Pages

Thursday, January 28, 2016

கிறுக்கல்கள் - 84


மாஸ்டரின் நண்பர் ஒருவர் சீனாவுக்கு போயிருந்தார், ஒரு படகில் இருந்த போது சற்று தூரத்தில் தொபால் என்று சத்தம் கேட்டது. பார்த்தால் ஒரு ஆசாமி தண்ணிரில் விழுந்துவிட்டிருந்தார். படகுக்காரன் அவருடைய முடியை பிடித்து மேலே தூக்கினான். இருவருக்கும் இடையில் ஏதோ சூடான விவாதம் நடந்தது. பின் படகுக்காரர் ஆசாமியை தண்ணீரில் முக்கினார். மேலே வந்த பிறகு திருப்பியும் விவாதம் தொடர்ந்தது.

நண்பருக்கு ஒன்றும் புரியவில்லை. தன் படகுக்காரனை பார்த்து என்ன நடக்கிறது என்று கேட்டார்.
ஒண்ணுமில்லை. படகுக்காரர் ஆசாமியை காப்பாத்த 60 யுவான் பணம் கேக்கறார். இவரோ 40 தான் தருவேன்னு சொல்லறார். பேரம் நடக்குது!”

இதை கேட்டு எல்லோரும் சிரித்தார்கள்.
பின்னர் மாஸ்டர் கேட்டார், “ இங்கே யாரும் இருக்கிற தன் ஒரே வாழ்கையைப்பற்றி பேரம் பேசாமல் இருக்கிறீர்களா?”
பலத்த மௌனம் நிலவியது.

No comments: