மாஸ்டரை
நவீன விஞ்ஞான நுட்பங்கள்
கவர்ந்தாலும் அவை முன்னேற்றம்
என்று சொல்லக்கூடியவை இல்லை
என்பார்.
அவருக்கு
உண்மையாக முன்னேற்றம்
இதயத்தினுடையது,
மகிழ்ச்சியினுடையது;
கருவிகளுடையதோ
மூளையுடையதோ இல்லை.
ஒரு
முறை நிருபர் ஒருவர் அவரிடம்
நீங்கள் நவீன கலாசாரத்தைப்பற்றி
என்ன நினைக்கிறீர்கள் என்றூ
கேட்டார்.
மாஸ்டர்
சொன்னார்: ”அது
நல்ல ஐடியா!”
No comments:
Post a Comment