ஒரு
யாத்ரிகர் குழுவினர் தம் பயணத்திட்டத்தில் மாஸ்டரை
சந்திப்பதை சேர்த்துக்கொண்டனர்.
மாஸ்டர் முன் வந்து சேர்ந்த பிறகு
தங்களுக்கு ஏதேனும் சொல்லுமாறு
கேட்டுக்கொண்டனர்.
மாஸ்டருக்கு
அவர்களை பார்த்த மாத்திரத்திலேயே
அவர்களுக்கு ஆன்மீக நாட்டம்
ஒன்றுமில்லை; மாஸ்டரை
தரிசிப்பது ஃபேஷன் ஆகிவிட்டதால்
அங்கு வந்திருக்கிறார்கள்
என்று புரிந்துவிட்டது.
சிரித்துக்கொண்டே
அவர்களை பார்த்துச்சொன்னார்:
நீங்கள்
ஆன்மீகவாதிகள் இல்லை என்பதை
முதலில் உணருங்கள்.
மூக்கில்
குத்தப்பட்டதைபோல உணர்ந்த
அவர்கள் விளக்குமாறு கேட்டார்கள்.
மாஸ்டர்
வழக்கம்போல் கதை சொன்னார்:
ஒரு முயலும்
சிங்கமும் ஒரு வெஜிடேரியன்
ஓட்டலுக்குள் நுழைந்தன.
எல்லாரும்
திகைத்துபோய் பார்த்துக்கொண்டு
இருந்தார்கள். சர்வரிடம்
முயல் சொன்னது, “ ஒரு
ப்ளேட் காரட். கூட
ஒண்ணும் வேணாம்.”
ஒரு
வழியாக சுதாரித்துக்கொண்ட
சர்வர் கேட்டார் “உங்க
நண்பருக்கு? என்ன
கொண்டு வரட்டும்”
”ஒண்ணும்
வேணாம்.”
“ம்ம்ம்
இந்த சிங்கத்துக்கு பசி
இல்லையா?”
சர்வரை
பார்த்து முறைத்துக்கொண்டு
முயல் கேட்டது “சிங்கமா?
இது சிங்கமா
இருந்தா வெஜிடேரியன் ஹோட்டல்ல
என செஞ்சுகிட்டு இருக்கு?
இது சும்மா
ஒரு போலி!”
No comments:
Post a Comment