தியாகம் செய்கிறானோ அவனே சிறந்த பக்திமான். ஆத்ம சிந்தனையைத் தவிர வேறு சிந்தனை கிளம்புவதற்குச் சற்றுமிடங்கொடாமல் ஆத்ம நிஷ்டாபரனா யிருப்பதே தன்னை ஈசனுக் களிப்பதாகும்.
ஈசன்பேரில் எவ்வளவு பாரத்தைப் போட்டாலும், அவ்வளவையும் அவர் வகித்துக் கொள்ளுகிறார். சகல காரியங்களையும் ஒரு பரமேச்வர சக்தி நடத்திக் கொண்டிருக்கிறபடியால், நாமு மதற் கடங்கி யிராமல், 'இப்படிச் செய்ய வேண்டும் அப்படிச் செய்ய வேண்டு'மென்று சதா சிந்திப்பதேன்? புகை வண்டி சகல பாரங்களையும் தாங்கிக்கொண்டு போவது தெரிந்திருந்தும் அதிலேறிக் கொண்டு போகும் நாம் நம்முடைய சிறிய மூட்டையையும் அதிற் போட்டுவிட்டுச் சுகமா யிராமல், அதை நமது தலையிற் றாங்கிக் கொண்டு ஏன் கஷ்டப்பட வேண்டும்?

Saturday, January 23, 2016

கிறுக்கல்கள் - 82


ஒரு முட்டாள் மட்டுமே சத்தியத்துக்காக எல்லாத்தையும் விட்டுக்கொடுக்க தயங்குவான்”என்றார் மாஸ்டர்.

வழக்கம்போல் ஒரு கதை சொன்னார்.

ஒரு சின்ன நாட்டில் நிலத்தடியில் எண்ணை இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. எண்ணை கம்பெனி ஏராளமான பணம் கொடுத்து அந்த இடத்தில் இருந்தவர்களிடம் நிலத்தை வாங்கத்தொடங்கியது. எல்லாருக்கும் நல்ல விலை கிடைத்ததால் விற்றுவிட்டார்கள். ஒரு கிழவி மட்டும் தன் தோட்டத்தை விற்க மறுத்தாள். கம்பனி மெதுவாக தரத்தயாராக இருந்த விலையை ஏறிக்கொண்டே போயிற்று. கிழவி அசைந்து கொடுக்கவில்லை. ஒரு நண்பர் அதிர்ச்சி அடைந்து அவளிடம் போய் ஏன் என்று கேட்டார்.

இது கூடவா உனக்குத்தெரியலை? அந்த தோட்டத்திலேந்து வர வருமானத்துலதான் என் ஜீவனமே நடக்குது! அது வித்துட்டா நான் வருமானத்துக்கு என்ன பண்ணுவேன்?”

Friday, January 22, 2016

நான் யார்? -13



அப்படின்னா பக்தி செய்யறது எல்லாம் வேணாமா?

நம்மோட உள்ள்ள்ள்ள்ளே இருக்கிற சொரூபமேதான் கடவுள். யார் தன்னையே இந்த கடவுளுக்கு கொடுத்துவிடறானோ அவந்தான் மிகச்சிறந்த பக்திமான்! அதனால உள்ளே இருக்கிற ஆத்மா பத்திய சிந்தனைக்கு மட்டுமே இடம் கொடுத்து மத்த சிந்தனை எதுக்கும் இடம் கொடுக்காம ஆத்ம நிஷ்டையிலேயே இருக்கறதுதான் முழு அர்ப்பணிப்பு -சாக்ரிஃபைஸ்!

பின்னே நாம செய்ய வேண்டிய காரியங்களை எல்லாம் யார் செய்வாங்க?

முன்னே சூரியனைப்பத்தி சொன்னா மாதிரி இயற்கையா எல்லாம் நடக்கும். ஒரு பரமேஸ்வர சக்தி அப்படி தன் முன்னிலையில் எல்லாம் தானாக நடக்க விதிச்சு இருக்கு. அப்படி இருக்கறப்ப எதுக்கு நாம இப்படி செய்யணும் அப்படி செய்யணும்ன்னு மண்டையை உடைச்சுக்கணும்? பரமேஸ்வரன் மேல பாரத்தை போட்டுட்டு சும்மா இருக்க கத்துக்கணும்.
ஒரு ட்ரெய்ன்ல போறோம். நம்ம தலை மேல ஒரு கனமான மூட்டையை வெச்சுகிட்டு போறோம். யாரும் என்னப்பா இதுன்னு கேட்டா நான் இந்த மூட்டையை தூக்கிகிட்டு போறேன்ன்னு சொன்னா எப்படி இருக்கும்? ட்ரெய்ந்தான் நம்மை சுமக்குது. நாம் மூட்டையை தூக்கி மேலே வெச்சுகிட்டா அதையும் சேத்து தூக்கிக்கும், மூட்டையை கீழே வைச்சாலும் வைக்காட்டாலும் மூட்டையை சுமக்கறது ட்ரெய்ந்தானே? அப்ப அதை நாம் ஏன் தலையில தூக்கி வெச்சுக்கணும்?

அது போலத்தான் எல்லா காரியங்களையும் அதே பரமேஸ்வர சக்தி நடத்தறபடி நடத்திகிட்டு போகட்டும்ன்னு விட்டுடணும். நாம நம்ம வாசனைப்படி இயங்கி நம்முடைய கர்மாவை தீர்த்துப்போம். புதுசா எதையாவது செஞ்சு கர்மாவை மேலும் சம்பாதிச்சுக்காம இருந்தாலே போதும்.

18. பக்தருள் மேலான பக்தர் யார்?
எவன் தன்னையே, கடவுளாகிய சொரூபத்தினிடத்தில் தியாகம் செய்கிறானோ அவனே சிறந்த பக்திமான். ஆத்ம சிந்தனையைத் தவிர வேறு சிந்தனை கிளம்புவதற்குச் சற்றுமிடங்கொடாமல் ஆத்ம நிஷ்டாபரனா யிருப்பதே தன்னை ஈசனுக் களிப்பதாகும்.
ஈசன்பேரில் எவ்வளவு பாரத்தைப் போட்டாலும், அவ்வளவையும் அவர் வகித்துக் கொள்ளுகிறார். சகல காரியங்களையும் ஒரு பரமேச்வர சக்தி நடத்திக் கொண்டிருக்கிறபடியால், நாமு மதற் கடங்கி யிராமல், 'இப்படிச் செய்ய வேண்டும் அப்படிச் செய்ய வேண்டு'மென்று சதா சிந்திப்பதேன்? புகை வண்டி சகல பாரங்களையும் தாங்கிக்கொண்டு போவது தெரிந்திருந்தும் அதிலேறிக் கொண்டு போகும் நாம் நம்முடைய சிறிய மூட்டையையும் அதிற் போட்டுவிட்டுச் சுகமா யிராமல், அதை நமது தலையிற் றாங்கிக் கொண்டு ஏன் கஷ்டப்பட வேண்டும்?


Thursday, January 21, 2016

கிறுக்கல்கள் - 81


ஞானம் அடைந்தாயிற்று என்பது பற்றி இன்னொரு காலத்தில் சொன்னார்…
பாபத்தை பாபமாக பார்ப்பதால் ஞானி அதை செய்ய மாட்டான். கொஞ்சம் யோசித்துவிட்டு சொன்னார் “ அதை செய்ய அவனை சபலப்படுத்தவும் முடியாது!

வழக்கம்போல் கதை சொன்னார்:
ஒரு கடத்தல்காரன் பொருட்களை கடத்தி வரும்போது போலீஸ் துரத்தியது. வேறு வழி இல்லாமல் கண்ணில் பட்ட மடாலயத்துக்குள் புகுந்து கொண்டான். அங்கிருந்த துறவியைப்பார்த்து கேட்டான் “ சாமி, இதை எல்லாம் இங்கே கொஞ்சம் பதுக்கி வெச்சுக்கறேன். போலீஸ் உங்களை சந்தேகப்பட மாட்டாங்க!”
துறவிக்கு பெரும் கோபம் வந்துவிட்டது! “ என்னை என்னன்னு நினைச்சே?”
சாமி, இதை செஞ்சா உங்க மடாலயத்துக்கு லட்ச ரூபா கொடுக்கறேன்!”
கொஞ்சம் தயங்கிவிட்டு “உஹும்!”
ரெண்டு லட்சம்?”
அப்பவும் சம்மதிக்கலை.
அஞ்சு லட்சம் தரேன் சாமி. மாட்டேன்னு சொல்லாதீங்க!”

வெளியே போடா ராஸ்கல்! என் விலைக்கு ரொம்ப கிட்டே வந்துட்டே!”

Wednesday, January 20, 2016

நான் யார்? - 12


நடக்கறது எல்லாமே கடவுளோட வேலைதானே?

சூரியன் உதிக்கணும்ன்னு நினைச்சா உதிக்கறான்? அது இயற்கை. ஆனா அதுக்கப்பறமா உலகத்துல சூடு ஏறுது; கந்தக பூமில வாழறவங்க சூட்டை உணருவாங்க. சூரியன் உதிச்சா தாமரை மலருது. தரையில் இருக்கற ஈரம் உலருது. இதெல்லாம் இயற்கைதானே? காந்தக்கல் முன்னே வைக்கிற இரும்பு ஊசி அதால கவரப்படறது இயற்கை என்கிறது போல ஈஸ்வரனோட சந்நிதியில பூமியில் அத்தனை பேரும் அவரவர் வேலையை செய்ய ஆரம்பிக்கறாங்க. என்ன செய்யறாங்க என்கிறது அவரவர் கர்மாவை பொருத்து அமையுது. இவரிவர் இப்படி இப்படி செய்யணும்ன்னு ஈஸ்வரனுக்கு சங்கல்பம் ஒண்ணும் கிடையாது.
நிஷ்காம்ய கர்மம் பத்தி தெரியுமில்லே? முன்னேயே அது பத்தி பாத்து இருக்கோம். மனுஷனுக்கே இயற்கையா செய்கிற கர்மாவுடைய பலன் அவனுக்கு ஒட்டாதுன்னா ஈஸ்வரனோட சன்னிதான விசேஷத்தால மட்டுமே நடக்கும் கர்மாவுக்கும் அவருக்கும் எப்படி சம்பந்தம் வரும்?
சூரியனோட முன்னிலையில் வெளிச்சத்தில நடக்கிற தாமரை மலர்வது போன்ற விஷயங்களுக்கும் சூரியனுக்கும் எப்படி சம்பந்தமில்லையோ; எப்படி மண், நெருப்பு, தண்ணீர், காற்றுக்கும் இது எல்லாத்துக்கும் இடம் தர ஆகாயத்துக்கும் சம்பந்தமில்லையோ, அது போலவே ஈஸ்வரனுக்கும் மனிதர் செய்யும் காரியங்களுக்கும் சம்பந்தமில்லை.

17 எல்லாம் ஈசன் செய லன்றோ?
இச்சா ஸங்கல்ப யத்தன மின்றியெழுந்த ஆதித்தன் சன்னிதி மாத்திரத்தில் காந்தக்கல் அக்கினியைக் கக்குவதும், தாமரை யலர்வதும், நீர் வற்றுவதும், உலகோர் தத்தங்காரியங்களிற் பிரவிருத்தித்து இயற்றி யடங்குவதும், காந்தத்தின் முன் ஊசி சேஷ்டிப்பதும்போல, ஈசன் சன்னிதான விசேஷ மாத்திரத்தால் நடக்கும் முத்தொழில் அல்லது பஞ்சகிருத்தியங்கட் குட்பட்ட ஜீவர்கள் தத்தம் கர்மானுசாரம் சேஷ்டித் தடங்குகின்றனர். அன்றி, அவர் சங்கல்ப ஸஹிதரல்லர்; ஒரு கருமமும் அவரை யொட்டாது. அது, லோககர்மங்கள் சூரியனை யொட்டாததும், ஏனைய சதுர் பூதங்களின் குணா குணங்கள் வியாபகமான ஆகாயத்தை யொட்டாததும் போலும்.


Tuesday, January 19, 2016

கிறுக்கல்கள் - 80


ஒரு குறும்பு சீடன் கேட்டான்: ஞானம் அடைஞ்சாச்சுன்னு எப்படி தெரிஞ்சுக்கறது?

இதோ ஒரு வழி. நீ உன்னையே இப்படி கேட்டுக்கொண்டு இருப்பே. “நான் கிறுக்கா? இல்லை மத்தவங்க எல்லாரும் கிறுக்கா?”

***

விருந்தினர் சீரியஸாக கேட்டார்: மாஸ்டரோட வேலை என்ன?

மாஸ்டர் சீரியஸாவே பதில் சொன்னார்: ஜனங்களுக்கு சிரிக்கச்சொல்லிக் கொடுக்கறது!
***
வாழ்கையை பார்த்து சிரிக்கக் கத்துக்கொண்டு விட்டாயானால் நீ உலகின் சக்ரவர்த்தி ஆகிவிடுகிறாய்……. சாகத்தயாராகிவிட்ட நபரைப்போல்!

Monday, January 18, 2016

நான் யார்? - 11



அந்த சொரூபம் எப்படி இருக்கும்? அதோட இயல்பு என்ன?
சொரூபம் மட்டுமே இயல்பா இருக்கும். அதுவே ஆத்மாவோட சொரூபம். நாம உலகம் சீவன் கடவுள்ன்னு எல்லாம் சொல்கிறோமே அது எல்லாமே இது மேல தோற்றுவிக்கப்பட்ட கற்பனைகளே.
கடற்கரையில ஒரு சிப்பி இருக்கு. நாம கடற்கரையில் உலாவ போகறப்ப இது நம் கண்ணுல படுது. சூரிய ஒளியில இது பளிச்சுன்னு இருக்கு. நாம அதை ஏதோ வெள்ளியால செஞ்ச பொருள் அங்கே கிடக்குன்னு நினைப்போம். கிட்டே போய் பார்க்கிற வரைக்கும் இது நமக்கு வெள்ளியாத்தான் தோணும். கிட்டே போய் பார்த்தா து வெள்ளி இல்லே, சிப்பின்னு தெரியு.
அது போலத்தான் இதுவும். சீவன் ஈஸ்வரன் உலகம்ன்னு எல்லாம் கற்பனை செஞ்சது எல்லாம் ஒரே பொருளைத்தான். விசாரணை செஞ்ச பிறகே அப்படி எல்லாம் ஒண்ணுமில்லை; அது நம்மோட பார்வையை பொருத்தே இருந்ததுன்னு தெரிய வரும்.

16. சொரூபத்தின் இயல்பு என்ன?
யதார்த்தமா யுள்ளது ஆத்மசொரூப மொன்றே. ஜக, ஜீவ, ஈச்வரர்கள் சிப்பியில் வெள்ளிபோல் அதிற்கற்பனைகள்; இவை மூன்றும் ஏக காலத்தில் தோன்றி, ஏக காலத்தில் மறைகின்றனநான் என்கிற நினைவு கிஞ்சித்தும் இல்லாத விடமே சொரூபமாகும். அதுவே மௌன மெனப்படும். சொரூபமே ஜகம்; சொரூபமே நான்; சொரூபமே ஈச்வரன்; எல்லாம் சிவ சொரூபமே.

Saturday, January 16, 2016

கிறுக்கல்கள் - 79


ஒரு யாத்ரிகர் குழுவினர் தம் பயணத்திட்டத்தில்  மாஸ்டரை சந்திப்பதை சேர்த்துக்கொண்டனர்.
மாஸ்டர் முன் வந்து சேர்ந்த பிறகு தங்களுக்கு ஏதேனும் சொல்லுமாறு கேட்டுக்கொண்டனர்.
மாஸ்டருக்கு அவர்களை பார்த்த மாத்திரத்திலேயே அவர்களுக்கு ஆன்மீக நாட்டம் ஒன்றுமில்லை; மாஸ்டரை தரிசிப்பது ஃபேஷன் ஆகிவிட்டதால் அங்கு வந்திருக்கிறார்கள் என்று புரிந்துவிட்டது. சிரித்துக்கொண்டே அவர்களை பார்த்துச்சொன்னார்: நீங்கள் ஆன்மீகவாதிகள் இல்லை என்பதை முதலில் உணருங்கள்.
மூக்கில் குத்தப்பட்டதைபோல உணர்ந்த அவர்கள் விளக்குமாறு கேட்டார்கள்.

மாஸ்டர் வழக்கம்போல் கதை சொன்னார்: ஒரு முயலும் சிங்கமும் ஒரு வெஜிடேரியன் ஓட்டலுக்குள் நுழைந்தன. எல்லாரும் திகைத்துபோய் பார்த்துக்கொண்டு இருந்தார்கள். சர்வரிடம் முயல் சொன்னது, “ ஒரு ப்ளேட் காரட். கூட ஒண்ணும் வேணாம்.”
ஒரு வழியாக சுதாரித்துக்கொண்ட சர்வர் கேட்டார் “உங்க நண்பருக்கு? என்ன கொண்டு வரட்டும்”
ஒண்ணும் வேணாம்.”
ம்ம்ம் இந்த சிங்கத்துக்கு பசி இல்லையா?”
சர்வரை பார்த்து முறைத்துக்கொண்டு முயல் கேட்டது “சிங்கமா? இது சிங்கமா இருந்தா வெஜிடேரியன் ஹோட்டல்ல என செஞ்சுகிட்டு இருக்கு? இது சும்மா ஒரு போலி!”

Friday, January 15, 2016

நான் யார்? - 10


ம்ம்ம்...  ஒரு வேளை நீங்க சொல்லறத நம்பி விசாரணையை ஆரம்பிச்சுட்டேன்னு வைங்க. எது வரைக்கும் அதை செய்யணும்?

எது வரைக்கும் உலக விஷயங்களில ஈர்ப்பு இருக்கோ அது வரை செய்யணும். நினைவுகள் எப்பல்லாம் தோணுதோ அப்பல்லாம் அவை கிளம்பற இடத்திலேயே நசுக்கணும். அத எப்படி செய்யறதுன்னு ஏற்கெனெவே பாத்து இருக்கோம்.
முன் காலத்து ராஜா ராணி கதை மாதிரி. ஒரு கோட்டையிலேந்து வீரர்கள் வந்து கொண்டே இருக்காங்க. அவங்க வர வர ராஜ குமாரன் அவங்களை வெட்டி வீழ்த்திகிட்டே இருப்பான்னு கதை வருமில்ல? அந்த மாதிரி மனசுலேந்து எண்ணங்கள் வர வர அதை எல்ல நசுக்கி போட்டுகிட்டே இருந்தா ஒரு வழியா வாசனைகள் எல்லாம் போய் அவை வரது நின்னுடும். சொரூபத்தையே த்யானம் செய்து கொண்டு இருப்பதே போதும். சொரூபத்தை அடைஞ்சுடுவான்.


15. விசாரணை எதுவரையில் வேண்டும்?
மனத்தின்கண் எதுவரையில் விஷய வாசனைகளிருக்கின்றனவோ, அதுவரையில் நான் யார் என்னும் விசாரணையும் வேண்டும். நினைவுகள் தோன்றத்தோன்ற அப்போதைக்கப்போதே அவற்றை யெல்லாம் உற்பத்தி ஸ்தானத்திலேயே விசாரணையால் நசிப்பிக்க வேண்டும். ஒருவன் சொரூபத்தை யடையும் வரையில் நிரந்தர சொரூப ஸ்மரணையைக் கைப்பற்றுவானாயின், அதுவொன்றே போதும். கோட்டைக்குள் எதிரிகளுள்ள வரையில்அதிலிருந்து வெளியே வந்துகொண் டிருப்பார்கள்; வரவர அவர்களை யெல்லாம் வெட்டிக் கொண்டே யிருந்தால் கோட்டை கைவசப்படும்.

Thursday, January 14, 2016

கிறுக்கல்கள் - 78



ஏன்? ஏன்? ஏன்? ” என்று அலறினார் ஒரு சீடர். 24 மணி நேரத்துக்கு முந்தானே மாஸ்டர் இரு கைகளையும் நீட்டி வரவேற்றார். இப்போது வெளியே போ என்கிறாரே!
ஏன்னா உனக்கு மாஸ்டர் தேவையில்லை. நான் வழியைத்தான் காட்ட முடியும்; நீதான் நட்க்கணும். நான் தண்ணீரை காட்ட முடியும்; நீயேதான் குடிக்கணும். என்னை ஆச்சரிய பார்வை பார்த்துக்கொண்டு இங்கே ஏன் உன் நேரத்தை வீணாக்கணும்?
உனக்கு வழி தெரியும்; நட. தண்ணீர் உன் எதிரிலேயே இருக்கு; குடி”

போகி - மீள் பதிவு


இன்று போகியை ஒட்டி செய்ய வேண்டிய பூஜை இந்த்ர பூஜையும் கோ பூஜையும்.

பூஜ விதானம் இதோ:

[பசுஞ்சாணத்தை ஒரு பிம்பமாக பிடித்து வைத்து, அதில் இந்திரனை ஆவாஹனம் செய்து அடுத்து வரும் பூஜையை செய்யலாம்.]

இந்த்³ரபூஜா ||
ஐராவத க³ஜாரூட⁴ம்ʼ ஸஹஸ்ராக்ஷம்ʼ  ஶசீபதிம் |  வஜ்ராயுத⁴ த⁴ரம்ʼ தே³வம்ʼ ஸர்வலோக மஹீபதிம் ||

இந்த்³ராண்யா ச ஸமாயுக்தம்ʼ வஜ்ரபாணிம்ʼ ஜக³த்ப்ரபு⁴ம் |  இந்த்³ரம்ʼ த்⁴யாயேத் து தே³வேஶம்ʼ ஸர்வ மங்க³ல ஸித்³த⁴யே ||

அஸ்மின் கோ³மயபி³ம்பே³ இந்த்³ராணீ ஸமேதம் இந்த்³ரம்ʼ த்⁴யாயாமி, இந்த்³ராணீ ஸமேதம் இந்த்³ரம் ஆவாஹயாமி ||

இந்த்³ராய நம​:, ரத்னஸிம்ʼஹாஸனம்ʼ ஸமர்பயாமி |  ஐராவத க³ஜாரூடா⁴ய நம​:, பாத்³யம்ʼ ஸமர்பயாமி |

வஜ்ரபாணயே நம​:, அர்க்⁴யம்ʼ ஸமர்பயாமி |  ஶசீபதயே நம​:, ஆசமனீயம்ʼ ஸமர்பயாமி |

 ஸஹஸ்ராக்ஷாய நம​:, ஸ்நபயாமி | ஸ்நானானந்தரம் ஆசமனீயம்ʼ ஸமர்பயாமி |

ஸர்வலோக மஹீபதயே நம​:, வஸ்த்ரம்ʼ ஸமர்பயாமி |

தே³வேஶாய நம​:, உபவீதம்ʼ ஸமர்பயாமி |

இந்த்³ராணீ ஸமேதாய நம​:, ஆப⁴ரணானி ஸமர்பயாமி |

ஜக³த​: ப்ரப⁴வே நம​:, க³ந்தா⁴ன் தா⁴ரயாமி |  க³ந்த⁴ஸ்யோபரி ஹரித்³ராகுங்குமம்ʼ ஸமர்பயாமி |

இந்த்³ராய நம​:, புஷ்பமாலாம்ʼ ஸமர்பயாமி |

அர்சனா:
இந்த்³ராய நம​:, மஹேந்த்³ராய நம​:, தே³வேந்த்³ராய நம​:, வ்ருʼத்ராரயே நம​:, பாகஶாஸனாய நம​:, ஐராவத க³ஜாரூடா⁴ய நம​:, பி³டௌ³ஜஸே நம​:, ஸ்வர்னாயகாய நம​:, ஸஹஸ்ர நேத்ராய நம​:, ஶுப⁴தா³ய நம​:, ஶதமகா²ய நம​:, புரந்த³ராய நம​:, த்ரிலோகேஶாய நம​:, ஶசீபதயே நம​:

 இந்த்³ராணீஸமேதாய இந்த்³ராய நம​:, நானாவித⁴பரிமலபத்ரபுஷ்பாணி ஸமர்பயாமி |

இந்த்³ராணீஸமேதாய இந்த்³ராய நம​:, தூ⁴பம் ஆக்⁴ராபயாமி |

இந்த்³ராணீஸமேதாய இந்த்³ராய நம​:, தீ³பம்ʼ த³ர்ஶயாமி |

இந்த்³ராணீஸமேதாய இந்த்³ராய நம​:, மஹா நைவேத்³யம்ʼ நிவேத³யாமி |
 நிவேத³னானந்தரம் ஆசமனீயம்ʼ ஸமர்பயாமி |

இந்த்³ராணீஸமேதாய இந்த்³ராய நம​:, தாம்பூ³லம்ʼ ஸமர்பயாமி |

இந்த்³ராணீஸமேதாய இந்த்³ராய நம​:, கர்பூரனீராஜனம்ʼ ஸமர்பயாமி |  நீராஜனானந்தரம் ஆசமனீயம்ʼ ஸமர்பயாமி |

இந்த்³ராணீஸமேதாய இந்த்³ராய நம​:, அனந்த கோடி ப்ரத³க்ஷிண நமஸ்காரான் ஸமர்பயாமி |
ஹே தே³வ கா³ம்ʼ ரக்ஷ, மாம்ʼ ரக்ஷ, மம குடும்ப³ம்ʼ ரக்ஷ |

||  கோ³பூஜா ||
{பிரத்யஷ்யமா பசு இல்லைன்னா அதன் பிம்பம்; அதுவும் இல்லைனா இந்த பசும் சாணத்திலேயே ஆவாஹணம் செய்யலாம். பசுஞ்சாணத்துக்கு எங்கே போக ன்னு கேட்டா... சாரி! விடை இல்லை! }

காமதே⁴னோ​: ஸமுத்³பூ⁴தே ஸர்வ காம ப²ல ப்ரதே³ |  த்⁴யாயாமி ஸௌரபே⁴யி த்வாம்ʼ வ்ருʼஷ பத்னி நமோஸ்து தே ||  கா³ம்ʼ த்⁴யாயாமி |
ஆவாஹயாமி தே³வேஶி ஹவ்ய கவ்ய ப²லப்ரதே³ |  வ்ருʼஷபத்னி நமஸ்துப்⁴யம்ʼ ஸுப்ரீதா வரதா³ ப⁴வ ||  கா³ம்ʼ ஆவாஹயாமி |

காமதே⁴னவே நம​:, ஆஸனம்ʼ ஸமர்பயாமி |  பயஸ்வின்யை நம​:, பாத்³யம்ʼ ஸமர்பயாமி |

ஹவ்ய கவ்ய ப²ல ப்ரதா³யை நம​:, அர்க்⁴யம்ʼ ஸமர்பயாமி |

 க³வே நம​:, ஆசமனீயம்ʼ ஸமர்பயாமி |

ஸௌரபே⁴ய்யை நம​:, ஸ்நபயாமி, ஸ்நானானந்தரம் ஆசமனீயம்ʼ ஸமர்பயாமி |

க்ஷீர தா⁴ரிண்யை நம​:, வஸ்த்ரம்ʼ ஸமர்பயாமி |
 மஹாலக்ஷ்ம்யை நம​:, ஆப⁴ரணம்ʼ ஸமர்பயாமி |

ரோஹிண்யை நம​:, க³ந்தா⁴ன் தா⁴ரயாமி, க³ந்தோ⁴பரி ஹரித்³ராகுங்குமம்ʼ ஸமர்பயாமி |
ஶ்ருʼங்கி³ண்யை நம​:, அக்ஷதான் ஸமர்பயாமி |

புஷ்பை​: பூஜயாமி |
காமதே⁴னவே நம​:, பயஸ்வின்யை நம​:, ஹவ்ய கவ்ய ப²லப்ரதா³யை நம​:, வ்ருʼஷபத்ன்யை நம​:, ஸௌரபே⁴ய்யை நம​:, மஹாலக்ஷ்ம்யை நம​:, ரோஹிண்யை நம​:, ஶ்ருʼங்கி³ண்யை நம​:, க்ஷீர தா⁴ரிண்யை நம​:, காம்போ³ஜ ஜனகாயை நம​:, ப³ப்⁴லு ஜனகாயை நம​:, யவன ஜனகாயை நம​:, மாஹேய்யை நம​:, நைஶிக்யை நம​:, ஶப⁴லாயை நம​:, நானாவித⁴ பத்ர புஷ்பாணி ஸமர்பயாமி |

த³ஶாங்க³ம்ʼ கு³க்³கு³லூபேதம்ʼ ஸுக³ந்த⁴ம்ʼ ஸுமனோஹரம் |
 தூ⁴பம்ʼ தா³ஸ்யாமி தே³வேஶி வ்ருʼஷ பத்ன்யை நமோஸ்து தே ||
இந்த்³ராய நம​:, இந்த்³ராண்யை நம​:, தூ⁴பம்ʼ ஆக்⁴ராபயாமி |

ஸாஜ்யம்ʼ த்ரிவர்திஸம்ʼயுக்தம்ʼ வஹ்னினா யோஜிதம்ʼ மயா |
  க்³ருʼஹாண மங்க³லம்ʼ தீ³பம்ʼ த்ரைலோக்யதிமிராபஹம் ||
ஜயந்தஜனகாய நம​:, காம்போ³ஜஜனிகாயை நம​:, தீ³பம்ʼ த³ர்ஶயாமி |

தி³வ்யான்னம்ʼ பாயஸாதீ³னி ஶாகஸூபயுதானி ச |
  ஷட்³ரஸாதீ³னி மாஹேயி காமதே⁴னோ நமோஸ்து தே ||
மஹேந்த்³ராய நம​:, மாஹேய்யை நம​:, தி³வ்யான்னம்ʼ க்⁴ருʼத கு³ட³ பாயஸம்ʼ நாரிகேலக²ண்ட³த்³வயம்ʼ  கத³லீ ப²லம்ʼ ஶாக ஸூப ஸஹிதம்ʼ  ஸர்வம்ʼ மஹா
நைவேத்³யம்ʼ நிவேத³யாமி |  நிவேத³னோத்தரம் ஆசமனீயம்ʼ ஸமர்பயாமி |

ஏலா லவங்க³ கர்பூர நாக³வல்லீ த³லைர்யுதம் |
  பூகீ ³ப²ல ஸமாயுக்தம்ʼ தாம்பூ³லம்ʼ  ப்ரதிக்³ருʼஹ்யதாம் ||
காஶ்யபேயாய நம​:, ஸௌரப்⁴யை நம​:, கர்பூர தாம்பூ³லம்ʼ ஸமர்பயாமி |

நீராஜனம்ʼ க்³ருʼஹாணேத³ம்ʼ கர்பூரை​: கலிதம்ʼ மயா |
  காமதே⁴னுஸமுத்³பூ⁴தே ஸர்வாபீ⁴ஷ்டப²லப்ரதே³ ||
ஹரயே நம​:, மஹாலக்ஷ்ம்யை நம​:, கர்பூரனீராஜனம்ʼ ஸமர்பயாமி |

இந்த்³ராய நம​:, வ்ருʼஷபத்ன்யை நம​:, வேதோ³க்தமந்த்ரபுஷ்பம்ʼ ஸமர்பயாமி

யானி கானி ச பாபானி ஜன்மாந்தரக்ருʼதானி ச |
  தானி தானி வினஶ்யந்தி ப்ரத³க்ஷிணபதே³ பதே³ ||
ப்ரக்ருʼஷ்டபாபனாஶாய ப்ரக்ருʼஷ்டப²லஸித்³த⁴யே |
 ப்ரத³க்ஷிணம்ʼ கரோமி த்வாம்ʼ ப்ரஸீத³ க்ஷீரதா⁴ரிணி ||
ஜயந்தஜனகோ தே³வ ஸஹஸ்ராக்ஷ: புரந்த³ர: |
  புலோமஜாபதிர் ஜிஷ்ணு: தஸ்மை நித்யம்ʼ நமோ நம​: ||
இந்த்³ராணீபதயே நம​:, வ்ருʼஷபத்ன்யை நம​:, அனந்த கோடி நமஸ்காரான் ஸமர்பயாமி ||

ச²த்ர சாமராதி³ ஸமஸ்த ராஜோபசாரான் ஸமர்பயாமி ||

யஸ்ய ஸ்ம்ருʼத்யா ச நாமோக்த்யா தப: பூஜா க்ரியாதி³ஷு |
ந்யூனம்ʼ ஸம்பூர்ணதாம் ஏதி ஸத்³யோ வந்தே³ தமச்யுதம் ||
மந்த்ரஹீனம்ʼ  க்ரியாஹீனம்ʼ  ப⁴க்தி ஹீனம் ʼ ஶசீபதே |
  யத் பூஜிதம்ʼ மயா ப⁴க்த்யா பரிபூர்ணம்ʼ தத³ஸ்து தே ||

மயா க்ருʼதயா பூஜயா ப⁴க³வான் ஸர்வாத்மக​: ப்ரீயதாம் ஓம்ʼ தத் ஸத்³ ப்³ரஹ்மார்பணமஸ்து |

Wednesday, January 13, 2016

நான் யார்? - 9



குதிரை மாதிரி தாவுதுன்னு நல்லாச்சொன்னீங்க! அது மட்டுமா? முடிவே இல்லாம கடல் அலை போல எண்ணங்கள் வந்துகிட்டேதானே இருக்கு? அது எப்ப ஓயறது; எப்ப மனசு ஏகாக்கிரதையை அடையறது? எண்ணமே வராம இருக்கறதை அப்பறமா பாத்துக்கலாம்!

நம்மோட உண்மை சொரூபத்தை பாத்து அதுல லயம் ஆக ஆக நினைவுகள் எல்லாம் நீங்க ஆரம்பிச்சுடும்.

13. விஷயவாசனை (நினைவு)கள் அளவற்றனவாய்க் கடலில் அலைபோலத் தோன்றுகின்றனவே; அவைகளெல்லாம் எப்போது நீங்கும்?
சொரூபத் தியானம் கிளம்பக் கிளம்ப நினைவு களெல்லாம் அழிந்துவிடும்.

அது சரி! எவ்ளோ வருஷமா இந்த எண்ணங்கள் எல்லாம் இருக்கு! ஒண்ணே திருப்பித்திருப்பி வேற வரது…. என்னை ஏமாத்தினவனைப் பத்தி, அடிச்சவங்களைப்பத்தி, திட்டினவங்களை பத்தி…. இதெல்லாம் கொஞ்சமா நஞ்சமா? அதோட இந்த ஜன்மத்துலதான் இதுன்னா இன்னும் ஏகப்பட்ட முன் ஜன்மங்களில எத்தனை விஷயங்களில ஈடு பட்டு வாசனை எல்லாம் சம்பாதிச்சு இருக்கேனோ! இதெல்லாம் ஒடுங்கிப்போய் சொரூபத்திலேயே இருக்கிறதுன்னா சாத்தியமா என்ன?
அப்படி சந்தேகம் எல்லாம் வரக்கூடாது! வெளியுலகத்தில நமக்கு ஏதாவது வேணும்ன்னா எவ்வளோ சிரமப்பட்டு சம்பாதிக்கிறோம். ஒரு சின்ன வேலை நடக்கணும்; அதுக்காக நடையா நடக்கிறோம். உழைக்கிறோம். என்னென்னவோ த்யாகம் எல்லாம் செய்து அதை அடைய தயாரா இருக்கோம். ஆனா சும்மா இரு ந்னு சொன்னா அதுக்கு ஏன் இவ்வளோ ஆட்சேபணை எல்லாம் வரது? சந்தேகமே இல்லாம விடாப்பிடியா சொரூபத்யானத்தை கடை பிடிக்கணும்.

உம்… நான் எவ்வளோ பாபங்கள் செஞ்சு இருக்கேன் தெரியுமா?

அதெல்லாம் ஒரு பக்கம் கிடக்கட்டும்! பாப புண்ணியங்கள் செஞ்சது எல்லாம் கடந்த காலம். பாபியோ புண்ணியம் செஞ்சவனோ, யாரா இருந்தாலும் அதையே நினைச்சு வருத்தப்பட்டுக்கொண்டு இருக்காம மேலே நடக்க வேண்டியதை பார்க்கலாம். ஊக்கத்தோட சொரூப த்யானம் செய்யறதுதான் செய்ய வேண்டிய ஒரே விஷயம்.
மனசு என்கிறது ஒண்ணுதான். நல்ல மனசு கெட்ட மனசுன்னு ரெண்டு மனசு இல்லை. அந்த மனசு எது கூட நிற்கிறது என்கிறதை பொருத்து நல்லது கெட்டதாகிறது. நம்மோட வாசனைகள் -பழக்க வழக்கங்கள் - நல்லதா இருந்தா அது நல்ல மனசு; கெட்டதா இருந்தா கெட்ட மனசு.
நம்ம மனசை கவனிச்சு சரி பண்ணவே நமக்கு முடியலை. இதுல எதுக்கு அனாவசியமா மத்தவங்க காரியத்திலேயும் லோக விஷயங்களிலேயும் மனசை அலைய விடணும்? லோகத்தோட விஷயத்தை லோகமே பாத்துக்கட்டும். மத்தவங்க அவங்கவங்க விஷயத்தை பாத்துக்கட்டும். அவங்க நல்லவங்களா கெட்டவங்களான்னு நமக்கு எதுக்கு சிந்தனை? எவ்வளோதான் கெட்டவங்களா இருந்தாலும் அவங்ககிட்ட ஒரு வெறுப்பு வைக்கக்கூடாது. விருப்போ, வெறுப்போ அது தேவையில்லாத இன்னொரு சம்பந்தத்தை ஏற்படுத்துது இல்லையா? இப்படிப்பட்ட பற்றை விடணும்.

யார் யாருக்கு எதை கொடுத்தாலும் அது தனக்கேதான் கொடுக்கப்படுது. தன்னை விட அந்நியமா வேற யாரும் இல்லையே?
ம்ம்ம் இன்னொரு விஷயம் நினைவுக்கு வரது. யாகம் முடிந்து தக்‌ஷிணை கொடுக்கற சமயத்துல சொல்லற மந்திரம். யாகம் செய்தவர் அதோட பலன் தனக்கு வரணும்ன்னு தக்‌ஷிணை கொடுக்கறாராம். செய்து வைத்தவர் ’ரைட்டு; அதுக்கு பதிலா பணம் வரட்டும்’ ன்னு வாங்கிக்கறாராம்! எப்படியோ எதை கொடுத்து வாங்கினாலும் ஒவ்வொத்தருக்குமே ஒவ்வொண்ணு கிடக்கறது. இது புரிஞ்சா யாரும் கொடுக்க மாட்டேன்னு சொல்ல மாட்டாங்க.
நான் என்னுது ந்னு ஒரு நினைவு எழுந்தாத்தான் உலகமே எழுகிறது; இது அடங்கினா எல்லாமே அடங்கறது! எவ்வளவுக்கு எவ்வளோ நாம அடங்கி தாழ்ந்து போகிறோமோ அவ்வளவுக்கு அவ்வளோ நல்லது. அப்படி இருந்தா எங்கே இருந்தா என்ன? அது ஃபைவ் ஸ்டார் ஹோட்டலோ, குச்சு வீடு, குடிசையோ எதானாலும் பிரச்சினை இல்லை! வெள்ளத்துக்கு நடுவிலே இருக்கோமோ நல்ல வெய்யிலோ ஒரு பொருட்டு இல்லை. எங்கே இருந்தாலும் நலமாவே இருப்போம்.

14. தொன்றுதொட்டு வருகின்ற சகல விஷய வாசனைகளும் ஒடுங்கி, சொரூபமாத்திரமாய் இருக்க முடியுமா?
'முடியுமா, முடியாதா?' வென்கிற சந்தேக நினைவுக்குமிடங் கொடாமல், சொரூபத் தியானத்தை விடாப் பிடியாய்ப்பிடிக்க வேண்டும். ஒருவன் எவ்வளவு பாபியா யிருந்தாலும், 'நான் பாபியா யிருக்கிறேனே! எப்படிக் கடைத்தேறப் போகிறேன்?' என்றேங்கி அழுது கொண்டிராமல், தான் பாபி என்னுமெண்ணத்தையு மறவே யொழித்து சொரூபத் தியானத்திலூக்க முள்ளவனாக விருந்தால் அவன் நிச்சயமாயுருப்படுவான். நல்ல மனமென்றும் கெட்ட மனமென்று மிரண்டு மனங்க ளில்லை; மன மொன்றே. வாசனைகளே சுப மென்றும், அசுப மென்று மிரண்டு விதம். மனம் சுப வாசனை வயத்தாய் நிற்கும்போது நல்ல மனமென்றும், அசுப வாசனை வயத்தாய் நிற்கும் போது கெட்டமன மென்றும் சொல்லப்படும். பிரபஞ்ச விஷயங்களிலும் பிறர் காரியங்களிலும் மனதை விடக்கூடாது. பிறர் எவ்வளவு கெட்டவர்களாயிருந்தாலும், அவர்களிடத்தில் துவேஷம் வைக்கலாகாது. விருப்பு, வெறுப்பு இரண்டும் வெறுக்கத்தக்கன. பிறருக் கொருவன் கொடுப்ப தெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்ளுகிறான். இவ்வுண்மையை அறிந்தால் எவன்தான் கொடா தொழிவான்? தானெழுந்தால் சகலமும் எழும்; தானடங்கினால் சகலமு மடங்கும். எவ்வளவுக்கெவ்வளவு தாழ்ந்து நடக்கிறோமோ, அவ்வளவுக் கவ்வளவு நன்மையுண்டு. மனத்தை யடக்கிக் கொண்டிருந்தால் எங்கேயிருந்தாலு மிருக்கலாம்.

Tuesday, January 12, 2016

கிறுக்கல்கள் = 78


ஒரு நாத்திகன் சண்டை போடுவது என்ற முடிவோடு மாஸ்டரிடம் வந்தார். ”ஏதாவது ஒரு.. ஒரே ஒரு பிரயோசனம் ஆன்மீகத்தால வாழ்க்கையில உண்டா சொல்லுங்க!”

மாஸ்டர் சொன்னார், “இதோ ஒண்ணு! யாரேனும் உன் மனசை புண் படுத்த நினைத்தால் அவை பாதிக்காத உயரத்துக்கு நீ உன் மனதை உயர்த்திக்கொள்ளலாம்!”

Saturday, January 9, 2016

கிறுக்கல்கள் -77


மாஸ்டருக்கு ஒருவர் பணிவு என்கிற பெயரில் தன்னைத்தானே தாழ்த்திச் சொல்லிக் கொள்ளுவதில் உடன்பாடில்லை. அது போலி என்பார். இந்த கதையையும் சொல்லுவார்.
சர்சில் ஒரு நாள் பாதிரியார் உணர்ச்சி வசப்பட்டு மார்பில் அடித்துக்கொண்டு உரக்கக்கூவி அழுதார். “ஆண்டவரே, நான் கீழிலும் கீழானவன். கடையினும் கடையேன். எனக்கு உங்கள் கருணையை கேட்கக்கூட தகுதி இல்லை. நான் ஒன்றுமே இல்லை. பூஜ்யம். என் மீது இரக்கம் காட்டுங்கள்”
இதை பார்த்துக்கொண்டு இருந்த சர்ச் மணி அடிப்பவனும் உணர்ச்சி வசப்பட்டுவிட்டான். அவனும் முட்டி போட்டுக்கொண்டு மார்பில் அடித்துக்கொண்டு உரக்க கூவ ஆரம்பித்தான். “ ஆண்டவரே! நான் பாவி. சூன்யம். என் மீது இரக்கம் காட்டுங்கள்”

இது காதில் விழுந்ததும் பாதிரியார் திரும்பி முறைத்தார். “ ஹா! தோ பாருய்யா, யார் தாந்தான் சூன்யம்ன்னு கூவறது!”

Thursday, January 7, 2016

கிறுக்கல்கள் -76



குரு சம்ஸ்க்ருத ஸ்லோகங்களை இனிய குரலில் பாடுவதை கேட்ட சம்ஸ்க்ருத ஆசிரியர் புளகாங்கிதமடைந்தார். குருவிடம் சொன்னார்: தெய்வீகத்தை வெளிப்படுத்த சம்ஸ்க்ருதத்தைவிட இன்னும் பொருத்தமான மொழி இல்லை என அறிவேன்.
குரு சொன்னார், “உளராதே! தெய்வீகத்தின் மொழி மௌனம்!”

Tuesday, January 5, 2016

கிறுக்கல்கள் -75


மடாலயத்துக்கு பார்வையாளராக வந்த ஒருவர் மாஸ்டரரைப்பார்த்த போது அவர் ஒளிர்வதாக உணர்ந்தார். அதைப்பார்த்து அவருக்கு வெகு ஆச்சரியம். மாஸ்டரின் பழைய நண்பர் ஒருவரை அவர் சந்தித்தபோது இது பற்றி கேட்டார்.


ம்ம்ம் இப்படிச்சொல்லாம். வாழ்க்கை ஒரு புதிர். இறப்புதான் அதை விடுவிக்கும் சாவி. அந்த சாவியை நீ திருப்பும்போது புதிரில் நீ காணாமல் போய் விடுகிறாய்.”
பார்வையாளர் கேட்டார். ”நாம் அந்த சாவியை திருப்ப இறப்பு வரை காத்திருக்க வேண்டுமா?”
தேவையில்லை. மௌனத்தால் அதை இப்போதே திருப்பலாம். திருப்பி புதிருக்குள் கரைந்துவிடலாம். அப்போது மாஸ்டர் மாதிரி நாமும் ஒளிரலாம்!”
  

Monday, January 4, 2016

நான் யார்? - 8


என்னவோ தியரடிகலா சொல்லறீங்க. எனக்கே அது புரியணும். அது எப்படி நடக்கும்?

சரி, இப்படி வெச்சுக்கலாம். நம்ம உடம்பில ’நான்’ ந்னு ஒண்ணு கிளம்பறது இல்ல? அதுவே மனம். இந்த நான் என்கிற நினைவு எங்கேந்து வருதுன்னு பார்க்கப்பார்க்க அது ஏதோ ஒரு இடம்ன்னு தெரிய வரும். அதுக்கு இதயம் ந்னு பெயர் சொல்லறாங்க. (இல்ல இல்ல, மருத்துவ ரீதியா சொல்கிற இதயம் இல்லை. இது பாப்புலரா புழங்கற இதயம்.) சுய நலம்ன்னு தோணினாக்கூட ’நான் நான்’ ந்னு நினைச்சுக்கொண்டே இருந்தாக்கூட நாளடைவில் இந்த இடத்துக்கு கொண்டு விட்டுடும்.
தூங்கி எழுந்துக்கறோம்; மனசில வர முதல் எண்ணம் என்ன? நான் இருக்கேன்
அப்புறமா கொஞ்சம் மெதுவா நாம எங்க எந்த ஊர்ல இருக்கோம்; இப்ப காலையா மாலையா; அடுத்து இருக்கிற வேலை என்னன்னு நினைவுக்கு வர ஆரம்பிக்கும். அப்பறமாத்தான் இன்னைக்கு ஞாயித்துக்கிழமை, இன்னும் கொஞ்ச நேரம் ஒரு குட்டித்தூக்கம் போடலாம்ன்னு எல்லாம் நினைப்பு வரும்! நான் ந்னு ஒரு எண்ணம் வந்த பிறகுதான் கிட்டே இருக்கிற அடுத்த மனுஷரோ தூரத்தில இருக்கிறவங்களோ நினைவுக்கு வர ஆரம்பிப்பாங்க. இப்படி நான் ந்னு ஒண்ணு இல்லாம முன்னிலை, படர்க்கை எல்லாம் இல்லை. தூக்கத்திலன்னு இல்லாம விழிப்பில கூட இப்படி நான் ந்னு ஒண்ணு இல்லாம போனால் அப்ப நமக்கும் மற்றவற்றுக்கும் ஒரு வித்தியாசமும் தெரியாது.

9. மனதின் சொரூபத்தை விசாரித்தறியும் மார்க்கம் என்ன?
இந்த தேகத்தில் நான் என்று கிளம்புவ தெதுவோ அஃதே மனமாம். நான் என்கிற நினைவு தேகத்தில் முதலில் எந்தவிடத்திற் றோன்றுகிற தென்று விசாரித்தால், ஹ்ருதயத்திலென்று தெரிய வரும். அதுவே மனதின் பிறப்பிடம். நான், நான் என்று கருதிக் கொண்டிருந்தாலும்கூட அவ்விடத்திற்கொண்டுபோய் விட்டுவிடும். மனதில் தோன்றும் நினைவுகளெல்லாவற்றிற்கும் நான் என்னும் நினைவே முதல் நினைவு. இது எழுந்த பிறகே ஏனைய நினைவுகள் எழுகின்றன. தன்மை தோன்றிய பிறகே, முன்னிலை, படர்க்கைகள் தோன்றுகின்றன; தன்மை யின்றி முன்னிலை படர்க்கைக ளிரா.



Saturday, January 2, 2016

கிறுக்கல்கள் -74



மாஸ்டர் முன்னெடுத்து செய்த நிகழ்ச்சி பெரும் வெற்றியுடன் முடிந்தது. அடுத்த நாள் நண்பரொருவர் மாஸ்டரை பார்க்கச்சென்றார். மாஸ்டர் கத்தியால் புல் வெட்டிக்கொண்டு இருந்தார்.

நீங்க முன்னெடுத்து செய்கிற நிகழ்ச்சி எல்லாம் பிரமாதமாக நடப்பதை எப்படி பாக்கறீங்க?

மாஸ்டர் அமைதியாக கேட்டார், “இந்த புல் தரை அருமையாக அமைந்தால் அது இந்த கத்திக்கு பெருமையா?”

Friday, January 1, 2016

நான் யார்? - 7


அந்த லோகங்களை நீங்க சொல்லற மாதிரி பாம்பில்லை; கயிறுன்னு உண்மையா தெரிஞ்சுக்கறது எப்போ?
இப்ப லோகத்தை நாம் பார்க்கிறது நம்மோட மனசாலத்தான்னு சொன்னோமில்லையா? அந்த மனசால இல்லாம ”பார்க்க”த்தெரியும்போது அது நடக்கும்!

  1. திருசியமாகிய ஜகத் எப்போது நீங்கும்? சர்வ அறிவிற்கும் சர்வ தொழிலுக்கும் காரணமாகிய மனம் அடங்கினால் ஜகம் மறையும்.

மனசாலத்தான் பார்க்கிறோம்ன்னா அந்த மனசோட சுய ரூபம் என்ன?
ஆத்மா ஆத்மான்னு சொல்லறாங்களே அதில இருக்கிற ஒரு அதிசயமான சக்திதான் மனசு என்கிறது. நாம் விழிப்போட இருக்கோம்; கனவு காண்கிறோம் என்றால் அதை மனசே தோற்றுவிக்கிறது. நாம இதைப்பார்க்கிறோம் அதைப்பார்க்கிறோம்ன்னா அப்படி மனசு நினைக்கிறது. அதாவது அதை மனசே தோற்றுவிக்கிறது. இந்த மனசு என்ன? நினைவுகள்தான். நினைப்புகள் இல்லைன்னா மனசும் இல்லை.
இந்த ஐம்பொறிகள் வழியா மனசு வெளியே பார்க்கிறது. இதோ இந்த ரோஜாப்பூ இளம் சிவப்பா இருக்கு. நல்ல வாசனையோட இருக்கு. ரொம்ப மிருதுவா இருக்கு. ஊஊஊ! கூட முள்ளும் இருக்கு. ரொம்ப அழகா இருக்கு - இந்த ரீதியில மனசு அதைப்பத்தி நினைக்க நினைக்க அதை நாம பார்க்கிறோம். ரொம்ப பிஸியா இருக்கோம். வேகமா அந்த ரோஜாச்செடியை தாண்டி போறோம். அதை பார்க்கக்கூட இல்லை! அப்ப நம்மைப் பொறுத்த வரை அது இல்லை. ஏம்பா வந்த வழில ஒரு ரோஜாச்செடி இருந்ததாப்பான்னு கேட்டா இல்லையேன்னு சொல்லுவோம்!
ஒரு வேளை அரை குறையா அதை பார்த்து இருந்தா, ஆமா இருந்தது போல இருக்கு. “அதுல பூ இருந்ததா?” “ஆமாம், பூ இருந்தாப்போலத்தான் இருக்கு!” அது என்ன கலர்? “ ம்ம்ம் நினைவில்லையே!” “வாடி இருந்ததா ப்ரெஷ்ஷா இருந்ததா?” “தெரியலையே!”

ஆக மனசே அதன் புலன்கள் வழியாக பார்த்து ஒரு பொருளை விரிக்கிறது. அதைப்பத்திய நினைவுகள் அதிகமாக ஆக அது இன்னும் விரிகிறது.
விழிப்பு நிலையிலும் கனவு உறக்கத்திலும் மனசு இருக்கு. நினைவுகள் இருக்கு. (கனவு நினைவில இல்லையேன்னா, அது அப்ப கொஞ்சமே கொஞ்சம் நேரம் இருந்தது. அப்புறம் மறந்து போனோம்.)

விரிக்கிற இந்த மனசு சுருங்கி தன் இடத்துக்கு போயே ஆகணும். ஒத்தர் தண்ணி இல்லாம சாப்பாடு இல்லாம கொஞ்ச நாள் இருந்துடலாம். ஆனா தூக்கம் இல்லாம இருக்கறது ரொம்ப கஷ்டம். முழிச்சுக்கொண்டே இருக்கணும்ன்னு நினைச்சுக்கொண்டே அப்படியே தூங்கிடுவோம். ஆழ் தூக்கத்தில இருந்து விட்டு விழிக்கிறப்ப அப்பாடா! ஒண்ணுமே தெரியலை என்போம். ஆமாம், தூங்கறவனைப்பொறுத்த மட்டில் உலகம் இல்லாமல் போகிறது!
இந்த மனசு கொஞ்சம்…. கொஞ்சம் என்ன? நிறையவே விசித்திரமானது! என்ன நினைச்சுகிட்டு இருக்கோம்ன்னு கொஞ்சம் கவனியுங்க! டக்குன்னு நினைப்பு காணாமப்போகும். ஆனா கவனம் சிதறிய மாத்திரத்தில் அது திருப்பி முளைக்கும்! சாதாரணமா பயிற்சி இல்லாம இப்படி சில நொடிகளுக்கு மேல கவனத்தை மனசு மேல வைத்திருக்க முடியாது. பழகப்பழக இந்த சக்தி அதிகரிக்கும்.
என்ன இப்படி காணாமப்போகிறது? ஏன்னா மனசு ஏதோ ஒரு பருப்பொருளை - ஸ்தூலமான பொருளை பிடிச்சுகிட்டுத்தான் நிக்கும். தனியா நிக்க முடியாது.
இபடி மனசு காணாமப்போகும் போது மீதியா இருக்கறதே ‘தான்’’ என்கிற ஆத்ம சொரூபம்.
இந்த மனசைத்தான் சூக்‌ஷ்ம சரீரம்ன்னோ அல்லது ஜீவன்னோ சொல்கிறாங்க.

  1. மனதின் சொரூபமென்ன?
    மனம் என்பது ஆத்ம சொரூபத்தில் உள்ள ஒரு அதிசய சக்தி. அது சகல நிலைகளையும் தோற்றுவிக்கிறது. நினைவுகளை எல்லாம் நீக்கிப்பார்க்கின்ற பொழுது தனியாய் மனமென்று ஒரு பொருளில்லை; ஆகையால் நினைவே மனதின் சொரூபம். நினைவுகளைத் தவிர்த்து ஜகமென்றோர் பொருள் அன்னியமாயில்லை. தூக்கத்தில நினைவுகளுமில்லை; ஜகமும் இல்லை. ஜாக்ர சொப்னங்களில் நினைவுகளுள; ஜகமும் உண்டு. சிலந்திப்பூச்சி எப்படி தனிடமிருந்து வெளியில் நூலை நூற்று மறுபடியும் தன்னுள் இழுத்துக்கொள்கிறதோ அப்படியே மனமும் தன்னிடத்தில் இருந்து ஜகத்தை தோற்றுவித்து மறுபடியும் தன்னிடமே ஒடுக்கிக்கொள்ளுகிறது. மனம் ஆன்ம சொரூபத்தினின்று வெளிப்படும்போது ஜகம் தோன்றும். ஆகையால் ஜகம் தோன்றும்போது சொரூபம் தோன்றாது. சொரூபம் தோன்றும் (பிரகாசிக்கும்) போது ஜகம் தோன்றாது. மனத்தின் சொரூபத்தை விசாரித்துக்கொண்டே போனால் மனம் தானாய் முடியும். தான் என்பது ஆத்ம சொரூபமே. மனம் எப்போதும் ஒரு ஸ்தூலத்தை அனுசரித்தே நிற்கும்; தனியாய் நிற்காது. மனமே சூக்‌ஷ்ம சரீரம் என்றும் ஜீவன் என்றும் சொல்லப்படுகிறது.