சாது
ஒருவர் புத்தரை கேட்டார்.
'நேர்மையானவர்களின்
ஆன்மாக்கள் இறப்பை தாண்டி
ஜீவித்து இருக்குமா?'
வழக்கம்
போல புத்தர் மௌனமாக இருந்துவிட்டார்.
ஆனால்
அந்த சாது விடவில்லை.
தினசரி அந்த
கேள்வியை கேட்டு தொணப்பிக்கொண்டே
இருந்தார். புத்தரும்
மௌனமாகவே இருந்து கொண்டிருந்தார்.
ஒரு நாள்
சாது கடைசி அம்பை எய்தார்.
புத்தர் தன்
மகா முக்கியமான கேள்விக்கு
பதில் கொடுக்காவிட்டால் தான்
வெளியேறிவிடுவதாக சொன்னார்.
நேர்மையானவர்களின்
ஆன்மாவும் உடலுடன் அழிந்து
போகும் என்றால் எதற்காக
சன்னியாசம் கொண்டு ஒரு வாழ்கையை
வாழ வேண்டும்?
பின்
புத்தர் பரம கருணையுடன்
சொன்னார்: 'நீ
கேட்பது ஒரு கதையை நினைவு
படுத்துகிறது. ஒருவர்
மீது யாரோ விஷம் தோய்த்த அம்பை
எய்துவிட்டர்கள்.
சாகக்கிடந்தவரை
உறவினர்கள் வைத்தியரிடம்
துக்கிக்கொண்டு ஓடினார்கள்.
ஆனால் இவர்
அம்பை எடுத்து மருந்து வைத்து
கட்ட அனுமதிக்கவில்லை.
தன் மூன்று
கேள்விகளுக்கு பதில்
தெரிந்தால்தான் அனுமதிப்பேன்
என்றார். ஒன்று,
அம்பை எய்தவன்
கருப்பா வெள்ளையா? இரண்டு
அவன் உயரமா அல்லது குட்டையா?
மூன்றாவது
அவன் உயர் சாதியா தாழ்ந்த
சாதியா?'
சாது
அன்றிலிருந்து அந்த கேள்வி
கேட்பதை விட்டுவிட்டார்.
புத்தருடனேயே
இருந்தார்.
No comments:
Post a Comment