விருந்தினர்
ஒருவர் தன் நாட்டில் நடக்கும்
கலாசார விஞ்ஞான பொருளாதார
முன்னேற்றங்கள் குறித்து
பெருமையாக பேசினார்.
மாஸ்டர்
கேட்டார்: சரி
இவை எல்லாம் உங்கள் நாட்டினர்
மனதில் ஏதாவது முன்னேற்றத்தை
உண்டாக்கி இருக்கிறதா?
வழக்கம்போல்
கதை சொன்னார்:
ஒரு
முறை ஒரு வெள்ளைக்காரர்
ஆப்பிரிக்காவில் இருண்ட
பகுதிக்குள் சென்று
மாட்டிக்கொண்டார். சிறை
பிடித்தவர்கள் மனிதர்கள்
கொன்று உண்ணும் பழக்கமுடையவர்கள்.
வெள்ளைக்காரரை
கொல்லும் முன் தங்கள் தலைவனிடம்
கொண்டு நிறுத்தினார்கள்.
அவர் தன்னுடன்
துல்லியமான ஹார்வேர்ட்
உச்சரிப்புடன் ஆங்கிலம்
பேசுவதைக்கேட்டு வெள்ளைக்காரர்
வியப்பின் எல்லைக்கே போய்
விட்டார்.
”ஆமாம்
ஹார்வேர்டில் படித்த பிறகு
நீங்கள் எதுவும் கற்றுக்கொள்ளவில்லையா?”
”கற்றுக்கொள்ளாமல்
என்ன? உன்னை
கொன்று சமைத்த பிறகு நாங்கள்
பொருத்தமான உடை அணிந்து கொண்டே
சாப்பிட உட்காருவோம்!”
No comments:
Post a Comment