சில
சீடர்கள் கடும் முயற்சி
எடுத்தால் உலகில் செய்ய
முடியாதது எதுவுமே இல்லை
என்பார்கள். மாஸ்டர்
சொல்லுவார்: உலகில்
இருக்கும் அருமையான விஷயங்களை
முயற்சியால் சாதிக்க முடியாது!
உன்
முயற்சியால் உணவை வாயில்
போட்டுக்கொள்ளலாம்;
ஆனால் பசியை
உன்னால் முயன்றும் உருவாக்க
முடியாது.
நீ
முயன்று ஒரு நல்ல படுக்கையில்
படுக்கலாம்; ஆனால்
தூக்கத்தை உன்னால் முயற்சி
மூலம் அடைய இயலாது.
நீ
யாரையாவது பாராட்டலாம்;
ஆனால் ஒருவரை
வியப்புடன் போற்றுதல்
முயற்சியால் வராது.
நீ
முயன்று ஒரு ரகசியத்தைச்
சொல்லலாம்; ஆனால்
நம்பிக்கையை உன்னால் முயன்று
பெற முடியாது.
நீ
முயன்று சேவை செய்யலாம்;
ஆனால் அன்பு
காட்டுதல் உன் முயற்சியால்
வராது!
No comments:
Post a Comment