”ஒரு
முட்டாள் மட்டுமே சத்தியத்துக்காக
எல்லாத்தையும் விட்டுக்கொடுக்க
தயங்குவான்”என்றார் மாஸ்டர்.
வழக்கம்போல்
ஒரு கதை சொன்னார்.
ஒரு
சின்ன நாட்டில் நிலத்தடியில்
எண்ணை இருப்பது கண்டு
பிடிக்கப்பட்டது. எண்ணை
கம்பெனி ஏராளமான பணம் கொடுத்து
அந்த இடத்தில் இருந்தவர்களிடம்
நிலத்தை வாங்கத்தொடங்கியது.
எல்லாருக்கும்
நல்ல விலை கிடைத்ததால்
விற்றுவிட்டார்கள்.
ஒரு கிழவி
மட்டும் தன் தோட்டத்தை விற்க
மறுத்தாள். கம்பனி
மெதுவாக தரத்தயாராக இருந்த
விலையை ஏறிக்கொண்டே போயிற்று.
கிழவி அசைந்து
கொடுக்கவில்லை. ஒரு
நண்பர் அதிர்ச்சி அடைந்து
அவளிடம் போய் ஏன் என்று
கேட்டார்.
“இது
கூடவா உனக்குத்தெரியலை?
அந்த
தோட்டத்திலேந்து வர வருமானத்துலதான்
என் ஜீவனமே நடக்குது!
அது வித்துட்டா
நான் வருமானத்துக்கு என்ன
பண்ணுவேன்?”
No comments:
Post a Comment