ஏசு
தன் சீடர்களிடம் பெற்றோரை
வெறுக்கச்சொல்லி இருக்கிறாரே
என்று சிலர் மாஸ்டரிடம்
கேட்பார்கள். மாஸ்டர்
சிரித்துக்கொண்டே சொல்லுவார்:
பெற்றோரைப்போல
பெரிய எதிரிகள் கிடையாது.
ஒரு முறை
சூப்பர் மார்கெட் போயிருந்தேன்.
ஒரு பெண்மணி
இரண்டு சிறு குழந்தைகளை
தள்ளுவண்டியில் வைத்து
தள்ளிக்கொண்டு வந்தார்.
”அட!
அழகான
குழந்தைகள். என்ன
வயசாச்சு?” என்றேன்.
பதில்
வந்தது: “டாக்டருக்கு
மூணு வயசு; வக்கீலுக்கு
ரெண்டு வயசு!”
No comments:
Post a Comment