Pages

Saturday, January 9, 2016

கிறுக்கல்கள் -77


மாஸ்டருக்கு ஒருவர் பணிவு என்கிற பெயரில் தன்னைத்தானே தாழ்த்திச் சொல்லிக் கொள்ளுவதில் உடன்பாடில்லை. அது போலி என்பார். இந்த கதையையும் சொல்லுவார்.
சர்சில் ஒரு நாள் பாதிரியார் உணர்ச்சி வசப்பட்டு மார்பில் அடித்துக்கொண்டு உரக்கக்கூவி அழுதார். “ஆண்டவரே, நான் கீழிலும் கீழானவன். கடையினும் கடையேன். எனக்கு உங்கள் கருணையை கேட்கக்கூட தகுதி இல்லை. நான் ஒன்றுமே இல்லை. பூஜ்யம். என் மீது இரக்கம் காட்டுங்கள்”
இதை பார்த்துக்கொண்டு இருந்த சர்ச் மணி அடிப்பவனும் உணர்ச்சி வசப்பட்டுவிட்டான். அவனும் முட்டி போட்டுக்கொண்டு மார்பில் அடித்துக்கொண்டு உரக்க கூவ ஆரம்பித்தான். “ ஆண்டவரே! நான் பாவி. சூன்யம். என் மீது இரக்கம் காட்டுங்கள்”

இது காதில் விழுந்ததும் பாதிரியார் திரும்பி முறைத்தார். “ ஹா! தோ பாருய்யா, யார் தாந்தான் சூன்யம்ன்னு கூவறது!”

No comments: