வெகு
காலத்துக்கு முன் மஹா கணபதி
மந்திர உபதேசம் பெற்றேன்.
அப்போது
த்யான ஸ்லோகத்தில் உள்ளபடியான
மஹா கணபதியின் படம் கிடைத்தால்
த்யானத்துக்கு சௌகரியமாக
இருக்கும் என்று நினைத்தேன்.
பலரிடம்
விசாரித்தும் கிடைக்கவில்லை.
அப்போது
வலை வீசி தேடியும் கிடைக்கவில்லை!
பிறகு
சிலரிடம் த்யான ஸ்லோகத்தின்
பொருளை கேட்டுத்தெரிந்து
கொண்டேன்.
கணபதியைச்சுற்றி
லக்ஷ்மி-
விஷ்ணு,
சிவன்
-பார்வதி,
மன்மதன்
- ரதி.
வராஹர்-
பூமா தேவி
என்று தேவதைகள் சூழ்ந்து
இருப்பதாக சொன்னார்கள்.
இப்படி
ஒரு படம் இருந்தால் நன்றாக
இருக்கும்.
ஆனால்
இல்லையே?
வரையச்சொன்னால்
என்ன? என்று
தோன்றியது.
நண்பர்
ஒருவர் இந்த மாதிரி சமாசாரங்களில்
வல்லவர். அவரை
போனில் கூப்பிட்டு விஷயத்தை
சொன்னேன். ஆஹா
செய்து விடலாமே என்றார்.
சில
நாட்களிலேயே தகுந்த ஓவியர்
என ஒருவரை தேர்ந்தெடுத்து
வேலையை ஒப்படைத்தார்.
என்ன
செலவாகும்,
அட்வான்ஸ்
என்ன தரலாம் என்று கேட்டபோது
சுமார் ஐந்தாயிரம் ஆகும்;
அட்வான்ஸ்
இப்ப ஒண்ணும் வேணாம் என்று
சொல்லிவிட்டார்.
சில
நாட்கள் கழிந்தன.
நாள்
வாரமாகியது;
வாரங்கள்
மாதங்கள் ஆகின.
என்ன
ப்ராக்ரஸ் என்று கேட்டுக்கொண்டே
இருந்தேன்.
பின்னர்
ஒரு வழியாக லைன் ட்ராய்ங்
போட்டார்.
அழகாக
வந்து இருக்கிறது என்று நண்பர்
சொன்னார்.
இந்த
வேலையை துவங்கிய வேளை ஓவியருக்கு
வேலைகள் குவியலாயின.
ஒரு கோவிலில்
பல ஓவியங்கள் வரைய சிங்கப்பூரில்
இருந்து அழைப்பு வந்தது;
போய்
விட்டார்.
எப்போதடா
வருவார் என்று காத்து இருக்க
வேண்டியதாயிற்று.
ஒவ்வொரு
பிள்ளையார் சதுர்த்தி முன்பும்
விசாரிப்பதும் முடியும்
அறிகுறியே இல்லை என்று தெரிய
வருவதுமாக போய்க்கொண்டு
இருந்தது.
இப்படியே
வருஷம் ஒன்று,
இரண்டு…
இல்லை எட்டு வருஷங்கள் கழிந்தன!
ஓவியர்
மிகவும் நல்ல ஸ்திதிக்கு
போய்விட்டார்;
ஆனால்
வேலை? ஒரு
வருஷம் முன் திட்டம் கொஞ்சம்
உயிர் பெற்றது.
தீபாவளிக்கு
முன் ஓவியர் இந்த படத்தை தூசு
தட்டி எடுத்து மேலே கொஞ்சம்
வேலை செய்தார்.
ப்ராக்ரஸை
பார்த்த நண்பருக்கு கோபமே
வந்துவிட்டது,
சரியான
வர்ணம் பூசவில்லை.
சின்ன
சண்டையே வந்துவிட்டது
போலிருக்கிறது.
போதும்
நீ வேலை செய்தது என்று
திட்டிவிட்டு வந்துவிட்டார்.
பிறகு
பிரபல ஓவியர் ஒருவரை பிடித்தார்.
ஒரு
மாதத்தில் கிடைத்துவிடும்
என்றார். என்ன
ஆயிற்று என்றே தெரியவில்லை;
வேலையை
வேறு ஒருவரிடம் ஒப்படைத்தார்,
நண்பர்
திருவிடை மருதூரில் தேர்கள்
திருப்பணி செய்து கொண்டு
இருந்தார்.
ஸ்வாமி
தயானந்தர் மறைவுக்கு பின்
திருப்பணியில் கொஞ்சம் தொய்வு
ஏற்பட்டு இருந்தது.
கடைசியாக
சண்டிகேஸ்வரர் தேரும் பிள்ளையார்
தேரும் மட்டுமே பாக்கி இருந்தது.
முடியுமா,
எப்போது
முடியும் என்ற விசாரம் இருந்த
நிலையில் இந்த வேலை புதியதாக
ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
சரியான
காலம் வந்து விட்டது போலும்.
தேர்
திருப்பணி ரெகார்ட் ப்ரேக்கிங்
வேகத்தில் நடந்து முடிதது.
ஓவிய
வேலையும் அதே காலகட்டத்தில்
நடை பெற்று பூர்த்தி ஆயிற்று!
தேரோட்டங்கள்
முடிந்த கொஞ்ச நாளிலேயே
படத்தையும் துல்லியமாக போட்டோ
எடுத்து அதை சிடியிலும்
பதித்து கொண்டு வந்து
கொடுத்துவிட்டார்!
எல்லாம்
சரி; அந்த
படம் எங்கேப்பா?
No comments:
Post a Comment