மாஸ்டர்
சொன்னார்: மற்றவர்களை
மாற்ற நீ முயற்சிக்கும் முன்
இதை உன்னையே கேட்டுக்கொள்.
இந்த மாற்றத்தால்
எது திருப்தி அடையப்போகிறது?
என் ஆணவமா?
என் சந்தோஷமா
அல்லது என் லாபமா?
பின்
வழக்கம்போல் கதை சொன்னார்.
ஒரு
இளைஞன் பாலத்தில் இருந்து
குதித்து உயிரை விட பாலத்தின்
கட்டுச்சுவர் மீது ஏறி நின்றான்.
ஒரு போலீஸ்காரர்
அங்கே ஓடி வந்தார்.
“ஏன்பா!
உனக்கு என்ன
வயசாச்சு. வாழ்கையை
வாழ ஆரம்பிக்கவே இல்லை;
அதுக்குள்ள
உசிரை விடறேங்கறியே?”
”எனக்கு
வாழ்கை வெறுத்துபோச்சு!”
“தயவு
செய்து நான் சொல்லறதை கேளு!
நீ இப்ப
தண்ணிக்குள்ள குதிச்சா நான்
உன்னை காப்பாத்த பின்னாலேயே
குதிக்க வேண்டி இருக்கும்.
இப்பவே தண்ணி
பாதி உறைஞ்சு போச்சு.
நானோ டபிள்
நிமோனியாவில படுத்து எழுந்து
இப்பத்தான் ட்யூட்டி ல சேந்தேன்.
என்ன ஆகும்ன்னு
புரியுது இல்லையா? இந்த
நிலையில் நான் உறைஞ்சு போன
ஆத்தில குதிச்சா செத்துப்போயிடுவேன்.
என் மனைவியும்
நாலு குழந்தைகளும் என்ன
செய்வாங்க?இது
வாழ்நாள் பூரா உன் மனசை
உறுத்தணுமா? வேணாமில்ல?
அதனால் நா
சொல்லறத கேளு. இப்ப
சமத்தா கீழ இறங்கு.
வீட்டுக்குப்போ.
அங்கே தனியா
நிம்மதியா தூக்கு மாட்டிண்டு
செத்துப்போ!”
No comments:
Post a Comment