தன்னலமில்லாத
அன்புன்னு ஒண்ணு இருக்கா
என்று யாரோ கேட்டார்கள்.
மாஸ்டர் கதை
சொன்னார்:
மிஸ்டர்
டூகுட் கொஞ்சம் பதை பதைப்புடன்
நின்று கொண்டிருந்தார்.
பதிவு செய்யும்
தேவதை அவருடைய பதிவேட்டை
முழுக்க பார்த்துவிட்டு தலை
நிமிர்ந்தது. “இது
ரொம்பவே டூ மச். ஒரு
சின்ன தப்பு கூட பண்ணாம வாழ்ந்து
இருக்கீங்க. ஒரு
சின்ன சபலத்துக்கும் ஆளாகலை.
செஞ்சது
எல்லாம் சேவையாவே செஞ்சு
இருக்கீங்க. ம்ம்ம்ம்
உங்களை எப்படி சொர்க்கத்துக்குள்ள
அனுமதிக்கறதுன்னுதான் புரியலை.
நீங்களோ
தேவதை இல்லை. மனுஷன்னா
சபலப்பட்டு ஒரு சின்ன தப்பு
கூட செய்யலை. ம்ம்ம்ம்…
சரி உங்களை உலகத்துக்கே
திருப்பி அனுப்பறோம்.
காலை பொழுது
புலரும் முன்ன ஒரு சின்ன
தப்பாவது செஞ்சுட்டு வாங்க!”
அடுத்த
கணம் பண்பாளர் டூகுட் தன்
தெருவில் நின்று கொண்டு
இருந்தார். இரவு
நேரம். என்ன செய்வது, எங்கே
போவது? இந்த
வழியே ‘அந்த’ மாதிரி பெண்கள்
வருவார்களே என்று பார்த்தால்
நேரமாகிவிட்டது போலும்;
யாரையும்
காணவில்லை. ஒரு
மணி நேரம் சென்றது… இரண்டு….
மூன்று.
அப்போது ஒரு
பெண் வந்து கண் சிமிட்டினாள்.
வயதானவள்;
அழகாக இல்லை.
அதனாலென்ன?
தப்பு செய்ய
யாரோ அகப்பட்டார்களே!
அவளுடன்
போய் இரவை கழித்தார்.
பொழுது
புலரும் வேளை. அவசரமாக
டூகுட் உடையை தரித்துக்கொண்டு
இருந்தார். அப்போது
அந்த பெண்மணி குரல் கொடுத்தார்.
ஆண் துணை
கிடைத்து எவ்வளோ நாளாச்சு!
மிஸ்டர்
டூகுட்! நீங்க
செஞ்சு இருக்கற சேவை மகத்தானது!
No comments:
Post a Comment